Select Page

“ ஸ்ரீ குருப்யோ நமஹ: ”

சூரியனைப் போன்றவர் குரு!

சூரியக் கதிர்கள் போன்றவை குருவின் கிருபை!

இன்றைய லகு என்பவர் குருவெனும் சூரியக் கதிர்களில்

மூழ்கித் தளைத்து உருவாகும்… நாளைய குரு.

குருவின் கிருபை பெறுவதற்கு முன் ’லகு’

குருவின் கிருபை பெற்ற பிறகு ’குரு’

நேற்றைய லகுவே இன்றைய குரு

இன்றைய லகுவே நாளைய குரு.

குருவின் நிழலிலிருந்து, குருவின் கிருபையைப் பெறுவதே

ஒரு ’லகு’வின் தலையாய நோக்கம்.

குரங்குக் குட்டி தன் தாயைப் பற்றிக் கொள்வது போல்

தியானக் கல்வியில், சுவாசம் என்பது ’குரு’

சஞ்சல மனமே ’லகு’

தியானத்தில் பெறும் விஸ்வசக்தியின் வியக்கத்தக்க மகிமையே, ’குரு

கிருபை’ யாகும்.

குருவின் கிருபையில் மூழ்கியிருக்கும் பொழுது

சஞ்சலமனமெனும் ’லகு’ ஒரு நிலையில், கூரிய

புத்தியெனும் குருவாக மாறுகிறது.

அன்றைய மனமே, இன்றைய புத்தி

இன்றைய புத்தியே, அன்றைய மனம்

சுவாசம் எனும் ’அந்தரங்க’ குருவிற்கு, கோடானுகோடி வணக்கங்கள்.

ஸ்ரீ குருப்யோ நமஹ: ஸ்ரீ குருப்யோ நமஹ: ஸ்ரீ குருப்யோ நமஹ: