கேள்வி – பதில்

Patriji-Q&A

கேள்வி: சமுதாயத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் அநியாயங்களை பார்க்கும்பொழுது மிகவும் வருத்தமாக உள்ளது.

பத்ரிஜி : தீயவர்கள் தீய செயல்களைச் சரியாகச் செய்கிறார்கள். ஆனால், நல்லவர்கள் எல்லோரும் என்ன செய்கிறார்கள்? அவர்கள் கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதைத் தவிர இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசெப்பதில்லை. தேவாலயங்களுக்கும், மசூதிகளுக்கும் சென்று பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றுவதில்லை, இது சரியானதல்ல.

எனவே, தீயவர்களின் தீய செயல்கள், நடக்க வேண்டிய அநியாயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நல்லவர்களின் செயலின்மையால் பிரபஞ்சத்தில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் ஏற்படுவதில்லை. ஆகையால் நல்லவர்கள் எல்லோரும் தியானம் செய்து, தம் ஆன்ம சக்தியைப் பெருக்கி, அந்த சக்தியின் அலைகளை பூமியின்மீது பரவச் செய்தால் அது கெட்டவர்களிடமும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.

கெளதம புத்தரின் தியான சக்தியின் அலைகளானது மிகவும் தீயவனான அங்குலிமாலனை மாற்றியதுபோல, பூமியில் வாழும் நிறைய புத்தர்களின் தியான சக்தியின் அலைகள் சமுதாயத்தில் உள்ள தீயசக்திகளை அழிக்க வேண்டும்! ஆகவே, வீணாக வருத்தப்பட்டுக்கொண்டு உட்காராமல் தியான – ஞான பிரச்சாரங்களின் மூலம் மறைந்திருக்கும் புத்தர்களைத் தட்டியெழுப்பி தியான சக்தி அலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

கேள்வி: தியானம் ஏன் சரியாக 40 நாட்கள் செய்ய வேண்டும்?

பத்ரிஜி : 40 நாட்கள் தியானம் என்பது மிக மிக முக்கியம்!

ஒரு கல்லைச் சுத்தியால் வேகமாக அடித்துக் கொண்டிருந்தால், சுமார் ஒரு பத்து பதினைந்து அடிவரை அந்தக் கல்லில் எந்த மாற்றமும் தெரிவதில்லை. ஆனால் அதற்குப் பிறகு விழும் ஒரு அடிக்கே அது இரண்டாக உடைந்து விடுகிறது. ஆனால், அது கடைசியாக விழுந்த அடியின் மகத்துவமில்லை; அதுவரை அது வாங்கிய பதினான்கு அடியின் பலனே!

அப்படித்தான் தியானம்கூட 40 நாட்கள் செய்ய வேண்டுமென்பதும். ஆரம்பத்தில் சில நாட்கள் நமக்கு எதுவும் தெரிவதில்லை. ஆனால், ஒவ்வொரு அடிக்கும் கல்லுக்குள்ளே உள்ள நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் ஏற்படுவதுபோல், ஒவ்வொரு நாள் தியானமும் நமக்குள் உள்ள சக்கரங்களைச் சுற்றிக் கொண்டுள்ள ஜன்மஜன்மங்களின் கர்மபலனைக் குறைத்து நம் நாடிமண்டலத்தைச் சுத்தம் செய்கிறது. விருப்பத்துடன் கூடிய சிரத்தையான தியானப் பயிற்சியினால் கல்லைப் போன்று உடைக்கப்படுவதற்கு முன், மனிதனான அர்ஜுனனைப் போன்று துக்கத்திற்கு ஆளாகிறோம். உடைந்து இரண்டாகப் பிளந்து, உள்ளிருந்து வந்த நாராயணான கிருஷ்ணனைப் போன்று ஆன்மஞானத்துடன் பூத்து, ஒவ்வொரு நிமிடத்தையும் ஆனந்தமாக, மகிழ்ச்சியாகக் கழிக்கின்றோம்! அதற்குமுன் நிறைய சந்தேகங்களுடன் நிறைந்த நாம், 40 நாட்கள் தியான சாதனைக்குப்பின் நமக்கேற்படும் ஒவ்வொரு சந்தேகத்திற்கும் நமக்குள்ளிலிருந்தே விடைகளைப் பெறுகின்றோம்.

கேள்வி: வாழ்வில் எதிர்படும் பிரச்சினைகளைத் தாங்க முடியாமல் நான் அவ்வப்போது அழுதுவிடுவேன். அவ்வப்போது தியானம் செய்து இதுவும் ஒரு பாடமே என்று நினைத்துக் கொள்வேன். இதில் எது சரியானது?

