தியான அனுபவங்கள்

என் பெயர் பூவிதா. நான் மூன்றாம் வகுப்பு படிக்கின்றேன். நான், கடந்த 10 மாதங்களாக தியானம் செய்து வருகிறேன். எனக்கு சென்னை, நெற்குன்றத்தில் உள்ள பிரமிட் ஆசான் திருமதி. பிரசாந்தி சந்திரசேகர் அவர்கள் தியானத்தைக் கற்றுத் தந்தார். தியானத்திற்குமுன் எனக்கு அடிக்கடி ஜல தோஷம் ஏற்படும். கஷ்டப்பட்டு படித்துத்தான் ‘ஏ’ கிரேட் வாங்க முடிந்தது. ஆனால் இப்போழுது தியானம் செய்யத் துவங்கியதிலிருந்து எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி விட்டதால் எந்த நோயும் வருவது இல்லை. எனக்கு எப்போதாவது வரும் சளி, காய்ச்சல், வாந்தி போன்ற நோய்களுக்கு நான் தியானம் மட்டுமே செய்து, குணமாகி வருகிறேன். எனக்கு தியானத்தில் பிரம்மர்ஷி பத்ரிஜியுடன் போசும் அனுபவம் கிடைத்தது. அவர், எனக்கும், என் குடும்பத்தினருக்கும் நிறைய அறிவுரைகள் வழங்கி இருக்கிறார். நாங்கள் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டோம். நான் ‘கேக்’ கூட இப்போது சாப்பிடுவது இல்லை. வீட்டில் அசைவம் சமைத்த பாத்திரங்களை எல்லாம் மாற்றி விட்டு, புது பாத்திரங்களை வாங்கி சமையல் செய்ய ஆரம்பித்துள்ளோம். இன்று என்னால் மிகவும் சுலபமாகப் படிக்க முடிகிறது. ஆகவே, சிறுவர் சிறுமியர்கள் கண்டிப்பாக தியானம் செய்ய பழகி, மனம் மற்றும் உடல், ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தியானத்தில் பத்ரிஜி எனக்குத் தந்த முக்கிய தகவல்களில் சில

 

1) கண்டிப்பாக எல்லோரும் அதிகமான நேரம் மெளனமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

2) புதிதாக கட்டிய கோவில்களுக்கு தியானம் செய்பவர் செல்லக்கூடாது. அங்கு தியானம் செய்தால் உங்கள் சக்தி வீணாகிவிடும். மாறாக மிகவும் பழைமை வாய்ந்த கோவில்களுக்கு சென்றால் அதிக சக்தி பெறலாம்.

3) ஆஞ்சநேயரையும், சிவபெருமானையும் வழிபாடு செய்யலாம். ஏனெனில் அவர்கள் எப்பொழுதும் தியானிப்பவர்கள்.

4) கடவுள் – பேப்பர், தியானம் – பேனா, நீ தியானம் செய்தால் கடவுளிடம் நேரடியாக உரையாடலாம். வெறும் பேப்பரால் நீ ஒன்றும் செய்ய முடியாது. பேனாவின் உதவியோடு பேப்பரில் நீ விரும்பியதை எழுதலாம். வரையலாம்.

பேபி பூவிதா பாலசிங்கம்

3-ஆம் வகுப்பு, சென்னை.


என் பெயர் ராமச்சந்திரன். நான் இலங்கையிலுள்ள கொழும்புவில் வசிக்கிறேன். நான் தியானத்தை என் அண்ணன் மகள் தேவி பாலசிங்கம் வாயிலாகக் கற்றுக்கொண்டேன். பின்னர் ஒருநாள் நெற்குன்றத்திலுள்ள திருமதி. பிரசாந்தி சந்திரசேகரிடம் சென்று, அவர்களின் பிரமிட்டில் தியானம் செய்த போது, என் அகக்கண்ணில் ஏற்பட்ட அனுபவங்களுக்கு பிரசாந்தி அவர்களிடம் விளக்கம் கேட்டு, தெளிவு பெற்றேன். அதன்பிறகு தொலைபேசி மூலம் மற்ற சந்தேகங்களுக்கு அவர்களிடம் விடைகள் பெற்றுக்கொள்வேன். அதன் பின்னர் வீட்டிலும், கடையிலும் ‘பிரமிட்’ வாங்கி வைத்து அதனுள் தியானம் செய்வேன். நான் பக்தியில் ஈடுபாடு உள்ளவன். தினமும் பூஜை, கோவில் என்று இருப்பேன். கடவுள்கள், இயற்கைக் காட்சிகள், குழந்தைகள் முதலியான என் அகக்கண்ணில் காட்சியாகத் தெரியும். தியானத்திற்கு முன்னர் எனக்கு கழுத்து வலி (செர்வைகல் ஸ்பான்டைலைட்டிஸ்) சைனஸ், அலர்ஜி பிரச்சனைகள், மன அழுத்தம் போன்ற நோய்கள் இருந்தன. கடைக்குச் சென்றால், வேலையில் ‘டென்ஷன்’ போன்றவை ஏற்பட்டு, எப்போதும் மனம் அமைதியில்லாமலேயே, இருக்கும். ஆனால் இப்போது தியானம் செய்ய ஆரம்பித்த பிறகு, எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை என்னாலேயே நன்றாக அறிய முடிகிறது. என் ஐம்பது வருட வாழ்க்கையில் எனக்கு இப்போது இளமை திரும்பிவிட்டது போல் ஆரோக்கியமாக இருக்கின்றேன். முன்பெல்லாம் எப்போதும் மாத்திரைகள், எரிச்சல்கள், அலுப்புகள் மற்றும் மன விரக்தியுடன் இருந்துள்ளேன். ஆனால் இன்று தியானத்தின் உதவியால் மனம், உடல், ஆரோக்கியம் பெற்று சலிப்படையாத வாழ்க்கை வாழக் கற்று கொண்டு, மனநிறைவுடன் வாழ்ந்து வருகிறேன். என் குடும்பத்தினர் அனைவரும் அசைவம் உண்பதை விட்டுவிட்டனர். இன்று நான் எப்பொழுதாவது மாத்திரை எடுத்து கொள்கிறேன். டாக்டரிடம் செல்வதும் குறைந்துவிட்டது.

இந்த அருமையான வரப் பிரசாதமாகிய தியானத்தை முன்பே கற்றுப்பயின்று வந்திருந்தால் என் வாழ்க்கை எவ்வளவோ பயனுள்ளதாக இருந்திருக்குமே இத்தனை வருடம் வீணாகி விட்டதே என்ற குறையால், தினமும் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும், மதியம் , இரவு என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியானம் செய்கின்றேன்.

இந்த தியானத்தை உலகிற்கு தந்த புத்தருக்கும், உலக குருஜி பிரம்மரிஷி பத்ரிஜிக்கும் கோடானுகோடி நன்றிகளை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

திரு.இராமச்சந்திரன்.

கொழும்பு, இலங்கை.


ஒரு மகானின் பிறப்பு

என் பெயர் கே.வரலட்சுமி. எனது ஊர் விஜயவாடா. நான் 1998 உடல் உபாதையினால் தவித்தேன். குணம் கிடைக்க வழித்தேடி தியானத்தை ஆரம்பித்தேன். 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் தியான சாதகம் செய்து பூரணமாக நலம் அடைந்தேன். நான் புலால் உணவை சாப்பிடுவதை விட்டுவிட்டு, லட்சக்கணக்கானவர்களுக்கு தியானத்தை கற்பித்து, அவர்களும் புலாலை விட்டுவிட்டு சைவ உணவை மேற்கொள்ளும்படி செய்தேன். இந்த தியானத்தின் மூலமாக என் அக உலக பிரயாணத்தில் பல மேலுலக ஆசான்களை சந்தித்து, அவர்களின் ஞானத்தையும் டெலிபதி மூலமாக பத்ரிஜியிடம் சந்தேகங்களை தீர்த்துக் கொண்டு இல்லற வாழ்க்கையை, முறையாக, ஆனந்தத்துடன் வாழக் கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டு இருக்கிறேன்.

பத்ரிஜி ஒரு மாபெரும் செல்வம். அவரை முழுவதுமாக புரிந்து கொள்வது என்பது என் பார்வையில் மிகவும் கடினம். அவரைப் படிப்படியாக இன்னும் புரிந்து கொண்டு இருக்கிறேன். அவர் இப்பூமியில் ஏன் பிறவி எடுத்தார்? மேலுலகங்களில் அவரின் நிலை என்ன? என்பதை நான் அறிந்து கொண்டது என் முற்பிறவிகளின் புண்ணியம். ஒருமுறை தியானத்தில் பத்ரிஜியின் பிறவிப்பயனை தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இவ்வுலகம் முழுவதும் அஞ்ஞானத்தில் மூழ்கியிருக்கிறது. “நான்” என்றால், இவ்வுடல் எனும் மாயையில் சிக்கி இருக்கும் மனித இனத்தை, அந்நிலையில் இருந்து வெளியில் கொண்டுவர மேலுலக ஆசான்கள் பல முயற்சிகள் செய்து, பலனில்லாமல் கடினம் என பவித்து முயற்சியை கைவிட்டு விட்டார்கள்.

பூமியில் காட்டு விலங்குகளின் மரண வேதனை, செல்லமாக வளர்க்கப்படும் பிராணிகளின் சங்கரம், கடல் வாழ் உயிரினங்களின் அவல நிலை. இsவையனைத்தும் மனித இனத்திற்கு சாபமாக மாறி, பெரும் சுனாமிகளால் இவ்வுலகம் அழியும் தருணத்தில் ஒளி ரூபம் கூடிய தேகத்தைக் கொண்ட ஒரு மகான், மிகுந்த கருணையுக்டன், அளவில்லா பாசத்துடன் இவ்வுலகை ஒருமுறை பார்த்தவுடனேயே இந்நிலைக்குக் காரணம் புரிந்துவிட்டது. இவ்வுலகத்தின் இன்னல்களுக்கும், அழிவுகளுக்கும் மனித இன சரிவு நிலைக்கும் காரணம் “நான்கு அங்குல நாக்கு”. இந்நாக்கின் சுவைக்காகவே இவ்வளவு ஜீவ இம்சை பூமியில் நடக்கிறது. அவரவர் சிற்றறிவிற்கு புலப்படும் தேவையற்ற பேச்சினால் அழிவை உண்டாக்குகிறார்கள். மனித நாக்கிற்கு பீடை ஏற்பட்டிருக்கிறது. இதை முதலில் அகற்ற வேண்டும். வயலுக்கு பூச்சி பாதிப்பு ஏற்பட்டால் மருந்து அடித்து, பயிரை எப்படி காப்பாற்றுகிறோமோ, அதேபோல், நம் நாக்கை காப்பாற்ற வேண்டும். “உத்தரேதாத்மானாத்மானாம்” என்றார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. அவரவர் ஆன்மாவை அவரவரே உயர்த்திக் கொள்ள வேண்டும். தன்னைத்தான்  அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால், நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும். சைவ உணவையே மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் மனித இனமே அழிந்துவிடும். “இது சத்தியம்”. இதற்காகவே பூமியில் ஒளிரூபம் கூடிய தேகத்தை கொண்ட ஒரு மகானின் பிறப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த ஒளி ரூபமே “பிரம்மர்ஷி பத்ரிஜி”யாக பிறவி எடுத்திருக்கிறார். அவர் பூமிக்கு வந்தபிறகு “சுவாசத்தை கவனித்தல்” என்ற மருந்தை உபயோகிக்க தொடங்கினார். பத்ரிஜிதான் பிரமிட் தியானத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர். இத்தியானத்தினால் லட்சக்கணக்கானோர், தம் நாக்கின் பீடையை அகற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் அகற்றி கொண்டே இருக்கின்றனர். புலால் உணவை விட்டுவிட்டு தம் நாக்கை சரி செய்து கொள்வதால், தம்மைத்தாம் காப்பற்றிக் கொள்வது மட்டுமல்லாமல், மனித இனத்தையே காப்பாற்றுகிறார்கள். பத்ரிஜியின் பிறப்பினால் இவ்வுலகம் புனிதம் அடைந்திருக்கிறது. இவ்வுலகத்தில் உள்ள அனைவருக்கும் தியானத்தை, சைவ உணவின் முக்கியத்துவத்தைத் தெரிவிப்பதற்காகவேதான் “பிரமிட் ஆன்மிக இயக்கம்” மற்றும் “பிரமிட் பார்ட்டி ஆஃப் இந்தியா” (PPI) என்னும் அரசியல் கட்சியையும் ஆரம்பித்து அனேக இன்னல்களையும், அவமானங்களையும் தாங்கிக்கொண்டு உலக நன்மைக்காக பிரச்சாரம் செய்கிறார் பத்ரிஜி. இந்த பிரச்சாரத்தில் நம் பங்கை நாம் நிறைவேற்றினால் ‘உலக நன்மைக்கு’ நம்முடைய கடமையை நிறைவேற்றியதாகும். நம் ஆன்ம பயணத்தில் இது ஒரு முக்கியமான பொறுப்பு. இந்தப் பிறவியை இறுதி பிறவியாக ஆக்கிக் கொள்ள நமக்கு இந்த வாய்ப்பை அளித்த பத்ரிஜிக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது. மேலுலகங்களில் இருக்கும் “காஸ்மிக் பார்ட்டி” என்பது பிரமிட் பார்ட்டியாக இவ்வுலகத்தில் உருவாகியுள்ளது. 2012க்குள் இந்த அவகாசத்தை உபயோகித்துக் கொண்டு எல்லோரும் பிறவிப்பயனைப் பெறுங்கள்.

 

கே. வரலட்சுமி

விஜயவாடா


என்னுடைய பெயர் திருமதி. உஷா சந்திரா. நான் தியானத்தை மேற்கொள்வதற்கு முக்கிய காரணம், என் தோழி கீதா மேடம் தான். நான்கு வருடங்களாக என் கணவர் இராமகிருஷ்ணா மிசினின் தியானத்தை மேற்கொள்கிறார். என்னையும் செய்ய வற்புறுத்தினார். இரண்டு பேருமே தியானத்திற்கு சென்றுவிட்டால் பிள்ளைகளை யார் கவனிப்பது? என்று காரணம் கூறி, நான் அங்கு செல்லவில்லை.

பின்னர் 2007 அக்டோபரில் நவராத்திரியின் போது என் தோழி விஜயலட்சுமி மூலமாக பிரமிட் மாஸ்டர் கீதா மேடத்தின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் தியானம் கற்றுக்கொடுப்பார்கள் என தெரியும். ஆனால் நான் அதுபற்றி அவர்களிடம் கேட்கவில்லை.

2008 ஜூலையில் கீதா மேடத்தின் வீட்டிற்கு தியான வகுப்புக்கு வருமாறு என்னை அழைத்தார்கள். எனக்கு காய்ச்சல் இருந்தபடியால் நான் செல்லவேண்டாம் என தவிர்த்தேன். ஆனால் அவர், ‘நீங்கள் கட்டாயம் வரவேண்டும். உடல்நிலை முடியாவிட்டால் இங்கேயே படுத்துக்கொள்ளுங்கள். அங்கு கூறப்படுபவையைக் கேட்கமட்டுமாவது செய்யுங்கள்’ என்றார். நானும் கிளம்பிச் சென்றேன். சென்னை ஜெகதீஷ் மாஸ்டர் தியானம் பற்றி கூறி 20 நிமிடம் தியானம் செய்வித்தார். அப்பொழுது கூட எனக்கு விருப்பம் வரவில்லை. சரி, மாஸ்டர் சொன்னாரே என்பதற்காக தியானம் 10 நிமிடங்கள் தான் செய்தேன். ஆனால் எனக்கு 1 மணி நேரம் செய்வதுபோல் தோன்றிற்று. 15 நாட்களுக்குப் பிறகு பிரமிட் மாஸ்டர் மணியின் வகுப்பு கீதா மேடம் வீட்டில் நடந்தது. அவர் ஆன்மா பற்றியும் தியான அற்புதங்களைப் பற்றியும் கூறினார். அப்பொழுதுதான் எனக்கு “தியானத்தில் எதுவோ இருக்கின்றது. நாமும் செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. தியான நேரத்தின் அளவை கூட்டிக் கொண்டே சென்றேன். ஒருமுறை தியானத்தில் கீதா மேடம் துர்கா தேவியாக, விஜயலட்சுமி லட்சுமி தேவியாக, துர்கா,சரஸ்வதியாக தென்பட்டாரகள். அந்த நாள் மிகவும் ஆனந்தமாக இருந்தது. நமக்குள் ஆண்டவர் இருக்கிறார் என்ற உண்மை புரிந்தது. இது முதல் அனுபவம். அன்றிலிருந்து விடாமல், தியானத்தை ஒழுங்காகச் செய்கிறேன்.

‘ஆனாபானசதி’ தியானத்தை அனுதினமும் செய்ய ஆரம்பித்தபின் குடும்பத்தினருடனும் பிள்ளைகளுடனும் சேர்ந்து சந்தோஷமாக தியானம் செய்யலாம் என புரிந்து கொண்டேன்.

2008 நவம்பர் 25 பத்ரிஜி, கீதா மேடம் வீட்டிற்கு வந்தார். நான் அவரை சந்திப்பது அது தான் முதல் முறை. தியானம் தொடர்ச்சியாக ஆரம்பித்த நான்கு மாதங்களில், குருஜியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் பத்ரிஜி எங்களிடம், ‘ஜெகதீஷ் மாஸ்டருக்கு ‘சிங்கமலை’ பட்டமளிப்பு விழா இருக்கிறது. கண்டிப்பாக வரவேண்டும். அப்படி வரவில்லை என்றால் உங்கள் வீட்டிற்கு சுனாமி வரும்’ என (விளையாட்டாகக்) கூறினார். நாங்களும் ‘கண்டிப்பாக வருவோம்’ என்க் கூறினோம். நாங்கள் சில பேர் சேர்ந்து அங்கு செல்லத் திட்டமிட்டோம். ஆனால், அச்சமயத்தில் புயலுடன் கூடிய மழை பெய்ததால் திரும்பி வர முடியாது என்று நாங்கள் செல்லவில்லை. 3 நாட்கள் தண்ணீர் இல்லை, மின்சாரமும் இல்லை, 4வது நாள் நான் வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது காலனி முழுவதும் தண்ணீராக கடல் போல் காட்சியளித்தது. அப்பொழுதுதான் பத்ரிஜி, ‘சுனாமி மழைவரும்’ என்பதை முன்கூட்டியே தெரிவித்தது அதிசயமாக இருந்தது. விளையாட்டாகக் கூறினாலும் அவர் ‘வாக்கு’ பலித்து விட்டது. அவர் வாத்தையில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை அறிந்து பூரிப்படைந்தோம்.

2009 மார்ச் மாதம் கீதா மேடம் வீடில் 40 நாட்கள் அகண்ட தியானம் செய்தோம். 41-வது நாள் எனக்கு தியானத்தில் பத்ரிஜி கீதா மேடத்தின் காதில் ஏதோ கூறுவது போல் இருந்தது. ஆனால் அது என்ன என்று தெரியவில்லை. பின், கீதா மேடம், இராமாயணத்தைப் பற்றி தியானத்திலேயே கூறினார். பின்னர்தான் தெரிந்தது, தியனத்தில் பத்ரிஜி கீதா மேடத்திற்கு இராமாயணக் கதையை அவர் காதில் கூறினார் என்று. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு முறை தியானத்தில் 10 வருடங்களுக்கு முன் இறுந்த என் தாயைக் கண்டு பேசியது, எனக்கு ஆனந்தத்தையும், ஆச்சர்யத்தையும் அளித்தது.

ஒரு வருடத்திற்கு முன் நான் முழு உடல் சோதனையின் போது கர்ப்பப்பையில் ‘அலர்ஜி’ இருப்பதாக கூறினார்கள். ரிப்போர்ட்டை பார்த்த ஒரு டாக்டர் கர்ப்பபையை எடுக்க வேண்டாம் என்றார். இன்னொரு டாக்டர் பிரச்சனை இல்லை என்றால் எடுக்க வேண்டாம் என்றார். பின்னர் நான் டாக்டரிடம் செல்லவில்லை. ஆறு மாத தியானத்திற்கு பின், திரும்பவும் டாக்டரிடம் பரிசோதனை செய்த ரிப்போர்ட்டில், அலர்ஜி ஒன்றும் இல்லை என்று தெரியவந்தது. என்னே விந்தை.

தியானத்தின் மூலமாக நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், தியானத்தால் சாதிக்க முடியாதது எதுவும் கிடையாது. நமக்கு கை, கால் இல்லையென்றால் கூட வாழலாம். கண் இல்லையென்றால்கூட வாழலாம். வாய் பேசவில்லை என்றால் கூட வாழலாம், ஆனால் சுவாசம் இல்லாமல் வாழ முடியாது அல்லவா? சுவாசம் தான் அந்தரங்க குரு அந்த சுவாசத்தின் மீது கவனம் வைப்பதே தியானம்.

தியானம் “சர்வ ரோக நிவாரணி” நான்கு மணி நேர நடைபயிற்சி உடற்பயிற்சி ஒரு மணிநேர தியானத்திற்கு சமம். “அப்போ தீபோ பவ” என்று புத்தர் கூறியுள்ளார். அதாவது நம்முடைய அகவிளக்கை நாம்தான் ஏற்றவேண்டும். இது தியானத்தின் மூலம்தான் சாத்தியம்.

 

தியான ஆசான்

திருமதி. உஷா சந்திரா

மும்பை.


என் பெயர் சத்தியபாமா. எங்கள் ஊர் மதனபள்ளி. நான் ‘ஆனாபானாசதி’ தியானத்தை சென்னை பிரமிட் மாஸ்டர், (என் சகோதரி) திருமதி. இராஜேஸ்வரி அவர்கள் மூலமாகக் கற்றுக்கொண்டேன். 2006 பிப்ரவரி 3ம் தேதியிலிருந்து தியானம் செய்கிறேன். மண்டல தியான வகுப்பிலிருந்து என்னுடைய தியான வாழ்க்கை ஆரம்பித்தது. அந்த மண்டல தியானம் நிறைவு பெறுவதற்கு முன்பே நிறைய தியான அனுபவங்கள் கிடைத்தன. ஆக்ஞா சக்கரம் செயல் புரிய ஆரம்பித்தது. பின்னர், ஜுன் மாதத்தில் சேலத்திலுள்ள பிரமிட் தியான மன்ற திறப்பு விழாவிற்கு திருமதி. பாரதி (என் அண்ணி) என்னை அ ழைத்தார்கள். அங்கு, என் அக்கா இராஜேஸ்வரி மூலமாக, நம் குருவான பத்ரிஜி அவர்களின் அறிமுகம் ஏற்பட்டு, என்னுள் இருந்த துக்கத்தை அகற்ற முடிந்தது. மறுநாள் குருஜியின் தியான வகுப்பில் என்னுடைய சுவாசத்தை கவனித்தேன். என்னுடைய “சகஸ்ரார” ஆயிரம் இதழ் தாமரை தரிசனம் கிடைக்கப் பெற்றேன். வகுப்பின் நிறைவில், “குருஜி என் அருகில் வந்து என் அனுபவம் என்ன?” என்று கேட்டார். நானும் கூறினேன். அதற்கு அவர், “நீங்கள் உங்களுடைய சகஸ்ராரத்தை தரிசனம் செய்திருக்கிறீர்கள்” என்று கூறினார். நான் பரீட்சையில் முதல் மதிப்பெண் பெற்றது போல் சந்தோஷப்பட்டேன். அதன் பின்னர், என்னுள்ளிருந்து “ஆன்ம ப்ரபோதம்” பாடல் ரூபமாக 10 பாடல்கள் வரை என்னால் எழுதமுடிந்தது. ஆனந்தமாகப் பாடிக்கொண்டிருக்கிறேன். எனது ஞானத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று எனக்கே தெரியவில்லை. அதனை செயல் படுத்தவேண்டும் என்ற எண்ணமும் தோன்றவில்லை. ஆனால், எப்பொழுதுமே ஏதோ ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்ற ஆவல் மட்டும் இருந்து கொண்டே இருந்தது.

2008 ஜனவரி 2ம் தேதி பத்ரிஜி அவர்கள், மதனபள்ளி பிரமிட் திறப்பு விழாவிற்கு வந்தபொழுது, என்னிடம் ‘சொல்லுங்க மேடம்’ என்றார். அதற்கு “உங்கள் கையில் ஒரு கருவியைப் போல் நான் வேலை செய்ய வேண்டும் என்றும் உங்களுடன் சேர்ந்து பாடல் பாட வேண்டும் என்றும் இருக்கிறது. ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. நீங்களே என்னை செயல்படுத்த வேண்டும்” என்றேன். எனக்குத் தெரியாமலேயே அந்த வார்த்தைகள் வந்தாலும், 18 மாதங்களுக்குப் பின் அது நிரூபணம் ஆனது. இந்த சமயத்தில் என்னுடைய உடல் ஆரோக்கியம் குறைந்திருந்தது. நான் என்னுடைய வீட்டு வேலைகளைக்கூட சரியாக செய்ய முடியாமல், அனைத்தையும் தியானத்திற்கே அர்ப்பணித்து மிகவும் அதிக அளவில் தியானம் மேற்கொண்டேன். என் அக்கா, இராஜேஸ்வரியுடன் என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது அவர்கள், எது கூறினாலும், சில சமயங்களில், அந்த வார்த்தைகள் கஷ்டமாகத் தோன்றி என் கண்களில் நீர் வரும். ஆனால், தியானம் செய்யும்போது அந்த வார்த்தைகளை ஞாபகப்படுத்திக் கொண்டு, என் தவறுகளை திருத்திக்கொள்வேன். மற்றவர்களைப் பற்றி கற்பனை செய்து தீர்மானிக்கக்கூடாது (Judge ye not) என்பதை புரிந்து கொண்டேன். “உன்னை நீ அறிந்து கொள்”. சத்தியம் பேசு என்பதெல்லாம் சூட்சுமமாக புரிகின்றது. அன்றாட வாழ்வில் சத்தியத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்றும் தெரிந்தது. “சத்யம் வதா தர்மம் சரா” சத்யத்தை வதைத்து விட்டோம் என்றால் தர்மம் நம்மை சிறைபிடித்து விடும்.

சத்யம் தெரிந்தும் அங்கே உங்கள் தர்மத்தை கடைப்பிடிக்காமல் இருந்தால், சத்யமே உங்களை வதைத்து விடும். தர்மம் உங்களை சிறைப்பிடித்துவிடும். கர்மபலன்களை அனுபவிக்கும் போது “எதற்கு இப்படி அனுபவிக்கிறோம்” என்று கூட புரிந்துகொள்ள மாட்டோம். ஞானமும் பெறமுடியாது.

வைரத்தை தூய்மைபடுத்தாவிட்டால் வைரம் ஜொலிக்காது. இரும்பை தீயிலிடாமல் இருந்தால், கருவிகளைச் செய்ய முடியாது. அதுபோல, தெய்வீக ஆற்றலுடன் இறைத் தொடர்பு ஏற்படுத்தி கொள்ள வேண்டுமானால், விஸ்வ திட்டத்தில் பங்கு கொள்ள வேண்டுமானால், நமக்குள் நாம் செல்ல வேண்டும். ஆன்மாவை சுத்திகரிக்க ஆரம்பித்தால் கர்மாவும் சுத்தப்படுத்தப்படும். நமக்கு இவ்வளவு மார்க்கதரிசியாக இருக்கும் பத்ரிஜியியை பார்த்து ஒவ்வொரு நிமிடமும் கற்றுக்கொண்டு முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். எப்பொழுது என்னை நான் திருத்திக் கொண்டு பிரகாசிக்க வேண்டும். விஸ்வ சக்தியுடன் இரண்டறக்கலந்த ஆன்மாவாக, விஸ்வ ஆத்மாவாகப் பரமாத்மா செய்யும் வேலையை செய்ய வேண்டும் என்று தீவிரமான வேட்கை ஏற்பட்டதும், திரும்பி என்னுள் இருந்து அகத்தகவல்கள் வர ஆரம்பித்தன. இம்முறை எனக்கு, ஆன்மா விழிப்புணர்வுடன் கூடிய தகவல்கள், ‘ஆன்ம பிரபோத’த்திற்கு தியானத்தின் மூலம் சக்தியை கொடுக்க வேண்டும் என்று உணர்த்தின.

“மனநலம் குன்றியவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களை பற்றியும் வந்த தகவல்களை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும்” என்று தியானத்தில் எனக்கு கிடைத்த தகவல்கள் எல்லாவற்றையும் உங்கள் முன்வைக்கிறேன்.

மனநலம் குன்றியவர்கள் எதை அடையவேண்டும் என்று இப்புவியில் பிறவி எடுக்கிறார்கள்? அவர்கள் ஆன்ம நிலை எப்படி இருக்கும்? ஆன்மிக முன்னேற்றம் எப்படி ஏற்படும்? இக்கேள்விகள் அனைத்துமே என்னுள் சுழன்று கொண்டே இருக்கும். கண்களை மூடி தியானம் செய்யும்போதுகூட எனக்கு தெரிந்த இம்மாதிரி குழந்தைகளே கண்ணில் தெரிகின்றனர். சிலருக்கு எதுவுமே தெரியாத நிலை. சிலருக்கு சொன்னால் கேட்பார்கள். அதிலும் நிலைகள் உள்ளன.

உகாதி பண்டிகைக்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஒற்றுமை தியானத்தின் முடிவில், “சூரியனில் தொடர்பு ஆகிவிட்டாய்” என்று எனக்கு உள்ளிருந்து தகவல் வந்தது.

