பிரமிட் ஆன்மிக மன்ற இயக்க சின்னம்

பிரமிட் ஆன்மிக இயக்க சின்னத்தின் சிறப்பம்சங்கள்

1) முக்கோணம்

2) கிரணங்கள் கொண்ட அரை சூரியன்

3) ஒளிவட்டம், ஆறு சக்கரங்கள், ஊக்குவிக்கப்பட்ட தியானி

4) சக்தி, சைதன்யம் மற்றும் ஞானம் – என்ற வார்த்தைகள்

5) திறந்த புத்தகம்

6) ‘நீயே உனக்கு விளக்காயிரு’ எனும் வாசகங்கள்.

முக்கோணம்

முக்கோணம் நம் ‘பூர்ணாத்மாவை’ குறிக்கின்றது. படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தத்துவங்களை வலியுறுத்துவது, பூர்ணாத்மா. ஆன்மிகத்தின் தலையாய பணியே, சாதாரண ஆத்மாக்களுக்கு, பூர்ணாத்மாவின் சாரத்தை புரியவைப்பதுதான், படைப்பு எனும் பூர்ணாத்மாவின் பாகம்தான், சாராசரி ஆத்மாவக இந்த உலகில் பிறவி எடுக்கின்றது. மனம், குணாதிசயம் என்பதையும் காட்டுகின்றது, ‘பூர்ணாத்மா’. தியானத்தில், பூர்ணாத்மாவை அபார ஒளிகொண்ட ஒரு ‘பிரிஸம்’ போல் காண முடியும். மேலும், முக்கோணம் ‘பிரமிட்’ன் ஒரு பாகத்தைக் காட்டுகின்றது.

கிரணங்கள் கொண்ட அரை சூரியன்

சூரியன், ‘பூர்ணாத்மாவை’ குறிக்கின்றது. சாதாரண ஆன்மாக்கள் சூரியனின் கிரணங்கள் போல்தான். இங்கிருக்கும், ஒவ்வொருவருக்கும், ஒரு பூர்ணாத்மா, மேலுலங்களில் உண்டு. பற்பல உலகங்களிலும் வியாபித்துள்ளவையும் மற்றும் இந்த உலகத்திலும் உள்ள ஆத்மாவின் கூட்டு சேர்க்கை தான் பூர்ணாத்மா.

இந்த உடலில் இருக்கும்போதே, நம்முடைய முழுமைத்தன்மை ஞானத்தை, முடிந்த அளவு அடைவதுதான் நம் பிறப்பின் குறிக்கோள்.

அரைச்சுரியன் குறிப்பிடுவது என்னவென்றால் இந்த பெளதிக உடலில் இருக்கும்போதே ‘பூர்ணாத்மாவின்’ ஞானம் 50 சதவிகிதம்தான், இயற்கையாக நமக்கு கிடைக்கும். மற்ற 50 சதவிகித்தை படித்தறிதல் மூலமோ, ஆழ்நிலை தியானத்தில் ஞானத்தின் வாயிலாகவோதான் தெரிந்து கொள்ள முடியும்.

ஒளிவட்டம், ஆறு சக்கரங்கள் கொண்ட தியானி

இது ஒரு நபர் தியானத்தில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. தியானத்தில், நம் ‘மூன்றாம் கண்’ணும் ஆறு சக்கரங்களும், ஊக்குவிக்கப்படுகின்றன. அப்பொழுது, தியானிக்கு இயற்கையாகவே ஒளிவட்டம் பிரகாசம் அடைகின்றது. ஒருவருது ஒளிவட்ட போர்வை, அவரது தனிப்பட்ட சக்தியை, வெளியே பிரதிபலிப்பதாக இருக்கும்.

ஆறு சக்கரங்கள் என்பவை, நம் சூட்சம உடலில் இருக்கும் நாடிமண்டலத்தில் உள்ள சக்தி மையங்களாகும். இவை எவ்வளவு தியானத்தால் ஊக்குவிக்கப் படுகிறதோ, அவ்வளவு சக்தி, தியானிக்கு உண்டாகும்.

சக்தி (ENERGY) – சைதன்யம் (CONSCIOUSNESS) – ஞானம் (WISDOM)

நாமெல்லோரும் சக்தி, சைதன்யம் மற்றும் ஞானம் கொண்ட ஆன்மாக்கள். இது தெரியாமல் அறியாமையில் இருக்கின்றோம்.

சிருஷ்டியில் காணும் எல்லாமே, சக்தி, சைதன்யம், ஞானம் கொண்டவைகள்தான்.

திறந்த புத்தகம்

புத்தகம் திறந்திருப்பதற்குப் பொருள், நாம் நிறைய அரிய, சரியான ஆன்மிகப் புத்தகங்களைப் படித்தறிதல் வேண்டும் என்பதுதான்.

நீயே உனக்கு விளக்காயிரு (BE A LIGHT UNTO YOURSELF) – எனும் வாசகங்கள்

நாம்தான் நம் வாழ்க்கைக்கு உத்திரவாதி. நமக்கு நாம்தான் ஒளிக்காட்டியாய் இருக்க முடியும்.

நம் விளக்கை நாம்தான் ஏற்றவேண்டும். மற்றவர்கள் வழிகாட்டியாய் மட்டுமே இருக்க இயலும் – அவர்கள் நம் விளக்காகமாட்டார்கள். அடுத்தகட்ட ஆன்மிக முன்னேற்றத்திற்கு ஏதுவாக, நாம்தான் நம் சூழ்நிலையை, நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.