பத்ரிஜி : அழுகையென்பது நமக்கும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் நம் உணர்ச்சிகளைத் தெரியப்படுத்தும் அற்புதமான வழி! அதில் தவறொன்றுமில்லை! ஆனால் நன்றாக அழுதபின், அசையாமல் உட்கார்ந்து தியானம் செய்யுங்கள்!

கேள்வி: கர்மபலத்தியாகம் என்றால் என்ன?

பத்ரிஜி : ’ஆழ்நிலை சக்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்’ எனும் எண்ணமே மிக்பெரிய விஷயம்! ஆனால், ஆழ்நிலை சக்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டுமெனில், முதலில் வெளியில் நடக்கும் அவசியமற்ற விஷயங்களைக் கேட்பதை, பார்ப்பதை, வேசுவதை, சிந்திப்பதை முழுமையாக விட்டுவிட வேண்டும். தேவையற்ற சமயங்களில் வெளியில் செல்வதைத் தவிர்த்து, வெளிவிஷயங்களின் மீதான மோகத்தை விட்டு, சுவாசத்தின் மீது கவனம் வைத்து ஆழ்நிலைக்குச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் நமக்குள்ளிருக்கும் அபாரமான ஆழ்நிலை சக்திகளை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

கேள்வி: மதபேதங்கள் எதனால் ஏற்படுகின்றன?

பத்ரிஜி : ஆத்மஞான குறையுடன் கூடிய முட்டாள்தனத்தினால் மனிதர்களுக்குள் மதபேதம் ஏற்படுகின்றது. நாம் ஒரு ஜன்மத்தில் கிறிஸ்டியனாக, மற்றொரு ஜன்மத்தில் முஸ்லீமாக என்று பல்வேறு ஜன்மங்களில் பலவிதமாகப் பிறக்கின்றோம். ஆனால் பிறந்தபிறகு இந்த ஆத்ம சத்தியத்தை மறந்து நான், ’முஸ்லிம்’, நான் ’கிறிஸ்டியன்’ இல்லையெனில், நான் ’இந்து’ என்ற அஞ்ஞானத்தில் விழுந்து, மதபேதங்களில் கட்டுண்டு இருக்கின்றோம். ஜன்ம பரம்பரையின் மீதும், கர்ம சித்தாந்தத்தின் மீதும் விழிப்புணர்வு பெறவேண்டுமெனில், தவறாமல் தியானம் செய்தே ஆக வேண்டும்!

கேள்வி: இப்பொழுதெல்லாம் எங்கு பார்த்தாலும் புதிது புதிதான ஆன்மிக மன்றங்கள் உருவாகின்றன. இவற்றில் எது எனக்கு சரியானதென்று எப்படி நான் தெரிந்து கொள்வது?

பத்ரிஜி : ஒவ்வொரு விஷயங்களையும் அமைதியாகப் பரிசீலிக்க வேண்டும்; ஆனால் இதற்கு மிகவும் அதிகமான பொறுமை தேவை! கெளதம புத்தர் கூட ஆறு வருடங்கள் மிகப் பொறுமையாக, அமைதியாக அலுத்துக்கொள்ளாமல், ஐநூறு குருமார்களிடம் சிஷ்யராக இருந்தார். அவர்களிடம் தான் கற்றுக்கொண்ட விஷயங்களை நடைமுறைப்படுத்தி, அந்த அனுபவ ஞானத்தைப் பரிசீலித்துத் தனக்கென்று ’ஆனாபானசதி’ வழியைத் தேர்ந்தெடுத்தார். புத்தராக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, தேர்ந்தெடுக்கும் வழிமுறை ஒன்றே!

கேள்வி: கடந்த சில வருடங்களாக ஏதோ இனம் புரியாத பயங்கள் எனக்குள் வளர்ந்து என்னை மிகவும் சித்திரவதை செய்கிறது. அவற்றிலிருந்து விடுதலை பெறுவது எப்படி?

பத்ரிஜி : தியானத்தில் அமர்ந்து கடந்த காலங்களில், உங்களைப் பேச்சின் மூலமாகவோ, செய்கைகளின் மூலமாகவோ வருத்தமடையச் செய்த ஒவ்வொருவரையும் நினைவிற்குக் கொண்டுவந்து எல்லோரையும் பாரபட்சமின்றி மன்னித்துவிடுங்கள்.

அதுபோலவே, நீங்களும் உங்கள் பேச்சினாலோ, செய்கையினாலோ யாரையாவது புண்படுத்தியிருந்தால் அவர்கள் எல்லோரிடமும் மனதார மன்னிப்புக் கோருங்கள். இதன்மூலம் நாளாக நாளாக உங்களுக்குள் ஆழ்மனதின் மூலைமுடிக்குகளில் ஒளிந்திருக்கும் வேதனையான விஷயங்களிலிருந்து விடுதலை பெறுவீர்கள்!

மேலும் மேலும் உங்களுடைய தியான நேரத்தை அதிகப்படுத்திக் கொண்டும், புதுயுக ஆன்மிக புத்தகங்களைப் படித்துக் கொண்டும், அன்றாடம் இதைப் பயிற்சிச் செய்துக் கொண்டு வாருங்கள். பயத்திலிருந்து விடுதலை பெற இதுவே மார்க்கம்.

கேள்வி: தர்மம் எத்தனை வகைப்படும்?

பத்ரிஜி : தர்மம் இரண்டு வகைப்படும்.

1. சுயதர்மம்

2. பரதர்மம்

தியானம் செய்து சுயமாக ஆன்ம சத்தியத்தைத் தெரிந்து கொள்வது ’சுயதர்மம்’. தெரிந்த சத்தியத்தை நடைமுறைப்படுத்தி, ’என்னைச் சுற்றி உள்ள அனைவரும் என்னைப்போன்ற ஆன்மசொரூபங்கள்’ என்று தெரிந்து கொள்வது ’பரதர்மம்’.

கேள்வி: சந்நியாசம் என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்?

பத்ரிஜி : ’சம்யக்’ என்றால் ’சரியான’ என்பதாகும்.

’நியாசம்’ என்றால் துறப்பது.

சம்யக் + நியாசம் = சந்நியாசம்.

சந்நியாசம் என்றால் ’சரியானவற்றைத் துறப்பது’.

சந்நியாசம் நான்கு வகைப்படும்.

1. மர்க்கட (குரங்கு) சந்நியாசம்

சின்னச் சின்னக் காரணங்களுக்காகச் சந்நியாசிகளாக மாறி குடும்ப வாழ்வைத் துறப்பதென்பது ’மர்க்கட சந்நியாசம்’. இது ’சூத்ர சந்நியாசம்’. இவர்கள் சில நாட்களிலேயே குடும்ப வாழ்வில் சிக்கிக் கொள்வார்கள்.

2. ஆபத் சந்நியாசம்

இப்பொழுதோ அல்லது இன்னும் சிலமணி நேரங்களிலோ மரணிக்கப் போகிறோம் என்பதைத் தெரிந்து, ’சுவர்க்கத்தில் இடம்பிடிக்க வேண்டும்’ எனும் ஆசையுடன் சந்நியாசம் ஏற்பது ’ஆபத் சந்நியாசம்’. இது ’வைஸ்ய சந்நியாசம்’.

3. விவிதிச சந்நியாசம்

சத்தியத்தைத் தெரிந்துகொள்ளும் தீவிர ஆர்வமுடனும், ஞான திருஷ்டியுடனும், தனக்கிருப்பவைகள் ஒவ்வொன்றையும் அறுத்தெறிந்து ஏற்றுக்கொள்ளும் சந்நியாசம் விவிதிச சந்நியாசம். பெரும் அறிவாளியான விவேகானந்தர் இதற்கு ஒர் உதாரணம். இது ’சத்திரிய சந்நியாசம்’.

4. வித்வத் சந்நியாசம்

சந்நியாசத்திற்கெல்லாம் மிக உயர்ந்த நிலையான ஆன்ம நிலையைச் சேர்ந்தது வித்வத் சந்நியாசம்! பிரம்ம ஞானிகளான வித்வத் சந்நியாசிகள் தம்முடைய குடும்ப வாழ்வைத் துறக்காமல், குடும்பத்தின் மீதான தன்னுடைய அஞ்ஞானத்தைத் துறப்பார்கள்!
அவர்கள் தம்முடைய அன்றாட வாழ்வில் அவரிச்யமற்றவைகளைத் துறந்து, அவசியமானவைகளை மட்டுமே செய்து சம்சாரத்தில் இருந்தபடியே ’முக்தி’ எய்துகின்றனர்! இது பிராம்மண சந்நியாசம். இது பிரமிட் ஆசான்களுக்கு சொல்லப்பட்ட சந்நியாசம்!

கேள்வி: தியானம் கற்றுக்கொள்ள ஏதாவது முதலீடு செய்ய வேண்டுமா?

பத்ரிஜி : செய்ய வேண்டும்! ’முதலீடு’ என்றால் ’இன்புட்’. 24 மணி நேரத்தில் சிறிது நேரத்தைத் தனிப்பட்ட முறையில் தியானத்திற்காக முதலீடு செய்ய வேண்டும்! ஒரு வியாபாரத்தில் ’இன்புட்’டைப் பொறுத்தே லாபம் அமையும். நாம் முதலீடு செய்யும் ’நேரம்’ எனும் ’இன்புட்’டைப் பொறுத்தே ’தியான பலன்’ எனும் லாபம் அமையும்.

கேள்வி: சாஸ்திரம் என்றால் என்ன?