முழுமனிதன் (பரிபூரணமானமனிதன்)

பிரமிட் சக்தி + சூரிய சக்தி + (உயிர்) பிரபஞ்ச சக்தி இவை மனநலம் குன்றியவர்களை நல்வழிப்படுத்த முடியும். மனநலம் குன்றியவர்களுக்குத் தேவையான, மிகவும் முக்கியமான சக்தி கிடைக்க வேண்டிய தருணம் இது. ஜுபிடர் இரண்டாவது சூரியன் போல வருவதற்குக் காரணம், இதுபோன்ற மனிதர்களுக்கு உபயோகமாக இருக்கத்தான். இங்கே இவர்கள் பெளதீகமாகவும், ஆன்மிகமாகவும் இவ்விரண்டு விதங்களிலும் முன்னேறி வருவார்கள். தினமும் அவர்களின் வயது எவ்வளவு உள்ளதோ அதற்கு ஒன்றரை மடங்கு காலை, மாலை (சூரியோதயம், சூரிய அஸ்தமனம்) சூரிய சக்தி கிடைக்கும்படி அவர்களின் உடல் சூரிய கிரணங்களை தாங்கும் அளவிற்கு உட்கார்ந்து தியானம் செய்தால் நாளடைவில் நல்ல மாற்றம் ஏற்படும். அதுவும் முடியாதவர்கள் அந்த சமயத்தில் அங்கு இருந்தால் மட்டும் போதும். அவர்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்கள் ஏற்படும். இதல்லாமல் பிரமிட்டிலும் அமர வேண்டும். இப்படி பிரமிட் உள் அல்லது பிரமிடின் கீழே அமரும்போது “தியானம் என்றால் சுவாசத்தின் மீது கவனம்” என்று அறியாதவர்கள் கூட, அந்த நிலைக்கு முன்னேறி வருவார்கள். இது மட்டுமல்லாமல், கர்ப்பிணி பெண்களும் மூன்று மாதம் தொடக்கத்திலிருந்து அவர்களின் வயது எவ்வளவோ அதற்கு ஒன்றரை மடங்கு தினமும் காலை, மாலை சமயத்தில் சூரிய சக்தி கிடைப்பது போல தியானம் செய்தால் மனநலம் குன்றிய குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பே இல்லை. இது சத்தியம்.

மனநலம் குன்றிய நிலை எதற்கு, ஏன் எப்படி ஏற்படுகிறது? கர்ப்பத்தில் குழந்தை வளரும் போது, அந்தத் தாய் விபரீதமான மன அழுத்தத்தால் இயற்கைக்கு புறம்பாக இருத்தலினாலும், அன்பு தத்துவம் குறைந்து இருந்தாலும், மனவளர்ச்சி குன்றிய குழந்தை உருவாகலாம். எவ்வளவு வைட்டமின்கள், மருந்துகள் எடுத்துக் கொண்ட போதிலும் அந்தத் தாய் இயற்கையுடன் ஒன்றியிருக்க வேண்டும். அன்பு தத்துவத்துடன் முழுமை பெற்றிருக்க வேண்டும். தனக்குள் தானாகவே இருக்க வேண்டும். இது எல்லாமே ஒருவருக்கு ஏற்பட வேண்டும் என்றால், தியானம் ஒன்றே மிகச்சிறந்த வழி. அதனால் கர்ப்பிணிகள் தியானம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். மற்றைய பெண்கள் கர்ப்பம் தரிக்கும் முன்பே கணவனும், மனைவியும் தியானம் செய்து கொண்டே இருந்தால், (தன்னைத்தான் தெரிந்து கொண்டே வந்தால்) அந்த பெண் கர்ப்பம் தரித்தபின் தன்னுடைய ஆன்ம சக்தியோடு உன்னதமான குழந்தையை எளிதாகப் பெற்றெடுக்க முடியும்.

‘மனம்’ என்ற ஒரு வட்டத்துக்குள் சிக்கியவர்கள் அனைவருமே மனநலம் குன்றியவர்கள்தான். இவர்கள் அனைவருமே சூரிய சக்தியை எடுத்துக் கொண்டால் ஆன்மிக முன்னேற்றம் அடையலாம். இது ஒரு பொன்னான கால கட்டமாகும். அதனால் ஒவ்வொருவரும் பிரமிட் சக்தி, பிரபஞ்ச சக்தி, சூரிய சக்தி முதலியவற்றை கண்டிப்பாக எடுத்தக் கொண்டு, உன்னத வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

 

திருமதி. சத்தியபாமா கிருஷ்ணமூர்த்தி

மதனபள்ளி, ஆந்திரா.


என் பெயர் மாலதி. எனக்கு 2 பெண் குழந்தைகள். நாங்கள் சென்னையிலுள்ள கோயம்பேடு கேம்ஸ் வில்லேஜில் இருக்கிறோம். நான் 3 வருடங்களாக தியானம் செய்கிறேன். தியானத்திற்கு வரும்முன் எனக்கு நிறைய ஆரோக்கியக் குறைபாடுகள் இருந்தன. ‘ஆர்த்தரைடீஸ்’ நோயினால் கால்வலியுடன் என்னால் உட்கார்ந்து, எழக் கூட முடியாது. இன்னும் அல்சர், சைனஸ், ஸ்பான்டிலைட்டீஸ் மற்றும் ஆஸ்மாவுடன் அவஸ்த்தைப் பட்டுக் கொண்டிருந்தேன். எப்பொழுதும் மருத்துவர்களை நாடுவது, மருந்துகள் உட்கொள்வது, இதுதான் வேலை. வீட்டு வேலையை செய்ய முடியாமல் குழந்தைகளை கவனிப்பதும் சிரமமாக இருந்தது.

விருந்தாளிகளையும் கவனிக்க முடியவில்லை. முழுமையான ‘மென்டல் டிப்ரஷன்’ ஆகிவிட்டது. சிறிய பிரச்சனைகளைக் கூட சமாளிக்க முடியாமல் போனது. என் காலனியில் உள்ள கீதா மேடம் என் நிலையைப் பார்த்து தியானம் கற்பித்தார். தியானம் ஆரம்பித்து 5வது நாளில் சைவ உணவு உட்கொண்டால் தியானம் சிறப்பாக அமையும் எனக் கேள்விப்பட்டு, சைவ உணவிற்கு மாறினேன். அடுத்த நாளே, மூன்றாம் கண் எழுச்சி பெற்று அநேக குருமார்களுடன் உரையாடலும், இயற்கையிடம்கூட தகவல்கள் பரிமாற்றம் கிடைக்கப்பெற்றேன். இதுபோல அநேக அனுபவங்களை தியானத்தில் பெற்றேன். தியானம் ஆரம்பித்த சில நாட்களிலேயே மனநலம் கிடைக்கப்பெற்று மகிழ்ழ்ச்சியடைந்தேன். என் இளைய மகள் ரக்னிதாவிற்கு ஆஸ்துமா இருக்கிறது. எல்லாவிதமான ஆரோக்கிய குறைபாடுகளுடன் இருந்தன. ஆங்கில, ஹோமியோ, சித்தா மருத்துவங்கள் பயனற்று போய்விட்டன. பின்னர், ‘கீதா மேடம், குழந்தைகளும் தியானம் பழகினால் அவர்களுக்கும் உடல் ஆரோக்கியம் கிடைக்கும்’ என்றார்.

நான், ‘அவளுக்கு 5 வயதுதானே ஆகிறது, எப்படி ஒரு இடத்தில் அமருவாள்?’ என்று கேட்டேன். “நம்மைவிட குழந்தைகளுக்கு தியானம் நல்ல பயனைத் தரும்” என்றார். ஆச்சரியமாக இருந்தது எனக்கு. என் மகளுக்கு 3வது நாளே மூன்றாம் கண் எழுட்சியடைந்து சிலநாட்களில், ‘ஆஸ்துமா’ வியாதி குணமாகிவிட்டது. அவள் தியானத்தில், பெரும் மகானான மகா அவதார் பாபாஜியுடன் விளையாடும் அனுபவம் எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர் அவள் பள்ளியிலோ, வீட்டிலோ சொல்லித் தராத பாடங்களைக்கூட தெளிவாகக் கூற ஆரம்பித்ததைப் பார்த்து நாங்கள் வியப்படைந்தோம். இப்பொழுது அவள் நான்காம் வகுப்புப் படிக்கிறாள். படிப்பிலும் கெட்டிக்காரியாகி ஹிந்தியில் ‘ப்ராத்மிக்’, ‘மத்யமா’ முடித்துவிட்டு, ‘ராஷ்டிரபாஷா’ படிக்கிறாள்.

ஆரோக்கியம், படிப்பு, ஞாபகசக்தி அனைத்தும் முனேற்றமடைந்துள்ளாது. என் குழந்தைகள் தினமும் 15 நிமிடத்திலிருந்து 20 நிமிடங்கள் வரை கண்டிப்பாக தியானம் செய்கிறார்கள்.

என் அம்மா ஊராகிய பீமவரத்தில் தட்டவர்த்தி வீரராகவராவ் அவர்கள் நடத்துகின்ற 3 நாள் ஆத்ம ஞான வகுப்பு (Workshop)க்கிற்கு சென்றேன். அவரது வகுப்பிற்குப் பிறகு நாமும் மற்றவர்களுக்கு தியானம் கற்பித்தால் அவர்களும் பலனடைவார்கள் என்று கருதி, நானும் பிறருக்கு தியானம் கற்றுக் கொடுக்கிறேன். “ஸ்ரீசைல தியான யக்ன”த்தில் எனக்கு நிறைய தியான அனுபவங்கள் கிடைத்தன. பூர்வ ஜன்மங்களில் செய்த பாவத்தினால்தான் இப்பிறவியில் ஆஸ்துமா மற்றும் சில பிரச்சினைகள் வந்தன என்று புரிந்து கொண்டேன். நமக்கு எந்த பிரச்சனைகளோ, நோயோ எது வந்தாலும் முற்பிறவிகளில் நாம் செய்த பாவங்கள்தான் காரணம் எனப்புரிந்து கொண்டேன். நம் பிரச்சனைகளுக்கும், துன்பங்களுக்கும் வேறு யாரும் காரணம் அல்ல என்ற சத்தியத்தைப் புரிந்து கொண்டேன்.

இந்த அனுபவத்தின் மூலமாக வாழ்க்கையில் எனக்கு வரும் எந்தவிதமான பிரச்சனைகளையும் தியானத்தின் மூலமாக சமாளிக்க முடியும் என்கிற மன தைரியம் கிடைத்தது. பத்ரிஜியின் மேற்பார்வையில் நடைபெறும் தியான யக்ஞத்திற்கு வந்தவர்கள் தங்களுடைய எத்தனையோ ஜன்ம கர்மங்களை எரித்திருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் செய்யும் “ட்ரெக்கிங்” (காட்டில் பயணம்) கூட, அதற்காகத்தான் என அனுபவபூர்வமாகப் புரிந்து கொண்டேன். எல்லோரும் இதுபோன்ற தியான யக்னத்தில் பங்கு பெற்று தங்களுடைய ‘கர்மா’வை எரித்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

எனக்கு 2010 ஜுலையில் இதய துடிப்பு பிரச்சனை ஏற்பட்டு கணவரின் வற்புறுத்தலால் மருத்துவரிடம் சென்றேன். டாக்டர் ‘மாஸ்டர் செக்கப்’ செய்து ரிப்போர்ட் கொண்டு வரச்சொன்னார். நாங்கள் ஒரு வாரம் கழித்து வர அனுமதி பெற்றுக் கொண்டோம்.

பின்னர் நான், என் கணவரிடம், “தியானத்தின் மூலமாக நான் எவ்வளவோ பிரச்சனைகளை சரிசெய்து கொண்டிருக்கிறேன். தியானத்தின் மூலமாகவே இதையும் சரி பண்ணிவிடுவேன்” எனக்கூறி விடியற்காலை 3 மணி நேரமும் சமையலுக்கு பின் 2 மணி நேரமும் தியானம் செய்ய ஆரம்பித்தேன். 3வது நாள் எனக்கு ‘பீட்டர் ஹேன்டர்சன்’ என்ற ஆஸ்ரடல் மாஸ்டர் வந்து இருதயத்தில் உள்ள ரத்த நாளத்தை எடுத்து சுத்தம் செய்ததை தியானத்தில் உணர்ந்தேன். அந்த நொடியிலேயே என் இருதயத்திலுள்ள நோய் போய்விட்டது. அதன் பிறகு மருத்துவரிடம் செல்லவில்லை.

அன்றிலிருந்து, அதே நேரத்திற்கு தியானம் தவறாமல் செய்து வருகின்றேன்.

இது நடந்து 30 நாட்களுக்குப் பிறகு, பெளர்ணமி அன்று மெளன விரதம் இருக்க வேண்டும் என்ற தகவல் தியானத்தில் கிடைக்கப்பெற்றேன். அதன்பின் தொடர்ந்து 3 நாட்கள் மெளனம் கடைப்பிடித்தேன். பெளர்ணமி அன்று மட்டும் 10 மணிநேரம் தியானம் செய்தேன். 6 மணிக்குப் பிறகு நிறைய பிரச்சனைகள் ஆரம்பித்தன. 104F காய்ச்சல், உடல்வலி, ஏதாவது விழுங்கினால்  தொண்டை வலி, இந்த துன்பங்களைத் தாங்க முடியாமல் ‘யாராவது என்னை கொலை செய்தால் கூட பரவாயில்லை’ என்று தோன்றியது. அதிக நேரம் தியனம் செய்வது நல்லது என்று எல்லோரும் சொல்வார்களே, நமக்கு ஏன் இவ்வாறு ஆகிவிட்டது என்ற கேள்வியுடன் நான் தியானத்தில் அமர்ந்து விட்டேன். அப்பொழுது ஷீரடி சாய்பாபா தென்பட்டார். அவர், “உனக்கு மிகப்பெரிய செயல்பாடு நடந்துள்ளது. ஆப்ரேசனுக்கு பிறகு உள்ள உடல்நிலை இது” என்று கூறினார். எனக்கு இதய நோய் வந்தபோது சரியான இரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால் என் மூளைக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு உடலில் பாதிபாகம் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டும், தொண்டையில் உள்ள உணவு குழாயில் வீக்கம் ஏற்பக்டு அதன் மூலமாக பெரிய பொருள்களை விழுங்க முடியவில்லை என்றும், இந்த உடல் சுத்திகரிப்பை டாக்டர். மைக்கேல் (ENT Specialist) என்ற ஆஸ்டரல் மாஸ்டர் செய்ததாக பாபா கூறினார்.

உண்மையாகவே 4 நாட்கள் நான் எதையும் சாப்பிட முடியவில்லை. இதனால், என் அனுபவத்தை, நானும் என் வீட்டுக்காரரும் தியானத்தின்பால் அசைக்க முடியாத நம்பிக்கை வைப்பதற்காக இவ்வாறு நடந்திருக்கும் என்று தோன்றுகிறது. இப்பொழுது உள்ள ஆரோக்கியமின்மை மட்டுமல்லாமல் இனிமேல் வரலாம் எனும் நோய்களைக்கூட தியானத்தினால் குணப்படுத்திக் கொள்ளலாம் என்பதனை இதன் மூலம் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

என் கணவரும் தியானத்தின் மூலமாக தனக்கு வந்த தைராய்டு நோயை குணப்படுத்திக் கொண்டார். சக்ர நாற்காலியில் நடைபிணமாக வாழ வேண்டிய நான், தியானத்தினை தொடர்ந்து செய்வதின் மூலமாக ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும், மற்றவர்களுக்கு தியானத்தை கற்பித்து ஆத்ம ஆனந்தத்துடன் சந்தோஷமாக வாழ்கிறேன்.

எனக்கு தியானம் கற்றுக் கொடுத்த கீதா மேடத்திற்கும், உலகிற்கே தியானம் சொல்லிக் கொடுக்கின்ற பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்களுக்கும் ஆயிரமாயிரம் நன்றிகள்.

