Select Page

“ யோகீ பவார்ஜுன ”

அர்ஜுனா நீ யோகியாகிவிடு

“நீ ஒப்பற்ற மாவீரன்… ஆனால் யோகியாகவில்லை… ஆகவே அழுகின்றாய்”

“உண்மையில் யாரும் அழத் தேவையில்லை”

“இருப்பவரைப் பற்றியும், இறந்தவரைப் பற்றியும் துக்கப்படத் தேவையில்லை”

“இருப்பவர் இறப்பதும், இறந்தவர் பிறப்பதும் சித்தம்”

 

“நீ ஆன்மா. இந்த உடல் அல்ல”

“ஆன்மாவே நிரந்தரம், உடல் அழியும், திரும்பவும் மறுஉருவம் எடுக்கும்”

“சம்சாரத்திலும், சமூகத்திலும் உன் கடமையைச் செய்”

“சாட்சியாக இரு, பலனை எதிர்பாராதே, கர்ம யோகியாய் இரு”

“எச்சூழ்நிலையிலும் வெற்றி, தோல்வி கருதாது நடுநிலையாக இரு”

தியான சாதனைச் செய்து தியான யோகி ஆகு

 

“நான், எனது என்ற பாவனையற்ற பக்தி யோகியாய் இரு

“க்ஷேத்திரம் என்ற சரீரத்தில் ஆன்மா இருக்கிறது”

“என்ற உண்மையை அறிபவனே ஞானி”

“நாம் இன்த சரீரம் அல்ல, நாம் ஆன்மா”

என்பதை ஒரு நொடி கூட மறக்கக்கூடாது

இவ்விதம் கிருஷ்ணர் அர்ஜுனருக்கு உபதேசம் செய்தார்

 

சத்தியம் எப்பொழுதும் எந்நேரத்திலும் ஒன்றே

க்ருத யுகம், திரேதாயுகம், துவாபரயுகம்

கலியுகம் எல்லா யுகங்களிலும்

சத்தியத்தின் வழி ஒன்றே

 

பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நோக்கமும் ஒன்றுதான்

அது தியான யோகி ஆவது

சம்சாரத்தில் இருந்து கொண்டே தியானப் பயிற்சி செய்வோம்

சம்சாரத்தில் இருந்துகொண்டே நடுநிலையைக் கடைப்பிடிப்போம்

தியான நிலையில் இருந்துகொண்டே எப்பொழுதும்

நம் கடமையைச் செய்து தர்மத்தை நிலைநாட்டுவோம்

தபஸ்விப்யோ திகோ யோகீ ஞாநிப்யோபி மதோதிக:

கர்மிப்யச் சாதிகோ யோகீ தஸ்மாத் யோகீ பவார்ஜுன

பகவத்கீதை 6:46