பத்ரிஜி : எந்த வேலை செய்தால் எந்தப் பலன் கிடைக்கும், எந்தக் காரணம் பரிணாமமாக் மாறும் என்பதை ஆராய்ந்து அறிவதே ’சாஸ்திரம்’!

கேள்வி: உங்கள் வாழ்க்கையைத் தியானத்திற்காகவே அர்ப்பணித்துவிட்டீர்களா?

பத்ரிஜி : கிரிக்கெட் ஆட்டத்திற்குக்கூட அர்ப்பணித்திருக்கிறேன். முந்தைய நாள் ஆட்டத்தைக்கூடப் பார்த்தேன்! என்னுடைய வாழ்க்கையை டி.வி.யி.ன் எல்லா சேனல்களைப் பார்ப்பதற்காக அர்ப்பணித்திருக்கிறேன்! என்னுடைய வாழ்வை உலக மக்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்ள அர்ப்பணம் செய்திருக்கிறேன்!

கேள்வி: ’வாழ்க்கை’ திருவிழாவாக எப்போது மாறும்?

பத்ரிஜி : தியான – ஞானிகளினால் சிருஷ்டியில் மூல சித்தாந்தங்கள் புரிந்து கொள்ளப்படும் பொழுது, பிரபஞ்சத்திலுள்ள வேறு பல நட்சத்திர உலகங்களுக்கு இடையிலுள்ள சம்பந்தங்களைத் தெரிந்து கொள்ளும்பொழுது, ’ஆத்மஞான ஒளி’யானது நமக்குச் சொந்தமாகிறது. ஆத்மஞான ஒளியைப் பெற்ற நாம், சரியானவைகளைத் தேர்ந்தெடுக்கும் அடிப்படை ஆறிவுடன், நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் ஒரு திருவிழாவாக மாற்றுகிறோம்!

கேள்வி: இப்பொழுதெல்லாம் நிறைய மருத்துவர்கள் தம்முடைய மருந்துச்சீட்டில் மருந்துகளுடன் தியானத்தையும் செய்யச் சொல்லி எழுதுகின்றனரே!

பத்ரிஜி : சத்தியம் வேண்டாமென்று யாரிருப்பார்கள்! அவர் மருத்துவரானாலும் சரி, நோயாளியானாலும் சரி. குதும்பஸ்தனாக இருக்கட்டும், ராஜாவாக இருக்கட்டும், ஏழையாக இருக்கட்டும், பண்டிதனாக இருக்கட்டும், படிக்காதவனாகயிருக்கட்டும், பிரதம மந்திரியாக இருந்தாலும் சரி, குதும்பஸ்தாவாக இருந்தாலும், யாராக இருந்தாலும், சத்தியம் வேண்டும். அமைதியான வாக்கையை விரும்புவர்கள் எல்லோரும் தியானம் செய்தே ஆக வேண்டும்! தியானம் மூலம் ஆரோக்கியம் கைகூடம்! ஆகவே மருத்துவர்கள் கூட மருந்துகளுடன் ’தியானம் செய்யுங்கள்’ என நோயாளிகளிடாம் கூறுவதென்பது ஆரோக்கியமான விஷயம்தானே!

கேள்வி: தியானம் செய்பவர்களுக்குக் குடும்பம் இருக்கலாமா?

பத்ரிஜி : அதாவது, இருக்கக்கூடாது என்பதா உங்கள் உத்தேசம்! யோகீஸ்வரரான கிருஷ்ணருக்கு எட்டு மனைவிகளுடனான பெரிய குடும்பம்! வசிஷ்டர், அருந்ததி போன்றவர்கள் யோகிகளல்லவா? சுக செளக்கிய சம்சார வாழ்வினூடே, ஆன்ம வழியில் முக்தி நிலையை எட்டும் வாழ்க்கைப் பாதையை, வெளிச்சம் போட்டுக் காட்டுவதே “பிரமிட் சித்தாந்தமாகும்!”

கேள்வி: பாவம் செய்பவர்கள் அடுத்த ஜன்மத்தில் புழு பூச்சிகளாகப் பிறப்பார்கள் என்று புராணங்களில் எழுதியிருப்பது நிஜமா?

பத்ரிஜி : அவையனைத்தும் ஆன்மிக வழியில் சிலபேர் எழுதிய குறும்பான எழுத்துக்களே! மானிட ஜன்மத்திற்குப்பின் மானிட ஜன்மங்களே பரம்பரையாக அமையும்! ஒரு மானிட ஜன்மத்தில் கற்றுக்கொள்ளாத பாடங்களை மற்றொரு மானிட ஜன்மத்தில் சரிச்செய்துக்கொண்டே ஆக வேண்டும்! புழு பூச்சிகலாகப் பிறக்கும் மறுபிறவிக்கு மனிதப் பிறவியில் இடம் ஏது?