நீங்கள் அனைவரும் தியானம் செய்து என்னைப்போல ஆனந்தமாக வாழுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

திருமதி. மாலதி மாணிக்கியாலராவ்

அஹமதாபாத்


தியான குருவிற்கு வணக்கம்.

ஆன்ம குரு சுவாசத்திற்கு வணக்கம்.

எல்லாவற்றிற்கும் ஆதாரமான விஸ்வசக்திக்கு வணக்கம்.

 

என்னுடைய பெயர் திருமதி. டாக்டர் தெய்வம் கோவிந்தசாமி. நான் திருச்சிராப்பள்ளியில் வசிக்கிறேன். என்க்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். என் குடும்பத்தினர் அனைவரும் மருத்துவர்களே. அனைவரும் பக்தி மார்க்கத்தில் ர்ள்ளவர்கள்.

என் தந்தையார் ஆன்மிகம் கலந்த காந்தியவாதியாவார். எங்கள் வீட்டுத் தோட்டத்ஹ்டில் அழகிய நீர் ஓடையின் அருகிலே ஒரு சிற்கிய பிள்ளையார் கோயிலைக் கட்டி தினமும் பூஜைகள் செய்வதின் மூலமாக எங்களையும் பக்தி மார்க்கத்துடன்யே வளர்த்தார்.

என்னிடம் சிறு வயது முதலே ஆன்மிகத் தேடல் மிகுதியாக இருந்தது. அதன் காரணமாக இந்து, கிறிஸ்துவ மற்றும் முகமதியர்களின் புனித நூலகள், இதிகாசங்கள், சித்தர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கல் போன்றவர்களின் விரிவுரை அறிவுரைகள், ஸ்தல வரலாறுகள் போன்றவற்றைப் படித்தேன். நிறைய கோவில்களுக்குச் சென்றுள்ளேன். எனக்கு மிகவும் பிடித்தமான கடவுள் திருப்பதி ஏழூமலையானும், ஸ்ரீரங்கம் அரங்கநாதரும் ஆவர். இவர்களின் அருளால் எனக்கு நிறைவான வாழ்க்கையே கிடைத்தது. ஆனாலும் என் ஆன்மிகத் தேடலுக்கான விடை மட்டும் கிடைக்கவேயில்லை. நமக்கு அப்பாற்பட்ட ஒர் பெரிய சக்தி நம்மை வழி நடத்துகிறது என்று என் மனம் கூறிகொண்டேயிருக்கும்.

அதன் பின்னர் படிப்பு, திருமணம், குழந்தைகள், தொழில் என்று என் வாழ்க்கை வேகமாக ஒடிக்கொண்டிருந்தது. பேரப்பிள்ளைகள் பிறந்த பின்னரும் ஆன்மிகச் சிந்தனை அதிகமாகியது. என்னுள் எழுந்த கேள்வி என்னவென்றால், பிறக்கின்றோம், வளர்கின்றோம், திருமணம், பிள்ளைப்பேறு, தாத்தா, பாட்டியாகி பின்னர் இறக்கின்றோம். இதுதானே வழிவழியாக நடக்கின்றது. இதுதானா வாழ்வின் லட்சியம், இதற்காகவா இம்மனிதப் பிறவி? இதற்கு முடிவு இருக்கின்றதா? இல்லையா? என்பதே. இதற்கான விடை மட்டும் எனக்குக் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் நான் கை, கால்களில் வலி, உறக்கமின்மை, பித்தப்பையில் கல் (Gallbladder stone) போன்ற பிரச்சனைகளால் அவதியுற்றேன். சிறிது நேரம் கூட நிற்கவோ, நடக்கவோ முடியாது. (ஆனால் ‘ஆனாபானசதி’ தியானத்திற்கு பின்னர் ‘திருவண்ணாமலை கிரிவலமே’ சென்று வந்துவிட்டேன் என்பது வேறு விஷயம்)

மருத்துவ முறைகள் நிரந்தர பலனளிக்கவில்லை. வயதானால் இது போன்றவை சகஜமானதுதான் என அறிவுறுத்தப்பட்டேன். என் மகன் பித்தப்பை கல்லுக்கு அறுசை சிகிச்சை செய்யுமாறு கூறினான். எனக்கு அதில் உடன்பாடில்லை.

இந்நிலையில் நான் ‘வாழ்க வளமுடன்’, ‘வேதாத்ரி மகரிஷியின்’ யோகா, தியானம் போன்றவைகளைக் கற்றேன், அதிலும் ஒரு பிடிப்பு ஏற்படவில்லை.

பின்னர் ஒருநாள் என் மகள் திருமதி. தேவி பாலசிங்கம், தான் சென்னையில் கேள்விபட்டு அறிந்த ‘ஆனாபானசதி’ தியானம் மற்றும் ‘பிரமிட் ஸ்பிரிட்சுவல் சொசைட்டியின்’ செயல்பாடுகளைப் பற்றியும், தியானமுறை, ஆசான்களின் அனுபவங்கள் போன்றவற்றையும் தொலைபேசியிலியே எங்களுக்கு கூறி அனைவரையும் தியனம் செய்யுமாறு கூறினாள்.

என்னுடைய சுவாச்த்தினை கவனிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே என்னுள் ஏற்பட்ட மாற்றங்களினால் மிகவும் ஆர்வத்துடன் தியானப் பயிற்சியை மேற்கொண்டேன். அதன்  பிறகு அதன்பால் ஏற்பட்ட ஈர்ப்பினால் சென்னைக்கு வந்து, என் மகள் வீட்டில் இருந்தபடியே ஜுன் 1, 2009 முதல் ஜுன் 10, 2009 வரை நெற்குன்றத்திலுள்ள பிரமிட் ஆசான் திருமதி. பிரசாந்தி சந்திரசேகர் அவர்களின் பிரமிடினுள் இருவேளை தியானம், ஆலோசனைகள், வகுப்புகள், புத்தகங்கள் படிப்பது என என் நாட்கள் பயனுள்ளவாறு கழிந்தன.

அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து 3 முதல் 4 மணி நேரம் தியானம் செய்கிறேன். உடல் வலிகள் பறந்தே போய்விட்டன. நன்றாக உறங்குகின்றேன். மாதம் ஒருமுறை திரவ உணவு ஊசி மூலம் (saline) ஏற்றுவதும், ரூ.600/- பெருமானமுள்ள வைட்டமின் மருந்துகளை மாதாந்திர மளிகை செலவில் வாங்குவதும் அடியோடு நின்றுவிட்டன. தினமும் இரவு தேன் கலந்த பால் ஒரு டம்ளர் குடித்து, வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என்றால் அசைவ உணவை உண்ண வேண்டும் என்ற மனோ நிலை மாறி, சைவ உணவால் மட்டுமே பூரண ஆரோக்யம், மன, உடல் வலிமை, நிம்மதி, சந்தோஷம் போன்றவை பெறலாம் என்பதினை உணர்ந்து, வீட்டிலுள்ள புது பாத்திரங்கள் வாங்கி சைவ உணவு சமைக்க ஆரம்பித்தேன். வீட்டில் (2’x2′) பிரமிடும் வாங்கி வைத்தேன்.

எனக்கிருந்த ‘பித்தப்பைக் கல்லால்’ கடுமையான உணவுக் கட்டுப்பாட்டினை கடைப்பிடிக்க நேர்ந்தது. பால், நெய், தயிர், எண்ணை, ஐஸ்கிரீம் இவற்றை அறவே ஒதுக்க வேண்டும். ஆரம்பத்தில் ‘ஸ்கேன்’ செய்தபொழுது அக்கல்லின் வளர்ச்சி 6.8 மிமீ அளவு இருந்தது. ஆனால் இன்று நம் குருஜி ‘பிரம்மர்ஷி பத்ரிஜி’ அவர்களின் நல்லெண்ணத்தின் காரணமாக அவர் பிரச்சாரம் செய்யும் ‘ஆனாபானசதி’ தியானம் மூலமாக என் உடல் உபாதைகள் அனைத்தும் நீங்கித் தற்பொழுது 15.06.2012ல் எடுத்த ஸ்கேனில் கல்லின் அளவு 1.5 மிமீ என்றும் முன்பிருந்த Fatty Liver என்பது Normal Liver என்றும் ‘ரிபோர்ட்’ வந்துள்ளன. அன்றோ எனக்கு மிகவும் சந்தோஷம், ஸ்கேன் செய்த டாக்டரிடம், “நான் மருந்துகளின்றி தியானம் மூலம்தான் இக்கல் வெகுவாகக் குறைந்தது” என்றேன். அவர்களும் ஆச்சரியத்துடன், “எங்களுக்கும் கற்றுத் தாருங்கள்” எனக் கூறி அங்குள்ள நர்சுகள், வார்ட்பாய் போன்றவர்களையும் அழைத்து அனைவருக்கும் தியானத்தினை கூறச் செய்தார்கள். மிகவும் எளிதாக உள்ளதாகவும், தங்கள் குடும்பத்தினருக்கும் கற்றுக் கொடுக்கப் போகவதாகவும் கூறினார்கள். அதன்பிறகு ஸ்கேன் செய்யவில்லை. இன்று பூரணமாக கரைந்திருக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில் எவ்வகை உணவு கட்டுப்பாடுகளும் இன்றி அனைத்து சைவ உணவையும் உண்கிறேன். எந்தவித உடல் கோளாறும் இல்லை.

நான் தியானம் செய்யும்பொழுது தன்னிச்சையின்றி தானாகவே உடற்பயிற்சிகள் ஏற்படும் (காயானுபாசனா). சாதாரணமாக உடற்பயிற்சியின்போது களைப்பு ஏற்படும், கால்களைத் தூக்கவே முடியாது, ஆனால் தியானத்தில் தன்னிச்சையின்றி, சுறுசுறுப்பாகவும், ஆர்வமுடனும் ஒவ்வொரு பகுதிக்கும் பயிற்சி கிடைக்கின்றது.

தற்பொழுது எவ்வித மருந்துகள், டாக்டர்களின் ஆலோசனைகள் எதுவுமின்றி பூரண ஆரோக்கியத்துடன், சோர்வின்றி, ஆனந்தமாக இருக்கின்றேன். ‘Take it Easy’ ‘எல்லாமே சுலபம்’ என்று எல்லாவற்றையும் ஏற்கும் மனப்பக்குவம் தானாகவே வாய்த்து விட்டது.

நான், என் ஆன்மிகத் தேடல் மற்றும் ஓய்வு எடுக்க வேண்டியதின் அவசியத்தால் மருத்துவ தொழிலை செய்வதில்லை. இருந்தாலும் என்னிடம் வரும் என்னுடைய பழைய நோயாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் ‘தியானம் செய்யுங்கள், நோயும் வராது, மருந்தும் வேண்டாம், டாக்டரும் வேண்டாம்’ எனக்கூறி வர்கிறேன். உறவினர்கள், நண்பர்கள், வங்கி, பள்ளி என்று என்னால் முடிந்த அளவு அனைவருக்கும் தியானம் கற்றுத் தருகிறேன். ‘தியான வித்வான் மணி’ திருமதி. கிரிஜா ராஜன் மற்று திரு.ராஜன் தம்பதியரின் நல்லுதவியால் திருச்சி, தஞ்சை, கும்பகோணம் போன்ற இடங்களில் தியானப் பிரச்சாரம் மேற்கொண்டதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

என்னுடைய நெடுநாளைய ஆன்மிகத்தேடல் மற்றும் வாழ்வியல் கேள்விக்கான பதில் கிடைத்து விட்டது. அது என்னவென்றால், “நாம் இதுபோன்ற எண்ணற்ற பிறாவிகளை எடுத்து துன்புற வேண்டிய அவசியமே கிடையாது. நாம் நினைத்தால் பிறவிகளற்று இருக்கலாம் என வெகு எளிதாக குருஜி கற்றுத் தந்த தியானம் பறை சாற்றுகிறது”.

குருஜி வருடக் கடைசியில் நடத்தும் தியான யக்ஞங்கள் பெருமதிப்புடையவை. நான் இம்முறைதான் ‘அமராவதி தியான சக்ராவிற்கு’ சென்றேன். என் தாயின் வீட்டில், திருமணத்திற்கு முன்னர் என் சகோதர சகோதரிகளுடன் கவலையற்று இருந்தது போன்று இருந்தது. 3 வேளை இலவசமாக உணவு, காதுக்கினிய சங்கீதங்கள், மனதுக்கினிய தியானம், புத்தரின் அமராவதியில் அதிகாலை 4 மணி தியானத்தில் பங்கு பெறுவதற்கு நடந்து சென்றது இவையனைத்தும் அற்புதமாக  இருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் இது போன்ற அரிய நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள வேண்டும். அனைவரும் தியானம் செய்தும் “தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பது போல் தியானத்தை மற்றவர்களுக்கும் கற்றுத் தர வேண்டும். ‘தியான சக்ராவின்போது’ கிடைத்த சக்தி அளவிட முடியாது.

 

என் வாழ்விலும், ஆன்மிகத்திலும், பொதுவாழ்விலும் சுதந்திரமாக முன்னேற எனக்குப் பெரும் ஒத்துழைப்பு தரும் என் கணவருக்கு மனமார்ந்த நன்றிகள்.

தியான குரு பத்ரிஜிக்கு கோடி நன்றிகள்.

ஆன்ம குரு சுவாத்திற்கு கோடி நன்றிகள்.

எல்லாவற்றிற்கும் ஆதாரமான விஸ்வசக்திக்கு கோடி நன்றிகள்.

 

திருமதி. டாக்டர். தெய்வம் கோவிந்தசாமி

திருச்சி


தியானம் செய்யும் மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் இனிமையான நாள்

அருமையான நண்பர்களே.

என் பெயர் தீப்தி. நான் B.Sc Final Year Nutrition & Dietetics படித்துக் கொண்டு இருக்கிறேன். நான் 2006ல் தியானம் செய்யத் தொட ங்கினேன். அன்றைய தினத்திலிருந்து தொடர்ந்து 2 மணி நேரம் தியானம் செய்கிறேன்.

நான் +2 படித்துக் கொண்டு இருக்கும் சமயத்தில் என் உடல்நிலை சரி இல்லாமல் போனது. மிகுந்த வயிற்று வலியல் அவதிப்பட்டேன். நான் பள்ளிக்குச் செல்லும்போது கடையில் உள்ள சிற்றுண்டி உணவுகளை சாப்பிட்டதால் வயிற்றில் விஷமேறிவிட்டது. டாக்டர், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், ஆனால் அதற்குத் தேவையான இரத்தம் இல்லாததால், இர்த்தம் உற்பத்தி ஆவதற்கு மருந்துகள் உட்கொண்டு உடம்பை அலட்டி கொள்ளலாமல் தூசி, அழுக்கு போன்றவற்றிலிருந்து விலகி 3 மாதங்கள் ஓய்வு எடுக்கச் சொன்னார். பரிட்ச்சைக்கும் செல்ல வேண்டாம் என்றார், 2 வாரங்கள் கழித்து வருமாறு டாக்டர் கூறினார்.

அப்போது அம்மவின் ஆலோசனைபடி திருமதி. சொர்ணமலா பத்ரி அவர்களை பார்த்தோம். அப்போது அவர்கள் தியானம் எப்படி செய்ய வேண்டும் என்று முறையாக கற்றுக்கொடுத்து 41 நாட்கள் தினமும் 3 மணி நேரம் தியானம் செய்யுமாறு கூறினார்க்ள். அவ்வாறு செய்ய முதலில் எனக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனால் அம்மாவின் வற்புறுத்தல் மூலமாக நான் 2 வாரங்கள் தியானம் செய்தேன். பின்னர் டாக்டரிடம் சென்றோம். டாக்டர் என்னை பரிசோதித்து விட்டு உடம்பில் இரத்தத்தின் அளவு 6லிருந்து 11வரை உயர்ந்து இருக்கிறது டாக்டர் ஆச்சரியப்பட்டு எனக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை சிறிது ஓய்வு எடுத்தால் போதும் என்று கூறி விட்டார். இந்த் 2 வாரங்களில் அடைந்த தியான அனுபவங்கள் மற்று என் உடல் நிலையின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்து நானே உற்சாகமாக தினமும் 3 மணி நேரம் தியானம் செய்து பின் ஒய்வு எடுத்துக் கொண்டு வந்தேன்.

ஒரு மாதம் கழித்து டாக்டரிடம் சென்றேன். அவர் பரிசோதித்து விட்டு “நீ நன்றாக உள்ளாய். இனி நீ பரிட்ச்சைக்கு செல்லலாம்” என்று கூறினார். தேர்வுக்குப் படித்தல், மற்ற நேரத்தில் தியானம், ஒய்வு என்று இருந்தேன்.  அதிக நேரம் தியானம் செய்ததால் எனக்கு கஷ்டம் இல்லாமல் பரிட்ச்சை எழுதினேன். எல்லோரையும்போல் நானும் Resultக்கு காத்துக்கொண்டு இருந்தேன். எப்போதும் தியானத்தை விடவில்லை. அந்தப் பரீட்ச்சையில் நான் 65% மதிப்பெண்களை எடுத்தேன்.

என்னை டாக்டர், பரீட்ச்சையே எழுதவேண்டாம் என்றார், பிறகு அவர் எழுதச் சொன்னதும், நான் பரீட்ச்சைக்கு முந்தைய தினம் படித்து 65% மதிப்பெண்கள் பெற்றதும், எனக்கும், என் குடும்பத்திற்கும் மற்றும் என்னைச் சுற்றி உள்ள அனைவருக்கும் ஆச்சிரியத்தைத்தந்தது. இவை எல்லாம் 2006ஸ் நடந்தன.

உடல்நிலை சரியில்லாதபோதும்கூட நான் செய்த தியானத்தால்தான் ஆனந்தமும் ஆரோக்கியமும் கிடைக்க பெற்றேன். உடல் நான்றாக இருக்கும் போது தியானம் செய்தால் இன்னும் எவ்வளவு சக்தியை பெறலாம் என்று சிந்தித்தேன் அன்றைய தினத்திலிருந்து, தினமும் 2 மணி நேரம் தியானம் செய்து கொண்டு இருக்கிறேன். அதன்பிறகு எனக்கு படிப்பின் மீது மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. என்னுடைய அம்மா, அப்பா எது சொன்னாலும் என்னுடைய நலனைக்கருதி நன்மையைத்தான் சொல்வார்கள் என்ற எண்ணம் உருவாகி, அவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

எனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் நான் அமைதியாக தியானத்தில் அமர்வேன். நான் தியானத்தில் இருக்கும்போது அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு குருமார்களிடம் இருந்து எனக்குக் கிடைத்துவிடும். நான் அதன்படி தீர்வு காண்பேன். அதனால், இப்பொழுது என் படிப்பு பற்றியும், வாழ்க்கை பற்றியும், எந்த வித கவலையோ பயமோ இல்லை. என்னுடைய அம்மா 2004ல் இருந்து தியானம் செய்கிறார்கள். அதனால் எனக்குக் கிடைக்கும் தியான அவுபவங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்வேன். ஆன்மிகமான பலவற்றை அவர்களிட மிருந்தும் தெரிந்து கொள்வேன்.

நான் தெரிந்து கொண்டது என்ன வென்றால், ஒவ்வொரு மாணவனும், மாணவியும் தியானம் செய்தால், அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை அவர்களே சரி செய்து கொள்ள முடியும் என்பதே. அது மட்டுமில்லை குடும்பத்தில் உள்ள அனைவரும் தியான்ம் செய்து சந்தோஷமாக வாழலாம். ஆகையால் ஒவ்வொரு மாணவனும், மாணவியும் தியானம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

உங்கள் அன்புள்ள பிரமிட் மாஸ்டர்

தீப்தி

சென்னை


என் பெயர் M.S. பழனிகுமார். நான் சிறு வயதிலிருந்தே முன்கோபக்காரன். பணத்தை ஈட்டுவதில் ஈடுபாடு அதிகமாக இருந்தது. மனைவி, குழந்தை யாராக இருந்தாலும் சரி கோபம் வந்துவிட்டால், யாரையும் மதிக்க மாட்டேன். என்னுடைய குழந்தைகளை மிகுந்த பயபக்தியுடன் வளர்த்தேன். எனக்கு 2 பெண்கள் ஒரு ஆண். அவர்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. பக்திமார்க்கத்தில் இருன்தேன். என்னுடைய மகன் ஜெய்க்குமார், தியானமார்கத்தில் இருந்ததால், என்னையும் ‘தியானம் செய்யுங்கள்’, என்றான். அதன்படி நானும் தியானம் செய்ய ஆரம்பித்தேன். நாங்கள் திருவல்லிக்கேணியில் ஒரு பிரமிட் திறப்பு விழாவிற்குச் சென்றிருந்தோம்.  அதைப் பார்த்ததும் நம் வீட்டிலும் பிரமிட் கட்டவேண்டும் என்ற ஆர்வம் வந்தது. உடனே எங்கள் வீட்டிலும் 12’/12′ ‘பிரமிட்’ கட்டினோம். அது எம் குருவான பத்ரிஜி அவர்களால் திறக்கப்பட்டு, “நாராயணா பிரமிட் தியான மந்திரம்” என்று பெயரிடப்பட்டது. பக்தி மார்க்கத்தில் இருந்த என்னை ஆன்மிக மார்க்கத்திற்கு மாற்றியது, என் மகன்தான், எங்கள் வீட்டின் பூஜை அறையையே எடுத்து விட்டேன் என்றால், அது ஆன்மிகத்தின் சக்திதான். தியானத்தில் கிடைத்துள்ள ஆனந்தம் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. பக்தி மார்கத்தில் இருக்கும் வரை இது எனக்குக் கிடைக்கவில்லை. தியான வகுப்புகள் நடக்கும் போது அவற்றில் பங்கேற்று, ஆனந்தமடைவேன். தியான மார்க்கத்தில் வருவதற்குமுன்பு எனக்கு இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் எல்லாம் இருந்தன. தியானம் செய்யச் செய்ய இவையெல்லாம் இயல்பு நிலையை அடைந்தன. இப்பொழுது என் மனம் மிகவும் அமைதியாகவும், நிம்மதியாகவும் இருக்கிறது. இவ்வுலகத்தில் வாழும் ஒவ்வொருவரும் தியானம் செய்ய வேண்டும் என்று சங்கல்பம் செய்துக்கொண்டு தியானத்தில் அமர்வேன்.

இப்படிக்கு பிரமிட் தியான மாஸ்டர்

M.S. பழனிகுமார்.


வணக்கம். என் பெயர் வி.செல்வகணேசன். நான் தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், ஆர்.புதுப்பாளையத்தில் வசித்து வருகிறேன். 2007ம் ஆண்டு திருவண்ணாமலை கிரிவலம் செல்லும்போது, அக்னிலிங்கம் எதிரில் இலவச தியானம் என்று சொல்லக் கேட்டு, பிரமிட்மாஸ்டர், திருமதி. சாந்தி அவர்கள் தியான முறையை எனக்கு அறிமுகப்படுத்தினார். ஆனால் நான் தியானத்தை தொடரவில்லை.

அதன்பிறகு இரண்டு வருடம் கழித்து மீண்டும் அதே இடத்தில் சென்னையில் இருந்து வந்த தியான்ப் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்த பிரமிட் தியான மாஸ்டர் பிரேமா அவர்கள் தியான முறையைச் சொல்லிக் கொடுத்தார்கள். தியானத்தின் மகிமையை அப்போதுதான் உணர்ந்து கொள்ள முடிந்தது.

தினமும் அவரவர் வயதுக்கேற்றபடி, தியானம் செயய்ச் சொன்னார். பிறகு, வீட்டில் ஓய்வு கிடைக்கும் நேரங்களில் தொடர்ந்து பிரமிட் (ஆனாபானசதி) தியானம் செய்து வருகிறேன். தற்சம்யம் ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம் பெற்று தியான்த்தின்மேல் அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன். என் அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

ஒருநாள், நான் இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று கண் விழித்துப் பார்த்தேன். அச்சமயம், என் எதிரில் வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் தெரிந்தது. முதலில், நான் பயந்துவிட்டேன். அந்த உருவம், “பயப்பட வேண்டாம் நான் பத்ரிஜி தான்” என்று என்னிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். பின், என்னிடம், “ஆனாபானசதி தியானத்தை தொடர்ந்து செய்து வரவும். உங்களுடைய பிரச்சனைகள் யாவும் மடிந்து, மறையும்” என்று அறிவுறுத்திவிட்டு மறைந்து விட்டார். இந்த அனுபவம் என்னால் நம்ப இயலவில்லை. ஆனால் இது எண்மை.

நான் ஓவியராகப் பணிபுரிந்து வருகிறேன். தொடர்ந்து ஓவியம் வரைந்து வந்ததால் என்க்கு கழுத்தில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது, சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக நான் இந்த வேதனையை அனுபவித்துள்ளேன். மேலும் வலி காரணமாக தொழிலில் கவனம் செலுத்த முடியாததால் என் தொழிலில் பாதிப்படைந்தது. வீட்டில் எந்நேரமும் படுத்த வண்ணமாய் இருந்தேன்.

பல மருத்துவங்கள் செய்தும், எந்தப் பலனும் ஏற்படவில்லை. நான் செய்து கொண்ட அனைத்து மருத்துவ பரிசோதனை ஆவணங்கள், என்னிடம் இன்றும் உள்ளன. நான் தொடர்ந்து, ‘ஆனாபானசதி தியானம்’ செய்து வந்ததில் இப்பொழுது முழு குணம் அடைந்துள்ளேன். இந்த வேதனையிலிருந்து விடுதலை அடைந்த நான், என்னை தியானத்திற்கு அறிமுகப்படுத்திய திருமதி. சாந்தி மாஸ்டர், திருமதி. பிரேமா மாஸ்டர் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என்னுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்த பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்களுக்கும் எனது வாழ்நாள் முழுவதும் கடன்பட்டுள்ளேன்.

நான் யோகாசனம் பயின்றதில்லை. ஆனால் நான் தியானத்தில் அமரும்போது என்னை அறியாமலேயே, பலவித யோக முத்திரைகள் செய்கிறேன். அதன் காரணத்தை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. நான் சில தியான மாஸ்டர்களிடம் கேட்டதற்கு அவர்கள் நீங்கள் முற்பிறவியில் செய்த யோகாசனப் பயிற்சியாலும், தற்போது தியானத்தின் பலனாலும், உங்களால் அவ்வறு செய்ய முடிகிறது என்று கூறினார்கள்.

நான் பொதுவாக, மிடுந்த முன் கோபம் உள்ளவன். ஒரு சமயம், என் மூத்தமகன் தியானத்தில் அமரவிடாமல் அடம் செய்ததால், நான் அவனை அடித்துவிட்டேன். பிறகு, நான் தியானம் செய்தபோது, கோபப்படக் கூடாது, அவசரப்பட்க் கூடாது, பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், என் மகனிடம் சென்று மன்னிப்பு கேட்குமாறும் மற்றும் இதற்கு முன்பு நான் கோபப்பட்ட அனைவரிடத்தும் மன்னிப்பு கேட்குமாறும் எனக்கு அறிவுரை கூறப்பட்டது. நானும் அவ்வாறே என் மகனிடத்தில் சென்று மன்னிப்பு கேட்டேன். மற்றவர்களிடம் தியானத்தின் மூலமாக மன்னிப்பு கேட்டேன். இப்போது எனக்கு முன்போல் கோபம் வருவதில்லை.

மேலும் என் தொழில் நலிவடைந்த சமயங்களில் அதற்கு தீர்வு காண தியானம் செய்தபோது, “ஒரு விஞ்ஞானி பல வருடங்கள் கடுமையாக உழைத்தால்தான் விண்ணில் செலுத்தும் ராக்கெட்டை உருவாக்க முடிகிறது. அதுபோல நீயும் பொறுமையாக இருந்து உழை” என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஒருநாள் என் உறவினர் வீட்டில் நான் தியானம் செய்தபோது, அவ்வீட்டில் ஒரு சித்தர் வந்து போவதால், அசைவ உணவு தயாரிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறப்பட்டது. அன்றிலிருந்து  அவர்கள் அனைவரும் என்னைப் போலவே சைவ உணவிற்கு மாறிவிட்டார்கள்.

பலமுறை தியானத்தில் அமரும்போது உணர்ச்சி மிகுதியால், என்னை அறியாமல் அழுதிருக்கிறேன். என் மனைவிக்கும் அவ்வித அனுபவம் ஏற்பட்டதுண்டு. தியானம் செய்வதால் என் மனம் லேசாகிவிட்டது போல் உணர்கிறேன்.

எனக்கு தியானத்தில் ஏற்பட்ட சந்தேகங்களை சேலம் மாஸ்டர் திரு.சங்கர்லால் அவர்களிடம் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்வேன். அன்றிலிருந்து சேலம் நகரில் நடக்கும் அனைத்து தியான பயிற்சி முகாம்களிலும் கலந்து கொண்டு வருகிறேன்.

நானும், என் மனைவி, மக்களும் தொடர்ந்து தியானம் தினமும் செய்து பலனடைந்து வர்கிறோம். இந்த தியானத்தை அனைவரும் கற்று, நன்மை பெற வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.

 

இப்படிக்கு

வி.செல்வகணேசன்,

இராசிபுரம்.


என் பெயர் திருமதி.சொப்னா ஹரி. என்னுடைய ஊர் சென்னை. 2008 நவம்பரில் முதன்முதலாக தியானம் செய்ய ஆரம்பித்தேன். என்னுடைய முதல் தியான வகுப்பில் சீனியர் மாஸ்டராகிய திரு.பிரேம்நாத் சார் அவர்களின் சொற்பொழிவை, நெற்குன்றத்தில் உள்ள திருமதி. பிரசாந்தி சந்திரசேகர் அவர்களின் இல்லத்தில் கேட்டேன். அந்த வகுப்பில் பிரேம்நாத் சார், “மருந்தில்லாமல் நம் உடலின் நோய்களை குணப்படுத்த முடியும், வாழ்க்கையில் எது வந்தாலும் நம் நல்லதுக்குத்தான்” என்றும் “நாம் கற்றுக்கொண்ட தியானத்தை மற்றவர்களுக்கும் கற்ற்குக் கொடுக்க வேண்டும்” என்றும் கூறினார்.

