Select Page

சைவ உணவே சரியான உணவு

 

  ஆன்மிக வாழ்விற்கு சைவ உணவு மிகவும் அவசியம். உண்மையில், ஆன்மிகமும், சைவ உணவும் ஒன்றோடு ஒன்று பொருந்துபவை. ஒவ்வொருவரும் சைவ உணவாளியாக மாறவேண்டும். Quantum Vibrational Science, புலால் உணவு மனித உடலில் ஏற்படுத்தும் கேடான விளைவுகளை, கண்டறிந்து வருகிறது. எல்லா மதங்களின் முதன்மை சூத்திரம், ‘ அன்பு ’. சக விலங்கு-ஜீவிகளிடம் கருணைக் காட்டுவதே, அன்பெனப்படும். விலங்குகள் மனித இனத்திற்கு உணவன்று.

  மேலும், நாம் அளவுக்கு மீறி சாப்பிடக்கூடாது. பேராசைக்கு இனங்கி சாப்பிடாமல், நம் தேவைக்கு ஏற்ப சாப்பிட வேண்டும். பசியிருந்தால், உண்ணலாம். பசி இல்லாமல் ஒருபோதும் உண்ணக்கூடாது.

பிரம்மர்ஷி பத்ரிஜி

என்னுடைய ஒரே ஒரு விருப்பம்

 

என்னுடைய அன்பார்ந்த நண்பர்களே !

என்னுடைய ஒரே ஒரு விருப்பம்

என்னுடைய ஒரே ஒரு பணி

என்னுடைய ஒரே ஒரு நோக்கம்

என்னுடைய ஒரே ஒரு கனவு

யாதெனின், மேலும் படிக்க

“ ஆன்மிகத் திறப்பிற்கு சாத்வீக உணவு ”

 

  ஒரு மனிதனைச் சுய பரிசோதனை செய்து கொள்ளும் விதமாக உதவி செய்வதில் பெரும்பங்கு வகிப்பவையும் அவனது நன்னடத்தைக்குப் பெருமளவு உதவுபவையும், மனதின் தூய தன்மைக்குத் தூண்டுதலாக இருந்து அவனை நல்மனிதனாக… சாதுவாக இருக்கச் செய்வதும் இவையே. உணவுக் கட்டுப்பாடு, சாத்வீக உணவில் ஈடுபாடு, அளவான உணவு, இவையே. ஆக உணவே ஒரு மனிதனின் குணங்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.

  மனது விலக வேண்டும் – எண்ணங்களில் இருந்து மனம் விலக வேண்டும். உணவைப் பற்றி வலுக்கட்டாயமாய் மனதைத் திருப்புதல் நல்லது செய்யாது. மனதை அது மேலும் பலவீனமாக்கும். உணவாசையிலிருந்து தப்ப முதலில் உணவுக் கட்டுப்பாட்டை மெல்ல, மெல்ல உணவு விருப்பத்திலிருந்து விடுபடும்.

  • உணவும், உறக்கமும் மிகையாக இருக்கக்கூடாது.
  • உணவு மனதைப் பாதிக்கிறது. எந்த வகை யோகாப்பியாசத்திற்கும் சைவ உணவே சிறந்தது. சைவ உணவு மனதைச் சாந்திப்படுத்தி நம்மைச் சாத்வீக மனிதனாக்கும், தூய்மையாக்கும், ஒன்றுபடுத்தும்.
  • உணவின் தரமும் மனதைப் பாதிக்கும். நாம் எடுத்துக் கொள்ளும் உணவின் தன்மையது தான் நமது மனமும் அதன் எண்ணங்களும்.
  • அஹிம்சையும் – வன்முறையற்றதும் யோகிகளின் நடத்தைக் கோட்பாடுகள் ஆகும். எனவே சாத்வீக உணவு உண்ணுங்கள். அளவில் கவனமாக இருங்கள்.

 – ரமண மகரிஷி


“ புலான் மறுத்தல் ”

 

” தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் 
எங்ஙனம் ஆளும் அருள் “

தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?

” தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் 
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில் “

புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.

” உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் 
புண்ணது உணர்வார்ப் பெறின். “

புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்.

– திருவள்ளுவர்

திருக்குறளில், ‘ புலான்  மறுத்தல் ’ என்னும் அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது )


  அசைவம் உண்கிறவர்கள், அதனால் உண்டாகும் வலிகளிலிருந்துத் தப்புவதில்லை. அதுமட்டுமல்ல, அவர்கள் உண்ட ‘ மிருகங்களின் ’ குண இயல்புகளையும் அவைகளின் சுபாவம், அவை கொல்லப்படும் இடத்தின் பயங்கரமான சூழ்நிலை, அவை கொல்லப்படுவதற்காக கொண்டு வரப்படும் சந்தோஷமற்ற சூழ்நிலைகளின் பரிணாமம் இவையனைத்தும் அந்த உணவில் படியும் ! அதை உண்கிறவர்களுக்கு, அவைகளுக்கு ஏற்பட்ட பயம், கஷ்டம் எல்லாம் உண்டாகும். மனிதன் தன் பசி தீர்க்க, பசியுடன் அலையும் மிருகங்களை உண்பது எவ்வளவு தீங்கானது ?

விலங்கை வதைப்பது, அவற்றின் சதையை உண்பது, அனைத்தும் மனிதாபிமானமற்ற, முன்னேற்றத்தைக் குறைக்கும், மனித வளர்ச்சிக்கு தடை போடும் செயல்கள் ஆகும்.

– அன்னி பெசண்ட்


“ சைவ உணவு உலகத்தின் மூலமே விஸ்வம் மேன்மை அடையும் ”

 

  இயற்கையோடு சமமாக வளர்ந்து, புனிதமான நிலையை அடைய வேண்டுமெனில், உணவு விஷயத்தில் மிகவும் கவனம் தேவை. நம்மைப்போல் சந்தோஷமாக வாழ விழையும் மற்ற உயிரினங்களைக் கொன்று அதனுடைய சரீரபாகங்களை உண்பது மிருகத்தனமானது. ஆன்மிகமயமான நம் ஏழு சரீரங்கள், முழுமையான ஒருமைப்பாட்டுடன் இயங்கும் நாம், இவ்வாறான கீழ்தனமான உணவினை உட்கொண்டால், நிகழும் பேரழிவுகள் எண்ணற்றவை.

  இந்த கீழ்தனமான உணவு நம் ஏழு சரீரங்களையும் அசுத்தம் செய்து, பிறவிப்பயனைக்கூட, அறிந்து கொள்ள இயலாமல், பல பாவ கர்மாக்களைச் செய்ய, நம்மைத் தூண்டிவிடும்.ஆதலால், வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் உயர்வானவற்றையே தேர்ந்தெடுக்கும் நாம், உணவு விஷயங்களிலும் கூட சோடைபோகாமல், மிக நல்ல சைவ உணவையே தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது.

  பௌதீக சரீரம் மூலம் நாம் பெறும் உணவு நம்முடைய பிற உன்னத சூட்சும உடல்களின் மீது அதன் வெளிப்பாட்டைக் காட்டும். சாதாரணமாக, சுத்தமாக, சூட்சுமமாய் இருக்கும் நம் சூட்சுமசரீரம் மாமிச உணவு உட்கொள்வதனால் கீழான ’மெடாயன்’ கணங்களுடன் நிரப்பப்பட்டுக் கடினமாகிவிடும். அதனுடைய சக்தியின் கிரகிப்புத் தன்மையுடன் கூட முழுவதுமாகக் குறைவதனால் அவ்வாறான சூட்சும சரீரத்தைப் பெற்றவர்கள், மிகக் கீழான இச்சைகள் மற்றும் ஆவேசத்திற்கு ஆளாக்கப்படுவார்கள்.

சார்லஸ் W. லெட்பீட்டர்


“ மிருகங்கள் நமது சகோதர, சகோதரிகள் ”

  நீ உண்பதற்காக ஒரு விலங்கைக் கொல்கிறாய் என்ற எண்ணமே தவறானதாகும்.

