“ சங்கல்ப பலம் ”

பலம் உள்ளவன் பலசாலி

பலம் இல்லாதவன் வலிமையற்றவன்

வலிமையற்றவன் எப்பொழுதும் பலசாலியைப் பின்பற்ற வேண்டும்

’பலம்’ என்பது இரண்டு வகை : ஒன்று ’பசு பலம்’, இரண்டாவது ’சங்கல்ப பலம்’.

’பசு பலம்’ என்பது உணவு மற்றும் உடற்பயிற்சியினால் வருவது

’சங்கல்ப பலம்’ தூய்மையான ஞானத்தினால் வருவது

’பசு பலம்’ என்பது ’சங்கல்ப பலத்திற்குக் கீழ்படிந்தே இருக்கும்’

நாம் எண்ணுவதைச் சாதிக்க வேண்டுமானால் ’சங்கல்ப பலம்’ இருந்தே ஆக வேண்டும்.

’சங்கல்ப பலம்’ முழுமையாக இருக்க வேண்டும் என்றால்

எப்பொழுதும் ’சங்கல்பம்’ என்பது இருக்க வேண்டுமே தவிர, ’விகல்பம்’ என்பது இருக்கக்கூடாது.

’விகல்பம்’ என்றால் ’சந்தேகம்’, ’விகல்பம்’ என்றால் ’தடுமாற்றம்’.

 

நம்முடைய ’சங்கல்ப பலம்’ பெருக வேண்டும் என்றால்,

நம்மைவிட அதிக சங்கல்ப பலம் இருப்பவர்களிடம் பழக வேண்டும்.

நம்முடைய ’சங்கல்ப பலம்’ பெருக வேண்டும் என்றால்,

இதைப்பற்றி நன்றாக ஆராய வேண்டும்;  இதன் தன்மையை அறிய வேண்டும்.

அன்றாட வாழ்வில் சங்கல்பத்துடன் பல ஆராய்ச்சிகள் செய்து,

காரண காரிய சித்தாந்தத்தின் அனுபவத்தைப் பெற வேண்டும்.

சின்னச் சின்ன சோதனைகளில் ஆரம்பித்து,

குறுகிய காலத்தில், மிகப்பெரிய ஆராய்ச்சியில் இறங்க வேண்டும்.

சிரு வயதிலிருந்தே குழந்தைகளுக்குச் சங்கல்ப பலத்தைப் பற்றி எடுத்துக் கூற வேண்டும்.

உடல் உபாதைகள் அனைத்தையும் ’சங்கல்ப பல’ த்தினால் குணமாக்கிக் கொள்ள வேண்டும்.

இல்லற வாழ்வின் இன்னல்களை, ’சங்கல்ப பல’த்துடன் எதிர்கொள்ள வேண்டும்.

முக்தி பாதையில், தடங்களைச் ’சங்கல்ப பல’த்தினால் கடந்து செல்ல வேண்டும்.

“சங்கல்ப பலம் ஜிந்தாபாத்!!”