அந்த வகுப்பு எனக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது. அன்று எனக்கு தியானத்தில் உடல் வலியை உணர்ந்தேன். நான் தையல் வேலை செய்கிறபடியால் என்னிடம் நிறைய பெண்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கும், மற்றும் எனக்கு தெரிந்தவர்கள், அறிமுகமானவர்கள், அண்டை வீட்டுக்காரர்கள், அனைவருக்கும் தியானத்தைப் பற்றிக் கூறி, தியானம் செய்வதற்காக என் வீட்டின் அருகிலேயெ உள்ள “பிரமிட் வீடான” நெற்குன்றம், திருமதி.பிரசாந்தி சந்திரசேகரின் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன். இதன் மூலம் அநேகர் பயன் அடைந்துள்ளனர். பிரமிட்டின் சக்தியை அனைவரும் பெறுகின்றனர். தியானத்திற்கு முன்னர் எனக்குக் கோபம் மற்றும் டென்ஷன் இருக்கும். யாராவது தவறாக எதாவது சொன்னால், கோபமாக பதில் கூறிவிடுவேன். இதனால், என்னை மற்றவர்கள், “கோபக்காரி” என்றனர். தியானத்திற்குப்பின் என்னுடைய கோபம் குறைந்துவிட்டது. சின்ன நோய்கள் ஏற்பட்டாலும் தியானதின் மூலம் குணப்படுத்திக் கொள்ள முடிகிறது.

முதலில் நான் மட்டும் தியானம் செய்ய ஆரம்பித்தேன். பின்னர், சங்கல்பம் செய்து என் கணவரையும் தியானம் செய்ய வைத்தேன். அன்று முதல் இன்றுவரை என் வீட்டில் அனைவரும் விடாமல் தியானம் செய்து வருகிறோம். முன்பெல்லாம் எங்களுக்குள் சில சச்சரவுகள் வரும். இப்போழுது, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன், சந்தோஷமாக வாழ்கிறோம். முன்னர் என் கணவர் காலை 9 மணிக்குமுன் எழமாட்டார். ஆனால் இப்பொழுது காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து தொடர்ந்து 2 மணிநேரம் தியானம் செய்கிறார். முன்பு சீக்கிரத்திலேயே சோர்ந்து விடுவேன். தியானம் செய்ய ஆரம்பித்த பின்னர் மிகவும் சுறுசுறுப்பாக, கோபம் இல்லாமல் வேலை செய்கிறேன். இப்பொழுது என் கணவரும் அனுசரணையாக இருக்கிறார்.

நானும், என் கணவரும் அசைவம் முன்பு விரும்பி உண்பவர்கள். தியானத்திற்கு பின்னர்தான், ‘ஒரு மனிதன் மற்ற விலங்குகளைக் கொன்று தின்னக்கூடாது’ என்ற உண்மையைப் புரிந்து கொண்டோம். இப்பொழுது நாங்களிருவரும்  சைவ உணவிற்கு மாறிவிட்டோம். அசைவம் சமைத்த பாத்திரங்களையும் மாற்றிவிட்டோம். அசைவத்தை அகற்றியதுமே வாழ்க்கை மிகவும் அமைதியாக மலர்ந்து விட்டது. என் கணவரின் உடல் ஆரோக்யமும் மேம்பட்டிருக்கிறது.

முன்பெல்லாம் என்னை எங்கும் அழைத்துச் செல்லமாட்டார். இப்பொழுது தியான ய்க்ஞம் நடைபெறும் அனைத்து இடங்களுக்கும் (ஸ்ரீசைலம், காஞ்சி, பெங்களூர் பிரமிட்) அழைத்துச் செல்கிறார். எனக்கு ஏதாவது சந்தேகங்கள் வந்தால், மாஸ்டர்களின் மூலமாக அவற்றிற்கு விடை காண முடிகிறது. பெளர்ணமி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்ததும் குருஜி, பெளர்ணமி பற்றிய புத்தகத்தை எனக்குக் கொடுத்தார். சொசைட்டியில் உள்ள புத்தகங்கள், ‘சிடிக்கள்’ மூலமாக நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். இருமாத இதழான ‘பிரமிட் தியான தமிழகம்’ படிக்கின்றேன். வீட்டில் 2’x2′ பிரமிட் வைத்து தியானம் செய்திறோம்.

என் அக்கா மகள் வீட்டில் படுத்துறங்கியதில், உஷ்ணம் காரணமாக வேனல் கட்டிகள் ஏற்பட்டன. 4 நாட்கள் எங்கள் வீட்டின், பிரமிடின் கீழ் படுத்ததும் கொப்பளங்கள் மறைந்துவிட்டன. பிரமிட்டின் அடியில் வைத்த தக்காளி அதிக நாட்கள் கெடாமல் இருக்கின்றன. ஒருமுறை ஒரு மணி நேர பெளர்ணமி தியானம், ஒரு நிமிடத்தில் முடிந்தது போல் இருந்தது. எனக்குக் கிடைக்க வேண்டியது அனைத்தும் கிடைக்கின்றன. அனாவசிய கோரிக்கைகள் மனதில் எழுவது கிடையாது. நான் அனாவசியமாக மற்றவர்களிடம் பேசுவது நின்றுவிட்டது.

காஞ்சிபுரம் தியான யக்ஞத்தில் குருஜியின் ‘ஆரா’வைப் பார்த்தேன். எல்லோருக்கும் “தியானம்” சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றே என்னுள் ஆவல் எழும். ஆகவே, அனைவரும் என்னைப் போலவே, தியானம் செய்து அவரவர்கள் விரும்புகிற பலன்களைப் பெற இயலும்.

 

திருமதி. சொப்னா ஹரி,

நெற்குன்றம்,

சென்னை


நான் நெற்குன்றத்தில் தியான பயிற்சி மையம் அமைத்து, அங்கு தியானம் செய்ய வசதியும் பயிற்சிய்ம் அளித்து கொண்டு வருகிறேன். இந்த ஆனாபானசதி தியானத்தால் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

என் பெயர் பிரசாந்தி சந்திரசேகர். நான் எத்தனையோ ஆரோக்கிய குறைபாடுகளால், அவதியுற்றிருந்தேன். தியானத்தின் பலன் தேட தியானத்தில் 21-1-2006 அன்று அடியெடுத்து வைத்தேன். அதற்கு முன் நான் பல நோய்களுக்கு ஆளாகி பல துன்பங்களை அனுபவித்து வந்தேன். செர்வைகல் ‘ஸ்பான்டைலைட்டிஸ்’ நோயால் வலது கையில் ஒரு சின்ன பையைக் கூட தூக்க முடியவில்லை. நொய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் அடிக்கடி சளி, இருமல், தொண்டை வலி வரும். சின்ன மாற்றங்களைக் கூட என் உடலால் தாங்க முடியாது.

‘ஹார்மோன் இம்பேலன்ஸ்’, டான்சில், வயிற்றுவலி இன்னும் எவ்வளவோ சின்ன பிரச்சனைகளுக்குக் கூட பயம். என்ன நடக்கப் போகிறதோ என்று பயம். மொத்தத்தில் உடலும், மனமும் பலவீனமாகி மனஅழுத்தம் காரணமாக ‘தற்கொலை’ என்ற எண்ணம் வந்து, மறைந்தது. அப்படி செய்தால், குழந்தைகளை யார் கவனிப்பார்கள் என்ற கவலையும் வந்தது. நீண்ட நாட்களாக, அமைதியாகத் தூங்கியதுகூட இல்லை. மருத்துவர்கள் தூக்கத்திற்கு மருந்து கொடுத்தார்கள். கழுத்து வலிக்கு காலர், பயிற்சிகள், நரம்புக்கு தோளில் ‘ஸ்டீராய்டு’ ஊசி கொடுத்தார்கள். என் வாழ்க்கை நரகமாகி விட்டது. இந்த நிலையில் தியானம் பற்றிய உண்மை எனக்கு தெரியவந்தது. இந்த தியானம் என் வாழ்க்கையை மொத்தமாக மாற்றி விட்டது.

நான் தினமும் அதிகாலை 5 மணிக்கு தியான மையத்திற்கு சென்று விடுவேன். தினமும் 2 மணி நேரம் அமைதியாக தியானம் செய்வது, ஆன்மிக புத்தகங்கள் படிப்பது, ஆசான்களின் அறிவுரைகளை ஏற்பது, முடிந்தவரை மற்றவர்களுக்கு தியானம் கற்பிப்பது போன்ற பணிகளை மேற்கொண்டேன். அதற்குள் என் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்வதை அறிந்தேன்.

வாழ்க்கையை நம் கைக்குள் எடுத்துக் கொண்டு நாம் விரும்பும் வகையில் மாற்றியமைத்துக் கொள்ள தியானம் எவ்வாறு உதவி செய்கிறது என்பதை நான் அறிந்து கொண்டேன். எனக்கு அறிவு, மனமுதிர்ச்சி, பரந்த மனப்பான்மை போன்ற நற்குணங்கள் வளர்ந்தது. என்னுள் மனவலிமை பிறந்துள்ளதை அறிந்தேன். சிந்திக்கும் திறன் வளர்ந்தது. இதற்கு முன்னர் பிடிக்காதவர்களைக் கண்டால் கோபம் வரும். குழந்தைகளோடு இணக்கமாக இருக்க முடியாமல் வருத்தம் ஏற்படும். ஆனால் தியானம் செய்ய ஆரம்பித்தபின் இவற்றிலெல்லாம் மாற்றம் நன்றாகத் தெரிந்தது. இன்முகத்துடன், அன்பாகப் பேசும் சுபாவம் ஏற்பட்டது.

இப்போழுது, ஒரு வருடமாக என் வீட்டின் மாடியில் ‘பிரமிட்’ கட்டி. அதனுள் 30 பேர் தியானம் செய்யும் அளவில், எங்கள் தியான மையத்தை நடத்தி வருகிறோம். தினமும் பலருக்கும் தியானம் கற்பித்து வருகிறேன். பெளர்ணமியில் எங்களால் அழைக்கப்படும் பிரமிட் ஆசான்களின் வகுப்பில், அவரவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு ஏற்பட்டு, தத்தம் வாழ்க்கையை நன்னெறிப்படுத்திக் கொள்கின்றனர். உடல் மற்றும் மன ஆரோக்கியம் கிடைக்க தியானம் ஒன்றே வழி என தெரிந்து கொண்டுளள்னர். பிரமிட்டுக்கு வந்து தியானம் செய்பவர்களுக்கு மிக நல்ல பலன் தெரிகிறது. சிலர் 2x2 பிரமிட்களை வாங்கி அவர்கள் வீட்டில் வைத்து, தியானம் செய்து, அதிக பலன்களைப் பெறுகிறார்கள்.

நானும் என் கணவரும், நான்கு வருடங்களாக மருந்து எடுத்துகொள்வது இல்லை. குழந்தைகளுகாக எப்பொழுதாவது மருத்துவர்களிடம் செல்கிறோம். என் வாழ்க்கை இவ்வளவு ஆனந்தமாகவும், எளிதாகவும், சந்தோஷமாகவும் இருப்பதற்கு நான் செய்யும் தியானமே காரணம். எனக்கு இப்பிறவி கொடுத்தது என் பெற்றோர். என் வாழ்க்கையை வரமாக கொடுத்த என் அம்மா, அப்பா, குரு, தெய்வமான பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்களுக்கு ஆயிரம் கோடி வணக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்கிறேன்.

எனக்கு ஒவ்வொரு முறையும் தியானத்தில் உறுதுணையாக இருந்த திருமதி.சுவர்ணஸ்ரீ, பல வகுப்புகள் நடத்திக் கொடுத்த திரு.ஜெகதீஷ் மாஸ்டர் மற்றும் பலபேருக்கு நன்மை செய்கின்ற சென்னையில் தியான மையம் ஆரம்பித்த திரு.மதுசூதனன் அவர்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய நன்றி. இருண்டிருந்த இந்த வாழ்க்கைக்குள்ளே ஒளி என தியானம் வந்து எங்களுக்கு சரியான வழியைக்காட்டியது.

‘தியான ஜகத்’துக்காக பாடுபடுகின்ற மாஸ்டர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். நான் இன்னும் தியானப்பிரச்சாரம் செய்து, ஸ்ரீராமருக்கு அணில் போல தியான ஜகத்துக்காக என்னாலான உதவிகளைச் செய்ய விழைகிறேன். ஆன்மிக புத்தக்ங்கள் மூலம், சிறு வயதிலிருந்து, இருந்து வந்த சந்தேகங்கள் தீர்ந்துவிட்டன. நான் 2009ம் வருடம் டிசம்பரில் 25 முதல் 31ம் நாள் வரை ஸ்ரீசைலத்தில் நடந்த தியான மகா யக்னத்தில் கலந்து கொண்டேன். அந்த ஏழு நாட்களும் மறக்கமுடியாத அற்புதமான தெய்வீக நாட்களாக இருந்தன. பத்ரிஜியின் தகவல்கள், ஆசான்களின் அனுபவங்கள், சங்கீதம், நாட்டியம் அனைத்தும் மகிழ்ச்சியாக, இனிமையாக பயனுள்ளதாக அமைந்திருந்தது.

 

பிரமிட் மாஸ்டர்

திருமதி.பிரசாந்தி சந்திரசேகர்

நெற்குன்றம், சென்னை


என் பெயர் என்.எஸ்.லட்சுமி. நான் செங்கல்பட்டில் வசிக்கிறேன். என் தங்கை மூலமாக நான் தியானத்தை 2005ம் வருடம் ஜனவரி பயின்று கொண்டேன். தியானத்தில் நான் நினைத்தது போல், என் மகனுக்கு, நல்ல குடும்பத்திலிருந்து மணமகள் கிடைத்தாள். பின், ஒருமுறை, என் தியானத்தில் ‘உன் வீட்டில் ஒரு அதிசயம் நடக்கும்’ என்று தகவல் வந்தது. நான் பணம் கிடைக்கும் என நினைத்தேன். கொஞ்சநாளில் என் மகளுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. 73 வருடங்களுக்கு பிறகு என் பாட்டியை அடுத்து, இதுபோல் என் மகளுக்கு இந்த அதிசயம் நடந்தது என்று என் அம்மா மற்றும் மாமா மூலம் அறிந்தேன்.

இரண்டு வருட தியானத்திற்குப்பின் திருமதி.சுனிதா அவர்கள் மூலம் எங்கள் வீட்டில் தியான வகுப்பு ஆரம்பித்து இன்று வரை சிறப்பாக நடைபெறுகிறது. என் மருமகளும் தியானம் செய்ய ஆரம்பித்த மறுவாரமே கர்ப்பம் தரித்தாள். என் தியானத்தில் பத்ரிஜி, ‘உனக்கு பேத்தி பிறக்கும்’ என்றார். அதன்படியே சுகப்பிரசவம் நடந்தது. நான் திருவண்ணாமலை தியான யக்னத்திற்கு சென்று முதன்முதலாக குரு பத்ரிஜி அவர்களைச் சந்தித்தேன். என் தியானத்தில் மலைகள், செடிகள், தண்ணீர் மேல் எல்லாம் நான் பறப்பது போல் கண்டேன். பின் ‘பெங்களூரு பிரமிட் வேலி’ சென்று தியானம் செய்தேன். அங்கு எனக்கு மிக அதிக அளவில் சக்தி கிடைத்தது. மூட்டு வலி குணமாகிவிட்டது. இதுபோல் பல யக்னங்களுக்கும் தியான வகுப்புகளுக்கும் சென்று வந்தால் நமக்கு நல்லது நடக்கும். எனக்கு ‘பி.பி., சர்க்கரை” வியாதிகள் இருந்தன. ஆனால் இப்பொழுது ஒன்றரை வருடங்களாக, எந்த மத்திரையும் இல்லாமல், எந்த டாக்டரிடமும் செல்லாமல் நலமாக இருக்கிறேன். இப்பொழுது, எனக்கு தலைவலி, சளி ஏதாவது வந்தால், 15 நிமிடம் தியானத்தின் மூலம் நிவாரணம் கிடைத்துவிடும்.