  ‘ விலங்கு ஒன்று கொல்லப்படுகிறது ’ என்ற கருத்திற்காக நான் ஹிம்சையை எதிர்க்கவில்லை. அந்த விலங்கு வாழ வேண்டும் என்ற அவசியம் இருக்கும்போது அது கொல்லப்படக் கூடாது. அவ்விலங்கின் இருப்பு அனாவசியம் என்றால் நீ கொல்லாவிட்டாலும் அது இறந்தே தீரும். ஆக எது இருக்க வேண்டும், எது இறக்க வேண்டும் என்று இயற்கைதான் தீர்மானிக்க வேண்டுமே தவிர நீயோ, நானோ அல்ல.       

  விலங்கில் இருந்து பிறந்தவன்தான் மனிதன் என்று இன்னமும் நம்புகிறோம். அப்படிப் பார்க்கையில் விலங்குகள் நமது சகோதர சகோதரிகள் அன்றோ ? நமது குடும்பத்தைச் சேர்ந்தவைகள் அவைகள். எனவே ஒரு விலங்கைக் கொல்லுதல் என்பது சற்றே வளர்ச்சியுறாத ஒரு மனிதனைக் கொல்வது போலத்தான். எனவே மனிதன் கொல்லப்படுவதும், விலங்கு கொல்லபடுவதும் ஒன்றே ! கொலை கொலைதான் !

  மேற்கண்ட கொலைக்கும், மதத்திற்கும் சம்பந்தமில்லை ! நாகரிகம் சம்பந்தப்பட்டது ! நாகரிகமற்ற மனிதன் ஒருவனுக்கு நன்கு தெரியும்… வாழ்வு எவ்வளவு அழகானது, அற்புதமானது என்று ! நாகரிகமற்று அதைக் கொல்வது எவ்வளவு தீயதென்றும் அவன் அறிவான் ! ஆக மனிதன் தன் இனத்தை நேசிக்கும்போது அவனின் முதிர்வற்ற நிலையில் இருக்கும் விலங்குகளையும் நேசிப்பது சாத்தியமே !

– ஓஷோ


  இறந்து கிடக்கும் ஆடு அல்லது மாடு பிணம்தான் ! அதுவே புலால் வியாபாரியின் கடையில் உணவு என்று விற்கப்படுகிறது ! பிணம் எப்படி உணவாகும் ! அதை உண்பவர்கள் புலால் உண்ணவில்லை ! பிணத்தை உண்கிறார்கள் ! நினைத்துப் பார்த்தால் ’ பிணம் தின்னிகளா நாம் ? ’ புலால் உண்ணும் போது பிணம் மேல் இருக்கும் எண்ணற்ற நோய்கிருமிகளும் நமது உடலில் சேர்கின்றனவே ! இது எவ்வளவு தீங்கானது ?

– டாக்டர். கெல்லாக்ஜான் ஹார்வி


  புலால் சத்தானதும் அல்ல ! நமது முன்னோரின் உணவும் அல்ல ! அது இரண்டாம் தர உணவுதான் ! மண்ணிலிருந்து முளைத்துவரும் “ காய்கனியே ” நமது முதல்தர உணவாகும் ! காய்கனிகளில் காணப்படாத எந்த புரச்சத்தும் புலால் உணவில் இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை.

  ஒரு உயிருக்கு வலி உண்டாக்கிவிட்டு அதிலிருந்து எப்படி மற்றோர் உயிருக்கு இன்பம் ஏற்பட முடியும் ? முரண்பாடாக இல்லையா ? புலால் உணவைத் தின்பவர்கள் எப்படி நல்லொழுக்கம் கொண்டிருக்க முடியும் ? இப்படிப்பட்ட தன்னலப்போக்கு கண்டிக்கப்பட வேண்டியதே ! “

– மில் ஜான்ஸ்டுவார்ட்

மேலும் செய்திகளை அறிய – www.vegetarianismeverywhere.org