கேள்வி: சமுதாயத்தில் நமது கடமை என்ன?

பத்ரிஜி : சமுதாயத்தில் அனைவரும் சுகமாக, சந்தோஷமாக மேலும் ஆரோக்கியமாகை இருந்தால்தான் நாம் ஆனந்தமாக இருக்க முடியும்! அதற்காக நம்மிடமுள்ள சகல செல்வங்களிலும் நமக்குத் தேவையான செல்வத்தை மட்டும் செலவு செய்து மற்றவற்றை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும்!

அன்னதானம், வஸ்திரதானம், கல்விதானம் போன்ற தானங்களுடன் ’தியான தானம்’ மற்றும் ’ஞானதானம்’ போன்றவற்றையும் செய்து சமுதாயத்துடன் நட்புறவு கொள்ள வேண்டும்.

கேள்வி: தியானம் சரியாக வருவதற்கு ஏதாவது ’டிப்ஸ்’ இருக்கிறதா?

பத்ரிஜி : இதற்குமுன் பூஜைகளோ, மத சம்மந்தப்பட்ட பண்டிகைகள், சாஸ்திர சம்பிரதாயங்களையோ செய்யாதவருக்கு தியானம் வெகுவிரைவில் வசப்படும்!
ஐம்பது வயதுள்ள புதிய தியான சாதனையாளருக்குத் தன்னுடைய மனதில் பதிந்த முத்திரைகளை அழிப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும்! எந்த முத்திரையும் பதிக்கப்படாத சிறு முழந்தைகள் வெகு சீக்கிரம் எதை வேண்டுமானாலும் கற்றுக் கொள்கின்றனரல்லவா? ஆகவே எண்ணங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு சிறிது நேரம் மானசீகமாக சிறுபிள்ளையாக மாறி சகஜமான நிலையில் தியானத்திற்கு முயற்சிப்பதே சரியான ’டிப்ஸ்’!

கேள்வி: ’படிப்பு’ என்பது வியாபாரமாகிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் உண்மையில் எப்படிப்பட்டப் படிப்பைப் படிக்க வேண்டிம் என்பது புரியவில்லை?

பத்ரிஜி : ’ ப டி ப் பு ’ என்பது ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள விஞ்ஞானம், வினயம், புரிந்து கொள்ளும் தன்மையை வளர்த்து உண்மையான வாழ்க்கை சாஸ்திரத்தைப் போதிக்கிறது. அதனால்தான் இந்த குணங்களைப் பெற்று வாழ்பவர்களே, ’உண்மையானப் படிப்பை படித்தவர்கள்’ என்கின்றனர்!
ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மஹரிஷி, இயேசு கிறிஸ்து, ஷீரடி சாய்பாபா, முகம்மது போன்ற மகான்கள் யாரும் உலகியல் படிப்பைப் பெரிதாக படிக்கவில்லை எனினும், பெரிய படிப்புகளைப் படித்து எண்ணிலடங்கா டிகிரிகளைப் பெயருக்குப்பின் மாட்டிக்கொண்டவர்கள். இவர்களிடம் உண்மையான வாழ்க்கை சாஸ்திரத்தைக் கற்றுக்கொள்ள எல்லோரும் சென்றார்கள்!

கேள்வி: தியானம் செய்தால், நாம் எங்கெங்கோ உள்ள உலகவாசிகளைக் கலந்துகொள்ள முடியுமா? பத்ரிஜி : அழகாகக் கலந்து கொள்ளலாம்! எங்கெங்கோ உள்ள உலகங்களிலிருக்கும் ஆசானகள் நம்மிடம் வரும்பொழுது அவர்களை பார்ப்பதற்கான சக்தியை, அவர்களிடம் பேசுவதற்கான சக்தியை, மேலும் அவர் வழங்கும் அறிவுரைகளை ஏற்கும் சக்தியை, தியானம் மூலம் மட்டுமே நாம் பெற முடியும்!

கேள்வி: சுவாசத்தின் மீதே ஏன் கவனம் வைக்க வேண்டும்?

பத்ரிஜி : சுவாசம் என்பது இப்பொழுது, இக்கணத்திற்குச் சேர்ந்த நிகழ்கால அற்புதம்! அது இறந்த காலத்தைச் சேர்ந்த பெரிய பூதத்திலிருந்து, நாளைய எதிர்கால வாழ்விற்குச் சொந்தமான கற்பனையிலிருந்து, நம்மை முழுமையாக விழிப்புணர்வுடன் கூடிய விடுதலையை அளித்து, நிகழ்கால நொடியின் அற்புத ஆனந்தத்துடன் நம்மை ஒன்றுபட செய்கிறது. அதனால்தான் ’மூச்சின் மீது கவனம்’ வைத்துத் தியானம் செய்யும் ஆன்ம விஞ்ஞானத்தை விரும்புவோர், நிகழ்கால நொடியில் நடக்கும் ஒவ்வொரு அனுபவங்களையும் மிகப்பெரிய ஞானமாக ஏற்று தம்முடைய ஆன்மாவை உயர்த்திக் கொண்டிருக்கின்றனர்!