நாம் தியானம் செய்வோம்.

அனைவருக்கும் தியானம் கற்பிப்போம்.

என்.எஸ்.லட்சுமி,

செங்கல்பட்டு.


என் பெயர் பாரதி சுதாகர். நான், ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள புங்கனூர் எனும் ஊரில் 1963ம் வருக்டம் ஜுலை மாதம் 6ம் தேதி பிறந்தேன். என் தாயார் திருமதி. முனிலக்ஷ்மி, தந்தையார் திரு.ஸ்ரீராமுலு. எனக்கு இரண்டு மூத்த சகோதரிகளும், ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை உள்ளனர்.

நாங்கள் அவ்வப்போது பாட்டி ஊரான ‘கீழப்பட்ளா’ எனும் கிராமத்திற்கு செல்வது வழக்கம். அந்த ஊரில் மின்சாரம் இருக்காது. எங்கள் தாத்தா மாலைப் பொழுதில் ‘லாந்தர்’ வெளிச்சத்தில் அவைவருக்கும் இராமாயணம், மகாபாரதம் சொல்வார். எங்கள் பாட்டி இரவு உணவின் பொழுது நீதிக்கதைகள், இராஜாக்களின் கதைகளைக் கூறுவார்.

எங்களது குடும்பம் கூட்டுக் குடும்பம். என் தந்தையின் சகோதரர்கள் ஒன்பது பேர். நாங்கள் அவைவரும் பண்டிகை மற்றும் விழா நாட்களில் கலந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைவோம். எனக்கு என் தாயை மிகவும் பிடிக்கும், என் தாய், எனக்கு, எல்லோருடனும் அன்புடன் பழகக் கற்றுக் கொடுத்தார். நான் என் சகோதர, சகோதரிகளுடன் மிகுந்த பாசத்துடன் இருப்பேன்.

என் தந்தை வியாபார நிமித்தமாக 1972ம் வருடம் பெங்களூருக்கு வர நேர்ந்தது. நான் புங்கனூரில் மூன்றாம் வகுப்பு வரை படித்தேன். கன்னட மொழி எனக்கு தெரியாத மொழியானதால் இங்கு மறுபடியும் ஒன்றாம் வகுப்பிலிருந்து படிக்க நேர்ந்தது. எனக்கு படிப்பின் மீது பெரிய நாட்டம் இல்லை. அதனால் பத்தாவது வரை படித்து, அதன் பின் யோகாசனம், வீணை, தையல், தட்டெழுத்து போன்ற பல வகுப்புகளுக்கும் சென்றேன். ஆனால் எதையும் முழுமையாகக் கற்றுக்கொள்ளவில்லை. எனக்கு வீட்டில் அம்மா சொல்லும் வேலையைவிட, வெளியே சென்று செய்யும் வேலைகள் மிகவும் பிடித்திருந்தன.

நான் சிறு வயதிலிருந்தே தைரியமாகவும், தனிமையிலும், வெளியில் செல்வது வழக்கம். புதியவர்களிடம், எனக்குப் பிடித்திருந்தால் மட்டுமே பழகுவேன், பேசுவேன்.

சிறுவயதில் இருந்து “பகவத்கீதை” என்றால் மிகுந்த பிரியம். திரு.கண்டசாலா குரலில் ஒலிக்கும் பகவத் கீதையை கேட்கும்பொழுது, அதன் அர்த்தங்கள் அந்த வயதில் புரியாவிட்டாலும், மனதிற்கு அமைதியாக இருக்கும். ஆன்மிகப் பாடல்கள், வேதாந்த சாரமுள்ள பாடல்கள் இவற்றை ரசித்துக் கேட்பேன். ஆனால், பூஜை, விரதங்கள் மேல் ஆர்வம் இல்லை. கடவுள்களில் சிவபெருமான் என்றால் மிகவும் பிடிக்கும். சிவராத்திரி அன்று உபவாசம் இருந்து, இரவு முழுவதும் தூங்காமல், விழித்துக் கொண்டிருப்பேன்.

எனக்கு 1983ல் சித்தூரில் திரு.சுதாகர் என்பவருடன் திருமணம் நடந்தது. அவர்கள் குடும்பமும் கூட்டுக் குடும்பமே. எனக்கு இரண்டு குழந்தைகள். மகன் செல்வன்.ஹரிஸ்நாக், மகள் செல்வி.சிரிஷா. எனது கணவர் ‘பேப்பர்’  வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அது சரிவர இயங்காததால் 1992ம் வருடம் சேலத்திற்கு வந்தோம். இங்கு என் சித்தப்பா, திரு.ஆந்திர பிரகாஷ் அவர்களின் ஜவுளிக் கடையில், மேனேஜராகப் பணிபுரிகிறார். என் கணவர் வந்த புதிதில் எனக்கு ஊர் புதிது, மொழி தெரியாது. எங்கள் பக்கத்து வீட்டிற்கு ஒரு பிராமண குடும்பம் குடிவந்தது. அவர்களிடம் எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. அக்குடும்பத் தலைவி பெயர்.திருமதி மல்லிகா அவர்களிடம் நானும் குழந்தைகளும் ‘தமிழ்’ கற்றுக் கொண்டோம். அவரிடம் கற்றுக் கொண்ட தமிழ், இப்பொழுது நான் செய்யும் வியாபாரத்திற்கும், தியான பிரச்சாரத்திற்கும் மிகவும் உதவியாக உள்ளது. திருமதி.மல்லிகா எந்த விஷயமானாலும் நன்கு புரியும்படி கூறுவார். அவர்களை நான், தாய், தந்தை, குரு, தெய்வமாகக் காண்கிறேன். இந்த நட்பு இப்பிறவியின் பாக்கியமாகக் கருதுகிறேன். அவர் இது மட்டுமின்றி பல ஆன்மிக விஷயங்களையும் கற்றுக் கொடுத்தார்.

வாழ்க்கை மற்றும் தியான அனுபவங்கள்

நோயின் பிடியில்

எனக்கு 1984ம் வருடத்தில் இருந்து 1994ம் வருடத்திற்குள் ஐந்து அறுவை சிகிச்சைகள் நடந்தன. எப்பொழுதும் மருத்துவர்கள், மருந்துகள் என வாழ்க்கை கசப்பாக இருந்தது. என் கணவரின் வருமானம் முழுவதும் இதற்கே செலவாகிக் கொண்டிருந்தது, இப்படி ஆரோக்கியம் இல்லாமல், பூமிக்கு பாரமாக நான் ஏன் வாழ வேண்டும் என்று நினைத்தபொழுதெல்லாம் என் குடும்பத்தினரின் அன்பும், பரிவும், என்னை வாழ வைத்தது. அதன் விளைவக விரைவில் ஆரோக்கியம் பெற வேண்டும் எனத் தவித்தேன்.

ஆன்மிகத் தேடல் ஆரம்பம்

என் மாமியார் என் கையில் ஜபமாலை கொடுத்து, “ஒம் நம சிவாய” என்று ஜபம் செய்யச் சொன்னார். என் சினேகிதி மல்லிகா, “தியானம் செய், ஆரோக்கியம் பெறுவாய்” என்று கூறினார். இதைக் கேட்டு 1998ம் வருடம் “பிரம்மகுமாரி ராஜயோகா”விற்குச் சென்றேன். அங்கு அவர்கள், “நான் என்பது இந்த உடல் அல்ல, ஆன்மா” என்ற தத்துவத்தை போதித்தனர். அங்கு இரண்டு வருடங்கள் சென்றபோதும் தியானம் என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை. ஆரோக்கியம் பெறவில்லை. 2000மாவது வருடத்தில், ‘சித்த சமாதி யோகாவின்’ (SSY)12 நாட்கள் பயிற்சிக்குச் சென்றேன். அங்கு, யோகாசனங்கள், சூரிய நமஸ்காரம், பச்சை காய்கறிகள் (Raw food) சாப்பிடுவது, 15 நிமிடங்கள் தியானம் செய்வது, போன்றவற்றைக் கற்றுக் கொண்டு பயிற்சி செய்தேன். இங்கேயும், ‘தியானம்’ என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை.

தியானத்தினால் முக்தி

ஸ்ரீ ஸ்ரீ வித்யா பிரகாஷா நந்தகிரி சுவாமிகள் ஆன்மிக தத்துவம், ‘மானஸ போதா’ போன்ற ஆன்மிக தத்துவத்தை திருமதி. வாணி ஜெயராம் அவர்கள் பாடிய பாடல்கள் வாயிலாக மிகவும் விரும்பிக் கேட்பேன். இதிலிருந்து, “இந்த உலகம் ஒரு நாடக மேடை, இதில் நாம் இல்லோரும் நடிக்க வந்துள்ளோம். பொருள் மேல் ஆசையை வளர்த்துக் கொள்ளக் கூடாது, இவையெல்லாம் அழியக் கூடியவை, எதுவும் நிரந்தரமல்ல” என அறிந்து கொண்டேன். தியானத்தினால் நாம் முக்தியை அடைய முடியும் என அறிந்து கொண்டேன். ஆயினும், எத்தனை தியான மன்றங்களுக்குச் சென்றாலும் தியானம் என்றால் என்னவென்று புரியவில்லை, சரியான தியானத்தைத் தேடிக் கொண்டிருக்கும் பொழுது பரமஹம்ஸா யோகானந்தாவின், “ஒரு யோகியின் சுய கரிதம்” என்னும் புத்தகம் படித்தேன். அதை படிக்கும்பொழுது, என்னை நான் மறந்துவிட்டேன். அந்த புத்தகத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு நான் நேரில் சென்று பார்த்த உணர்வும், மாஸ்டர் யோகானந்தா என்னிடம் பேசுவது போலவும் இருந்தது. மஹா அவதார் பாபாஜி, ஸ்ரீ லாஹிரி மஹாசயர், ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரி மகராஜ், ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் இவர்களின் பெயர்கள் மற்றும் ரூபங்கள் என் மனதில் நிலைத்துவிட்டன. இந்த புத்தகம் என் வாழ்வில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது.

விடுதலை பெற்ற நாள்

நம் நாட்டிற்கு ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் கிடைத்தது போல், 2004ம் வருடம் ஆகஸ்ட் 15ம் நாள் என் பொளதிக இன்னல்களில் இருந்து விடுதலைக்கான ஆரம்பநாள். ஆனந்தமான ஆன்மிக வாழ்க்கைக்கு அடியெடுத்து வைத்த நாள், அந்த பொன்னான நாள்.

நான் ‘ஆனாபானாசதி – பிரமிட் தியானம் ஆரம்பித்த நன்னாள்.

திருமதி. பாரதி,

சேலம்


என் பெயர் அமர்நாத். நான் சேலம் மாநகரத்தில் வசித்து வருகிறேன். 2006ம் ஆண்டில் பிரமிட் தியானத்திற்கு என்னை பிரமிட் மாஸ்டர் திருமதி.சுலோச்சனா அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். சாதாரண அமர்நாத் ஆக இருந்த நான் இன்று, “பிரமிட் மாஸ்டர்” அமர்நாத் ஆக உயர்ந்துள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என் தியான அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வது என் கடமை என்று கருதுகிறேன்.

நான் சுமார் 8 ஆண்டுகளாக கடுமையான முதுகு வலியால் துன்புற்று வந்தேன். பல டாக்டர்களிடம் சென்று மருத்துவம் பார்த்தும் குணமடையவில்லை. ஆனால் 2006ம் ஆண்டில் ‘ஆனாபானசதி’ தியானம் பழகி, செய்து வந்ததில் எனது முதுகு வலி முழுமையாகக் குணமடைந்துவிட்டது. அன்றிலிடுந்து, இன்றுவரை நான் எந்த மருந்து மாத்திரையும் எடுத்துக் கொள்வதில்லை.

நான் ஒருநாள் தியானத்தில் அமர்ந்து இருந்தபோது ஒரு முனிவரது தரிசனம் கிடைக்கப் பெற்றேன். அவர் திருமூலர் என்றும், சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியவர் என்றும், அவர் சீடர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். அவரிடம் நான்  பேசமுடியுமா என்று கேட்டதற்கு அவரது சீடர்கள், “அவரை நீங்கள் தரிசனம்தான் செய்ய முடியும், பேச முடியாது” என்று தெரிவித்தனர்.

நான் மீண்டும் ஒருநாள் தியானத்தில் அமர்ந்தபோது, “மெக்கா செல்ல வேண்டும் என்ற எனது அவாவை வெளிப்படுத்தினேன். தியானத்தில் நான் “மெக்கா” சென்று, உள்ளே சமாதியைப் பார்த்தேன். அதன் கீழ் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன். ஆனால் என்னால் பார்க்க முடியவில்லை. அப்போது நம் குரு பத்ரிஜி அவர்கள் என்னை அழைத்துச் சென்று காட்டினார்கள். அதன் அடியில் சிவலிங்கம் இருக்கக் கண்டு அதிசயித்தேன்.

ஒருநாள் நான் திருப்பதியில் தியானம் செய்துகொண்டு இருந்தபோது, “சுவாமி தரிசனம்” கிடைக்க வேண்டும் என்று வேண்டினேன். அப்போது பெருமாளைப் போன்று வேட்டி கட்டிய முனிவர் ஒருவர் என் முன் தோன்றி, “நான் ஒரு சித்தர். மக்களுக்கு நன்மை செய்வதற்காக நான் இங்கு சிலையாக இருக்கிறேன்.” என்று கூறி மறைந்தார்.

நான் இந்த ‘ஆனாபானசதி’ தியானம் செய்ய ஆரம்பித்ததிலிருந்து, அநேக ஆன்மிக அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. நான், இப்போது மிகத் தெளிவுடனும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். அதற்கு நான், குருஜி பிரம்மர்ஷி சுபாஷ் பத்ரிஜி அவர்களுக்கும், எனக்கு வழிகாட்டியாக இருந்து வருகிற திருமதி.கிரிஜா ராஜன் – கோவை, அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், குருஜியின் கட்டளைப்படி “தியான உலகம்” அமைய என்னால் முடிந்த அளவு பாடுபட்டும் வருகிறேன்.

