Select Page

“ பரிபூரண ஆரோக்கியம் ”

முழுமையான ஆரோக்கியம் அல்லது நிறைவான ஆரோக்கியமே பரிபூரண ஆரோக்கியமாகும்.

 

பரிபூரண ஆரோக்கியம் என்பது

1. உடல் நலம்,

2. மன நலம்

3. புத்தி நலம்

4. ஆன்மிக நலம் மற்றும்

5. சமுதாய நலம்

ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.

 

உடல் நலம்

உடலில் எந்தவிதமான நோய்களும், உபாதைகளும் இருக்ககூடாது. உடல்நிலை எப்பொழுதும் சுறுசுறுப்புடன் ஆற்றல் மிக்கதாக இருக்கவேண்டும்.

 

மனநலம்

எந்த நேரத்திலும் மனத்தளர்ச்சி இருக்கக்கூடாது. தோல்வியடைந்தாலும். அல்லது தோற்கடிக்கப்பட்டலும் மனம் தளரக்கூடாது. நம்மை யாராவது தூற்றினால், உணர்ச்சிவசப்பட்டு நம் ஆற்றலை இழக்கக்கூடாது. தாழ்வு மனப்பாண்மை என்பது இருக்கவே கூடாது. நம் உயர்வான நிலையிலிருந்து ஒரு போதும் விழக்கூடாது. நம் மன ஆற்றல் எப்பொழுதும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். நாம் எப்பொழுதும் உயர்வான சிந்தனைகளுடன் இருக்க வேண்டும். இவற்றையே நாம் மனநலம் என்கின்றோம்.

 

புத்தி நலம்

நாம் எல்லோரும் நம்முடைய புத்திக் கூர்மையினால் உருவாக்கப்பட்டவர்களே. கடந்த கால அனுபவங்களிருந்தும், முற்பிறவியிலிருந்தும் பெறப்பட்ட கர்ம ஞானமே புத்திக்கூர்மையாகும். கடந்த கால அனுபவங்களின் தொகுப்பிலிருந்து தர்க்க ரீதியாக பெறப்பட்ட முடிவே ஒவ்வொருவரின் புத்திக்கூர்மையாகும். அனுபவங்களின் தொகுப்பிற்கேற்ப பெறப்படும் அறிவிற்கு மற்றும் வாதத்தன்மைக்கு ஏற்ப, புத்திக்கூர்மை மாறுபடும், மேலும் ஒவ்வொருவரின் கர்மவினைப்பதிவு மாறுபட்டவையாக, வெவ்வேறாக இருப்பதால், புத்திக்கூர்மையும் மாறுபடுகின்றது. இவற்றையெல்லாம் நுண்ணறிவுகொண்டு, துல்லியமாகப் புரிந்துகொள்ளும் தன்மையையே, வளமான புத்திக்கூர்மை என்கின்றோம். ஆன்மிக அறிவியல் மட்டுமே, இந்த புத்திக் கூர்மையை நல்க முடியும். வேறு வழியே கிடையாது.

 

ஆன்மிக நலம்

நாம் யாரென்ற மூலத்தை, நன்கு உணர்ந்து அறிந்திருத்தலே ஆன்மிக நலமாகும். ‘உணர்வே’ பிரம்மம் என்ற சுத்த வெளியின் நிலையான., காலத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு துகள்தான் நாம் என்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும். அந்தத்துகளாகிய ஆன்மாதான் நாம். இதை முழுமையாக புரிந்துக் கொண்டு ஒவ்வொரு நொடியும் அந்த உணர்வில் இருத்தல் தான் “ஆன்மிக நலம்” ஆகும்

 

சமுதாய நலம்

சமுதாயத்தில் நம்மைச்சுற்றியுள்ள ஒவ்வொருவருக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். எனவே, நம் சமுதாயத்தில் உள்ள எல்லோருடைய நலனுக்காக, நாம் பாடுபடுவதே சமுதாய நலமாகும். அப்படி இல்லையாயின் நமக்கு சமுதாய நலம் இல்லை.

கற்பித்தலும், சேவை செய்வதும் சமுதாய நலத்தின் இரு கூறுகள். நமக்கு எது தெரியமோ அதனைத் தொடர்ந்து மற்றவர்களுக்கு ஆன்மிக ரீதியிலும், புத்திபூர்வமாகவும் எடுத்துக் கூறவேண்டும். உடலளவில், சரீர சேவையும் சரீர ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்.

இவ்விதமான ஐந்து நலங்களின் தொகுப்பே பரிபூரண நலமாகும். பரிபூர்ண நலத்தைப்பெற பணம் தேவையில்லை. நமது அறிவியல் சிந்தனையும், முயற்சியும் கைகோர்த்துச் செல்லுமானால் பரிபூர்ண நலமானது பரிபூர்ணமாகக் கிடைக்கும்.