கேள்வி: உங்களை சந்தித்த ஒவ்வொருவருக்கும் நீங்கள் ஆன்மநண்பனாகத் தெரிகிறீர்கள். எப்படி?

பத்ரிஜி : அது எப்படியென்றால், நான் எல்லோருக்கும் கண்ணாடியைப் போன்று இருக்கின்றேன்! கண்ணாடியானது எப்பொழுதும் தன் முன்னிருப்பவர்களின் நிஜ உருவத்தையே பிரதிபலிக்கும்! பிறகென்ன? ஒவ்வொருவருக்கும் கண்ணாடியில் தம்மைப் பார்ப்பதென்பது மிகவும் பிடித்தமானதல்லவா!
நான்கூட கண்ணாடியைப் போன்று என்னிடம் வருபவர்களின் குணங்களின் அச்சாகப் பிரதிபலிக்கின்றேன்! ஆகவே என்னிடம் வருபவர்கள், தம்மிடம் தாம் அன்பு செலுத்துவதைப் போன்று, கண்ணாடியைப் போன்றிருக்கும் என்னிடமும் அதற்கும் அதிகமாகவே அன்பு செலுத்துகின்றனர்!

கேள்வி: ’கடவுள்’ எங்கிருக்கிறார்?

பத்ரிஜி : ’சர்வம் கல்விதம் பிரம்மா’ என்றால் ’இங்கிருப்பதெல்லாம் தெய்வமே’. ஆகவேதான் நான் என் கண்ணில் காணும் எல்லா ஜீவராசிகளையும் ஆராதிக்கிறேன், மேலும் ஒவ்வொரு தெய்வத்திடமும் பேசிக் கொண்டிருக்கிறேன்; எல்லோரிடமும் கலந்து உறவாடி இருப்பதற்கு ஆர்வம் கொண்டிருக்கிறேன்.

கேள்வி: ’ஆன்மிகம்’ என்றால் என்ன?

பத்ரிஜி : நாம் ’பூரண’ தெய்வத்திடமிருந்து பிரிந்துவந்த அம்சங்களே. நாம் தெய்வத்தால் உருவாகப்பட்ட தெய்வங்கள் என்பதைப் புரிந்து கொள்வதே ஆன்மிகம். இந்த சத்தியத்தைத் தெரிந்து கொள்வதற்காக நம்முடைய வாழ்வில் நாம் செய்ய வேண்டிய மிக முக்கிய வேலை தியானப் பயிற்சி! நீரில் மூழ்குவது ஸ்நானம்; சுவாசத்தில் மூழ்குவது தியானம்; சத்தியத்தில் மூழ்குவது ஞானம்!

கேள்வி: நமக்குள் இருக்கும் சக்தி எத்தனை வகைகளாகப் பிரதிபலிக்கின்றது?

பத்ரிஜி : ’தாம்சீக’, ’ராஜசீக’, ’சாத்வீக’, ’நிர்குண’.
தாம்சீக சக்தியானது பெளதீக உடலுடனும், ராஜசீக சக்தியானது மனத்திற்கும், சாத்வீக சக்தியானது புத்தியுடனும், நிர்குண சக்தியானது ஆன்மாவுடனும் சேர்ந்து பிரதிபலித்துக் கொண்டு இருக்கும்.

கேள்வி: விலங்குகளும் இயற்கைச் சூத்திரங்களுக்கு கட்டுப்பட்டு இருக்கின்றனவா?

பத்ரிஜி : கச்சிதமாக இருக்கின்றன! பசுக்களும், பறவைகளும் கூட இயற்கையின் சூத்திரங்களுக்கு அடிபணிந்து, மிகச் சுலபமாக வாழ்ந்து, ஆனந்தமாக இருக்கின்றன். அதானல்தான் கவலையுடனோ, இறப்பைப் பற்றியோ, துன்பங்களை எண்ணி, எண்ணி, பயந்து, பயந்து, அழும் விலங்குகளையோ, பறவைகளையோ என்றும் நாம் பார்பதில்லை!

கேள்வி: ஞானத்தை எவ்வாறு சேகரிக்க வேண்டும்?

