“ பரமஹம்சர் ”

மானிடப் பிறவியில் கடைபிடிக்க வேண்டியது, இரண்டே இரண்டு.

அதில்,

ஒன்று, ‘விட்டுவிடவேண்டியது’.

இரண்டாவது ‘கைபிடிக்கவேண்டியது’.

மனிதனை அரக்கனாக்குவது ‘இம்சை’.

ஆகையால் விட்டுவிட வேண்டியது ‘இம்சையை’.

மனிதனை புனிதமாக்குவது ‘அம்சை’.

அம்சை என்றால் ‘சுவாசம்’.

ஆகையால் கைபிடிக்க வேண்டியது ‘அம்சையை’ – சுவாசத்தில் லயிப்பதை.

மனிதனை அரக்கனாக்குவது ‘இம்சை’. மனிதனை புனிதமாக்குவது ‘அம்சை’.

ஒவ்வொரு யோகியும், ஒரு ‘பரமஹம்சர்’. நித்ய யோக சாதனையாளர்களே ‘பரமஹம்சர்களாக’ உருவாகுவார்கள். பிரமிட் சாதனையாளர்கள் அனைவரும் ‘பரமஹம்சர்கள்’.

பிரமிட் ஆசான்கள் அனைவரும் ‘பரமஹம்சர்கள்’. உலகில் உள்ள மக்கள் அனைவரையும், ‘ஹம்சர்களாக’, ‘பரமஹம்சர்களாக’ மாற்றுவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருப்பது, பிரமிட் ஆன்மிக மன்றங்கள்.

‘ஹம்சையை’ பின் தொடருவோம்… ‘பரமஹம்சர்களாக’ மாறுவோம்.