எது சத்தியம் ?
எது நிரந்தர சத்தியம் ?
எது நிகழ்கால சத்தியம் ?
எது நிகழ்கால அசத்தியம் ?
எது கடமை ?
எதை இப்பொழுது செய்ய வேண்டும் ?
எதை இப்பொழுது செய்யக் கூடாது ?
பெற்றோர் கூற்று முதலாவது சத்தியம்
நண்பர்களின் கூற்று இரண்டாவது சத்தியம்
சமுதாயக் கூற்று மூன்றாவது சத்தியம்
நம் ஆன்மாவின் கூற்று நான்காவது சத்தியம்.
உடல் இச்சை முதலாவது
மனதின் அவா இரண்டாவது
அறிவின் கூற்று மூன்றாவது
சம்பிரதாயங்கள் சொல்வதின் கூற்று நான்காவது
பூசாரியின் கூற்று ஐந்தாவது
ஆன்மாவின் கூற்று ஆறாவது.
எல்லாம் குழப்பமே
எல்லாம் அலங்கோலமே
எல்லாம் விஷமத்தன்மையே
எல்லாம் விஷத்தன்மையே
அனைத்தும் துடுப்பில்லாத படகே
எல்லாம் காற்றில் இட்ட விளக்கு
தியானம் என்பதே கடமை
தியானம் ஒன்றையே கடைப்பிடிக்க வேண்டும்
எல்லா சத்தியங்களுக்கும் தியானமே விளக்கமளிக்கும்
எல்லா கடமைகளுக்கும் தியானமே விளக்கமளிக்கும்
குழந்தை பருவத்திலேயே தியானத்தைப் போதிக்க வேண்டும்
குழந்தைப் பருவத்திலேயே அனுதினமும் தியானத்தைப் பயிற்சி செய்விக்க வேண்டும்
குழந்தைப் பருவத்திலேயே ஆன்ம தத்துவத்தைப் போதிக்க வேண்டும்
“ மூன்றாம் கண் ” விழிப்படையத் துணை செய்ய வேண்டும் !
Recent Comments