பத்ரிஜி : ஒவ்வொரு பூவுக்குள்ளும் கொஞ்சமாவது மகரந்தம் இருக்கும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் குறைவாகவோ, அதிகமாகவோ, அடிப்படை ஞானம் இயற்கையாகவே இருக்கும். ஆகவே, தும்பியானது ஒவ்வொரு பூவிலும் உள்ள மகரந்தத்தை உறிஞ்சுவதுபோல, ஒவ்வொரு ஞானிகளிடமும் கலந்துரையாடி அவர்களிடமிருந்து ஞானத்தை முறையாகச் சேகரிக்க வேண்டும். அப்படி சேர்ந்த ஞானத்தைத் தன்னுடைய நடைமுறைக்குக் கொண்டுவந்து தன் அனுபவ ஞானத்துடன் வளர்த்து, அவற்றை மேலும் பல பேருக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்; எக்காலத்திலும் ஞானத்தைச் சேகரிக்கும் சூத்திரம் இதுவே.
சிறு துளியே பெருங்கடலாகிறது! சிறு துளி பெருவெள்ளம்!

மக்களுடைய நன்மையை மனதில் கொண்டு ஒரு கேள்வியை குருவிடம் கேட்கிறேன். “இன்றிலிருந்து நான் சைவ உணவை உண்பவனாக, அசைவத்தை மறுத்து வாழ்வேன். ஆனால் மாம்சாகாரத்தையே தம் கொழிலாகத் தேர்ந்தெடுத்து, வருமானத்தை சம்பாதிக்கின்ற கோழி, ஆட்டிறைச்சிக் கடைக்காரர்களைப் பற்றிக்கூட யோசனை செய்ய வேண்டிய தேவையுள்ளது. இது எனக்கே அல்ல, இத்தரம் சந்தேகம் எத்தனையோ பேருக்கு உள்ளது, “செய்வது தவறு” என்று தெரியும், ஆனால் இதிலிருந்து நேர்மறையாக எவ்வாறு வெளிப்படுவது என்பதை விவரிக்குமாறு மிகத் தாழ்மையுடன் குருவிடம் கேட்கிறேன். அவ்விவரத்தைக் கொண்டு அஹிம்சைக் கொள்கையை இன்னும் உறுதியாக உருவாக்கிக் கொள்ளலாம்?”

பத்ரிஜி : மதிப்பிற்குரிய சபை உறுப்பினர் பொறுப்பாகத் தம்முடைய சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவர்கள் இச்சபைக்கு வந்ததற்கான நோக்கம் வெற்றியடைந்துவிட்டது. இங்கே நாம் எல்லோரும் கூடத் தெரிந்து கொள்ள வேண்டிய பரம சத்தியம் என்னவென்றால், மாம்சாகாரத்துடன் கூடிய எந்தவிதமான தொழிலானாலும் உண்மையாகவே அது தர்மமான தொழில் அல்லவே அல்ல. அது “கசாப்புத்தனம்” மட்டுமே. (காட்டுமிராண்டித்தனம்). திருட்டுத் தொழிலை யாராவது ’தொழில்’ என்று சொல்வீர்களா? அதேபோல கசாப்பு வியாபாரம் கூட ’தொழில்’ என்று கருதுவது அஞ்ஞானத்துடன் கூடிய கோரமான தவறு.

“ஸ்ரீ வெங்கடேஸ்வரா வைன்ஷாப்”, “ஸ்ரீ சாய் சிக்கன் சென்டர்”, “ஸ்ரீ கிருஷ்ணா மட்டன் ஷாப்” என்று கடவுள்களின் பெயரை வைத்துக்கூட கசாப்பு வேலைகள் செய்கிறார்கள். பரம பக்தர்களாக வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கோயிலைச் சுற்றி பிரதக்ஷணங்கள் செய்கிறவர்களே, அடுத்தநாள் கிராதகர்களாக அசைவக் கடைகளைச் சுற்றுச் சுற்றிவிட்டு, அசைவ உணவினை உண்கிறார்கள். “நான் தான் ஆன்மா, மற்றும் எல்லாவற்றிலும் என்னைப் போன்ற திவ்யத்துவம் தான் இருக்கின்றது” என்ற வேத சாச்திர பூர்வமான “ஆன்ம சத்தியம்” கூடத்தெரியாமல் இன்னொரு ஜீவனைக் கொலை செய்து சாப்பிடுகிறவன் பரம நாஸ்திகன்.

யாரும் எங்கிருந்தாலும், சத்தியத்தைச் சத்தியமாகவே ஒளிக்காமல் சொல்ல வேண்டும் விஸ்வ திருஷ்டியில் இதற்கு எந்தவிதமான விதிவிலக்குகளும் கிடையாது, அதனால் மாமிசம் உண்பது கண்டிப்பாக மகா பாவம்தான். இந்த மகாபாவத்தில் விலங்குகளைக் கொல்கிறவர், விற்பவர், வாங்குகிறவர், சமைப்பவர், உண்பவர் மற்றும் மற்றவர்களைச் “சாப்பிடு” என்று தூண்டுபவர்கள், இவர்கள் எல்லோரும் கூட விஸ்வ நியாய ஸ்தானத்தில் தண்டனைக்குரியவர்களே.

