Select Page

“ சூட்சுமத்தில் மோட்சம் ”

மனிதன்… ஒன்றல்ல இரண்டு…

அவை ‘தேகம்’, ‘தேஹி’

ஒன்று ‘ஸ்தூலம்’, இரண்டாவது ‘சூட்சுமம்’. ஒன்று கண்களுக்கு ‘புலப்படுவது’, மற்றொன்று கண்களுக்கு ‘புலப்படாதது’..

ஸ்தூலம் இயற்கையானது, ‘சூட்சுமம்’ புருஷமயம். இயற்கை மற்றும், புருஷார்த்தத்தின் சேர்க்கையே ஜீவன்; ஆகையால் ஜீவன் என்பது “த்வைதம்மும்” தான்… “அத்வைத்தம்மும்” தான்!

இதை அறிந்து கொண்டால் ‘ஞானம்’; அறியாமல் இருந்தால் ‘அஞ்ஞானம்’

ஸ்தூலத்தில் ‘காமம், போகம்’ இரண்டும் இருக்கும். சூட்சுமத்தில் ‘மோட்சம்’ இருக்கும்.

ஸ்தூலத்தை மட்டும் பார்த்தால் ‘காமம்’, ‘போகம்’ என்பவை அவ்வப்போது மட்டுமே கிடைக்கும். ஆனால் சூட்சுமத்தை நாம் அறிந்தால் ‘காமம்’, ‘போகம்’ என்பவை நிரந்தரமாகக் கிடைக்கும்.

மோட்சத்தை பெறுபவர்க்கே உண்மையான பூவுலக போகங்கள் பூரணமாகக் கிடைக்கும். ஆகையால் ஜீவனுடைய அனைத்து விசேஷமும் எதில் இருக்கிறது என்றால் ஜீவன் என்பது ‘ஒன்றாக இருக்கும் இரண்டு’, இதை நன்கு அறிய வேண்டும். ஸ்தூல சூட்சுகங்களைப் பற்றி நன்றாக அறிந்துக் கொள்ள வேண்டும்.

இவையாவும் தியானத்தினால் மட்டுமே சாத்தியம்.

தியானம் என்பது ‘ஆனாபானசதியின்’ மூலமே சாத்தியம்.