இதுபோன்ற ஆன்மஞானம் வர வேண்டும் என்றால் நாம் கண்டிப்பாகத் தியானம் செய்ய வேண்டும். தியானம் என்பது நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்கு சாஸ்திரியமாகத் தெரிய வைக்கும். எல்லோரும் தியானத்தினால் ஆன்ம சத்தியத்தைக் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும் மற்றும் “அஹிம்சா தர்மத்தை” இக்கணம் முதல் கடைப்பிடிக்க வேண்டும். இவ்விஷயத்தில் யாருக்கும் விதிவிலக்கு இல்லை. உலகத்தை அஹிம்சை மார்க்கத்தில், சைவ ஆகாரமயமாக மாற்றுகின்ற பணியில், யாராவது தம்முடைய ஜீவன வருமானத்தை இழக்க நேர்ந்தவர்கள் (இவர்கள் கோடிக்கணக்கில் இருந்தாலும்) இன்னிடம் வரட்டும்; நான் அவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் உணவு கொடுக்கிறேன்.

அந்தச் சிறிதளவு உணவுக்காகத்தானே அவர்கள் எல்லோரும் பாவங்களுக்கு அஸ்திவாரமான அசுர தத்துவத்தைப் பழக்க வழக்கமாக்கிக் கொண்டு, தம்மில் உள்ள தெய்வத்துவத்தை மறந்து போகிறார்கள்? அதனால் அனைவரும் தியான மார்க்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. தியானம் ஒருவரை விஞ்ஞானபூர்வமாக வாழ வைக்கும்.

2011 ஆகஸ்ட் 14 ’நலகொண்டா’ மாவட்டம், சுரியாபேட்டை நகரத்தில் அற்புதமான சைவப்பிரியர் ஊர்வலம் மற்றும் தியான போதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த திரு.போணகிரி ஸ்ரீநிவாஸ் முனிசிபல் கமிஷனர் கூறியதாவது: “நான் 18 வருடங்களாக சைவ உணவினராக இருக்கிறேன். ஆனால் அவ்வப்போது அஞ்ஞானத்துடன் முட்டை மட்டும் சாப்பிடுவேன். இங்கு நான் மாற்றலாகிய பின் பிரமிட் மாஸ்ட்ர்களின் நட்பின் மூலமாக முட்டைகூட மாம்சாகாரம்தான், அதனை உண்பது கர்ப்ப சிசுவைக் கொன்று சாப்பிடுவது போல பாவம் என்று தெரிந்து கொண்டு சுத்தமான சைவம் உண்பவராக மாறிவிட்டேன். இப்பட்டிணத்திலுள்ள எல்லா கல்யாண மண்டபங்களிலும் கூட சைவ உணவு விருந்துகளை மட்டுமே அனுமதிக்கும்படியாக மாற்ற வேண்டும் என்பது என்னுடைய சங்கல்பம். இதற்கு நகர பிரமுகர்கள் அனைவரும் ஒத்துழைப்புக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்”.

ஸ்ரீராமரெட்டி, தாமோதர் ரெட்டி, ஆந்திரபிரதேசம் கெளரவ அமைச்சரின் உரை:

“இன்று தியானத்தில் நான் எவ்வளவோ அமைதி வெற்றேன். அரசியல் விஷயமாக தினமும் நான் எத்தனையோ மன, உடல்பூர்வமான அழுத்தங்களைச் சந்தித்துக் கொண்டேயிருப்பேன். இன்று காலை நான் வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது காலை உணவிற்காக மேசைமீது விதவிதமான மாமிச ஆகாரம் தயாராக இருந்தும்கூட அதை எல்லாம் தொடாமல் இந்த ஊர்வலத்தில் பங்கு பெறுவதற்காக் வந்தேன். இந்த விஷயம் எதேச்சையாக ஏற்பட்டது எனக் கூறுவதற்கில்லை என்று எனக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. இது அனைத்துமே ஒரு தெய்வகட்டளை. ஏனென்றால் திரும்பி வந்து சாப்பிடுவோம் என்று நினைத்துக் கிளம்பி வந்துவிட்டேன். கொஞ்ச நேரம் இந்நிகழ்ச்சியில் தலையைக் காட்டிவிட்டுச் செல்வோம் என்று நினைத்து நான், இந்த சுகாதார ஊர்வலத்தில் இறுதிவரை பங்கெடுத்து, குருவின் அருகாமையில் என்னுடைய நேரத்தைக் கழித்தது சாதாரண விஷயம் இல்லை. நான் ஒரு கேள்வியைக் குருவிடம் கேட்கிறேன்” என்று கூறி முன்னர் எழுதப்பட்ட கேள்வியை பத்ரிஜியிடம் கேட்டார்.