 

இப்படிக்கு

சேலம் பிரமிட் மாஸ்டர் அமர்நாத்


சென்னை துறைமுகத்தில் மின்துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்று, சென்னை மகாகவி பாரதி நகரில், தியான பயிற்சி மையம் நடத்தி வரும் என் பெயர் பாண்டுரங்கன். அண்டை வீட்டில் வசிக்கும் தியான மாஸ்டர் திருமதி.பிரேமா அவர்கள் மூலம், 41 நாட்கள் ‘அனுமான்சாலிசா’ பயிற்சி செப்டம்பர் 24/2009 சென்னை மணலி ஹாஸ்டலில் செய்ய பரிந்துரைக்கப் பட்டேன். 8 வருட காலமாக எனக்கு சர்க்கரை நோய் இருந்தது. தினம் ஒரு மணி நேரமும், ஞாயிறு அன்று 2 மணி நேரமும் இடைவிடாது ‘ஆனாபானசதி’ தியானம் மேற்கொண்டேன். 30வது நாளின் சர்க்கரை நோயால் சரியான பசி எடுத்தது. அன்று இரவு மட்டும் 3 முறை ஆகாரம் எடுத்து உடலின் குளுக்கோஸ் தேவையை சமாளிக்க நேர்ந்தது. மறுநாள் முதல் மாத்திரைகளை சுத்தமாக நிறுத்தி விட்டேன். தியானம் மட்டும் சிறிது அதிக நேரம் மேற்கொண்டேன். மாத்திரைகளை நிறுத்தி 150 நாட்கள் ஆகின்றன. அதன்பின் எவ்வித தொந்தரவும் ஏற்படவில்லை. எல்லா வருடத்தைப் போலவே, இவ்வருடம்(2009) டிசம்பர் 25 முதல் 31 வரை ஸ்ரீசைலம் எனும் இடத்த்ல் ‘தியான மஹாயக்னம்’ பத்ரிஜி அவர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு நான், என் மனைவியுடன் சென்று கொண்டிருந்தபோது, விடியற்காலை 4 மணியளவில் தேனீர் அருந்த பேருந்து நிறுத்தப்பட்டது. மற்றவர்களுடன் நானும் இறங்கினேன். அந்த இடத்தில் தேனீர் சரியில்லை என்று நண்பர்கள் கூறினார்கள்.

எனவே எதிரிலுள்ள கடைக்கு செல்ல சாலையை கடக்க எண்ணினேன். சாலையில் கான்கிரீட் ரோடு ஒரு பாதியில் அமைக்கப்பட்டிருந்தது. விளக்கொளியில்லாததால், சாலையைக் கடக்க எத்தனித்த நான், 8 அங்குல உயர சாலையிலிருந்து தடாலென தடுக்கிக் கீழே விழுந்தேன். கண்ணாடி ஒருபக்கம், செருப்பு மறுபக்கம் என் விழுந்தது கூடத் தெரியவில்லை. வலதுகால் கட்டை விரலும், முன்கால் மூட்டும் மிக அதிகமாக காயப்பட்டு, சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் வடிந்தது. ‘நாம்தான் குருஜி பத்ரிஜியை பார்க்க போகிறோமே. ஏன் இப்படி நடந்தது? நாம் வருவதை அவர் விரும்பவில்லையா? இப்படியே திரும்பி விடுவோமா?’ என பலவாறாக எண்ணியது மனம். காயத்தை துடைக்கக்கூட இல்லை. அப்படியே விட்டு விட்டேன்.

சென்னை திரும்பியதும் ஏழு நாள் குளியலில் தண்ணீர் காயத்தின் மேல் நன்றாகப்பட்டது. தினமும் விடியற்காலை 3 மணி நேரம் தியானம் செய்தேன். 7வது நாள், என் காயம் நன்றாக ஆறிவிட்டது. அப்பொழுதுதான் எனக்கு தெரிந்தது. பிரம்மர்ஷி எனக்கு செய்தி சொல்லியுள்ளார் என்று. அதாவது எந்த மருத்துவமும் இல்லாமல் தியானம் மூலமே வியாதிகளை குணப்படுத்திக் கொள்ள முடியும் என்ற அவரது 7வது கொள்கை மகத்துவம் வாய்ந்தது என்று.

அதன்பின், ஒருமுறை நாங்கள் சென்னையில் குருஜி பத்ரிஜியை சந்தித்தபோது ஸ்ரீசைலம் வந்ததை கூறினோம். “அங்கு உங்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்பட்டிருக்குமே?” என வினவினார். என்னையும் தன் சீடராக ஏற்றுக்கொள்ள அவர் அரங்கேற்றிய நாடகமே இது என நான் அறிந்து கொண்டேன். அப்போது நான் எய்திய புளகாங்கிதத்திற்கு அளவேயில்லை. இப்போது எங்கள் மையத்திற்கு வியாதியுடன் வருபவர்கள், நன்கு தியானம் செய்து தங்கள் நோய்களை தீர்த்து கொள்வதைக் கண்கூடாகக் காண்கிறேன்.

பிரம்மானந்தம் அடைகிறேன்.

 

என்றென்றும் அவர் சேவையில்,

இரா.பாண்டுரங்கன்


எனது பெயர் சூரியகுமாரி. நான் சென்னை முகப்பேர் மேற்கில் வசித்து வருகிறேன். என் தியான அனுபவங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

என் 16 வயதில் “மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்தால் மனம் அமைதியுறும். இதுதான் தியானம்” என்று ஒருவர் கற்றுத் தந்தார். நானும் அந்த விதமான தியானத்தை அவ்வப்பொழுது செய்து வந்தேன். ஆனால் எனக்குள் தியானம் செய்வதால் பலன்கள் பல கிடைக்கும் என்று தோன்றி வந்தது.

23 வயதில் திருமணம் நடந்து பாண்டிச்சேரியில் வசித்து வந்தேன். அன்னை சமாதிக்கு செல்லும் போதெல்லாம் அங்குள்ளவர்களிடம் விசாரிப்பேன். தியானம் செய்தால் மனம் அமைதி அடையும் என்ற பதில் மட்டும் எனக்கு கிடைத்தது.

2001க்கு பின், சென்னைக்கு குடிபெயர்ந்தோம். அந்த சமயத்தில், நாள்தோறும் சளி தொல்லையால் பெரிதும் அவதிப்பட்டேன். வாரம் ஒரு முறை மருத்துவர் என்று இரண்டு வருடம் இப்படியே போனது. அதனாலேயே பலவீனம், மனச்சோர்வு, பயம், இயலாமை, மேலும் எதிர்மறை எண்ணங்களால் அட்கொள்ளப்பட்டேன். வாழ்வு இனிமேல் இப்படித்தான் கழியப்போகிறது என்ற நிராசையுடன் வாழ்வு நகர்ந்தது.

பல அமைப்புகளில் தியானப்பயிற்சி ஒரு வாரம் நடக்கும். மூன்று நாட்கள் நடக்கிறது என்று விளம்பரப் படுத்தும் பொழுது அதைப்பற்றி விசாரித்தால் ரூ.500/-, ரூ.1000/- என்று அதற்கான கட்டணத்தை கூறினார்கள். யாராவது இலவசமாக தியானம் கற்பிப்பார்களா? என்று என் தேடல் தொடங்கியது.

2006-ம் வருடம் ஒரு அமைப்பில் 3 நாள் பயிற்சிக்கு ரூ.1000/- செலுத்தி அங்கு போய் கற்றுக் கொண்டேன். ஆனால் எந்தவித பயனும் இல்லை.

என் உடல் நிலையும் மேற்கூறியபடியே மிக பலவீனமாக இருந்து வந்தது. தண்ணீரில் வேலை செய்வது என்றாலே எனக்கு பயமாக இருந்தது.

எங்கள் எதிர்வீட்டில் வசிக்கும் ரமாதேவி அவர்கள் இலவசமாக ஒரு அமைப்பு தியானம் கற்பிக்கிறார்கள். ஏற்பாடு செய்யலாமா? என்றார்கள். நானும் சரியென்று ஏற்பாடு செய்தோம்.

முதல்நாள் வகுப்பு திருமதி.குமுதா அவர்கள் எடுத்தார்கள். தியானத்தின் பயன்கள் அவர்கள் கூறியதைக் கேட்டு மிக வியப்புற்றேன்.

தினமும் அரைமணி நேரம் தியானம் செய்தேன். பலருக்கும் விளம்பர நோட்டீஸ் கொடுத்து தியானம் செய்யுங்கள் என்று கூறிவந்தேன். என் சளித் தொல்லையிலிருந்து சிறிதளவு மட்டுமே குணம் கிடைத்தது. மேற்கூறிய பிரச்சனைகளில் சிறிதளவு மட்டுமே முன்னேற்றம் இருந்தது. சுமார் ஒரு வருடம் இப்படியே கழிந்தது.

அனைத்து பிரமிட் மாஸ்டர்களிடமும் அவர்கள் சென்னை வரும் பொழுது எல்லாம் ஏன் நான் மட்டும் முழுமையான முன்னேற்றம் அடையவில்லை என்ற கேள்வி எழுப்பினேன். அவர்களும் என்னிடம் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டினார்கள். சிறு வயது முதலே அசைவம் சாப்பிட்டு வந்தேன். அதைத் தவிர்த்து விடுமாறும், எனது தியானத்தின் நேரத்தை அதிகப்படுத்துமாறும் கூறினார்கள்.

அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினேன். தியானத்திற்கான நேரத்தை அதிகப்படுத்தி கொள்ளத்தெரியவில்லை. அதன்பின் குமுதா மற்றும் ஜெகதீஷ் அவர்கள் என்னை பாண்டிச்சேரிக்கு 3 நாள் வகுப்பிற்கு வருமாறு கூறினார்கள். அதுவரை நான் எந்த வகுப்புகளிலும் கலந்து கொண்டதில்லை.

பாண்டிச்சேரியில் 3 நாளும் பெரும்பொழுது தியானத்திலேயே இருந்தேன். அந்த பிரமிடின் கீழ் என்னால் தியானம் தொடர்ந்து நீண்ட நேரம் செய்ய முடிந்தது. நான் சென்னை திரும்பியதும் எனது அன்றாட வாழ்க்கையில் வேலைகள் முடிந்தவுடன் தியானத்தில் உட்கார வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தேன்.

பாண்டிச்சேரியில் 3 நாள் வகுப்பிற்கு பிறகுதான் எனக்கு நிறைய மாறுதல்கள் ஏற்பட்டது. என் எண்ணங்களுக்கு சக்தி கூடியது. எனது எண்ணங்களில் மாறுதல் ஏற்பட்டது. மாத்திரையே எடுத்துக் கொள்ளக்கூடாது என்று உறுதியாக நினைத்துக் கொள்ளமுடிந்தது. என் சளித்தொல்லை மற்றும் மேற்கூறிய விஷயங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டேன். என் மகனையும் அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினேன். எங்கள் வீட்டில் அசைவம் சமைக்கக் கூடாது என முடிவும் எடிக்க முடிந்தது.

“பிரமிட் ஸ்பிரிச்சுவல் சொஸைட்டி” நடத்தும் வகுப்புகளுக்கு செல்வதால் என்ன பயன் இருக்கபோகிறது என்ற என் எதிர்மறையான எண்ணங்களிலிருந்து மாற்றமடைந்திருப்பது மூலமே அனைவரும் வியப்புறும் வண்ணம் என் பலவீனங்கள் மறைந்து இப்போது உறுதியாக இருக்கிறேன்.

நான் தியான பிரச்சாரம் இப்பொழுது செய்ய ஆரம்பித்து விட்டேன். எங்கள் பகுதியல் தியான வகுப்புகளும் எடுக்கிறேன்.

பத்ரிஜி அவர்கள் இலவசமாக தியானத்தை கற்பிக்கச்சொல்கிறார். கற்றுக்கொண்ட தியானத்தை மற்றவர்களுக்கும் இலவசமாக அளிக்கப்படுகிறது வகுப்புகளும் இலவசமாக எடுக்கப்படுகின்றன. இதன் மூலம் “தியான ஜகத்”துக்கு வழி வகுக்கிறார், பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள்.

எந்த அமைப்பு இப்படி போதிக்கிறது? “தீட்சை வேண்டுமா? இவ்வளவு கட்டணம் செலுத்துங்கள்” என்று ஒவ்வொருவரிடமும் பணம் தான் பிரதானம் என்று கூறப்படுகிறதா? முற்றிலும் இதிலிருந்தெல்லாம் மாறுபட்ட இந்த “பிரமிட் ஸ்பிரிச்சுவல் சொஸைட்டியில்” நானும் ஒரு அங்கம் என்பதில் பெருமையடைகிறேன்.

எனது ஐயங்களுக்கு எந்த நேரத்திலும் பதிலளிக்கும் திருமதி.கிரிஜாராஜன், திரு.ஜெகதீஷ் குடும்பத்தினர். திருமதி.குமுதா, திருமதி.ஸ்வர்ணஸ்ரீ, திரு.வெங்கடாசலம் குடும்பம் மற்றும் திரு.தமிழ்மணி ஆகியோர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு இப்படிப்பட்ட தியானத்தை அறிமுகப்படுத்திய திருமதி.ரமாதேவி அவர்களுக்கும் மிக்க நன்றி.

சிறு வயது முதல் புத்தரின் சில போதனைகளை கடைபிடிக்கச் செய்த என் தந்தைக்கும் தாய்க்கும் மிக்க நன்றி.

எனக்கு பல விதங்களிலும் துணையாகவும் ஊக்கமும் அளித்த என் கணவருக்கும் மற்றும் என் மாமியாருக்கும் நன்றி.

 

திருமதி.சூரியகுமாரி.


என் பெயர் ஆனந்தி. நான் மூன்று வருடங்களாக ‘ஆனாபானசதி’ தியான பயிற்சி செய்து வருகிறேன்.சிவகாமி மேடம் அவர்களால் தியான பயிற்சியில் நுழைந்தேன்.முன்பு எனக்கு இருதய நோய் இருந்து வந்தது.தொடர்ந்து தியானம் செய்வதன் மூலமாக நான் குணமடைந்துள்ளேன்.மருந்து மற்றும் மருத்துவத்தை முற்றிலுமாக விட்டு விட்டேன்.மாமிச உணவை கைவிட்டு சைவ உணவிற்கு மாறிவிட்டேன்.பிரமிட் தியானத்தின் மூலம் பல நன்மைகளை அடைந்தேன்.உலகமெல்லாம் இலவசமாக தியானத்தை பரப்பிக் கொண்டிருக்கிற பத்ரிஜி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொட்டியத்தில் பற்பல குருமார்கள் தியானத்தை கற்றுக் கொடுத்தார்கள். பத்ரிஜி அவர்கள் மீண்டும் தொட்டியம் நகருக்கு வருகை தருவதை அனைத்து தியான மக்களுக்கு எதிர்பார்க்கிறார்கள்.

 

D.ஆனந்தி,

தொடியம்,96008 53002


என் அன்பு தியான தமிழகம் வாசகர்களுக்கு என் உளம் கனிந்த நமஸ்காரம், இத்தருணத்தில் “பிரம்மர்ஷி பத்ரிஜி” அவர்களுக்கு இதய பூர்வமான வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு, உங்களிடம் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள எனக்கு வாய்ப்பளித்த “தியான தமிழகம்” பத்திரிக்கை குழுமத்தினருக்கு என் வழ்த்துக்கள் மற்றும் நன்றியை தெரிவிக்கிறேன்.

என் பெயர் சங்கர்லால் நான், எனது தாய், தந்தை, மனைவி, ஒரு மகள், ஒரு மகன் ஆகியோருடன் சேலத்தில் வசித்து வருகிறேன்.

நான் கல்லூரியில் படிக்கும் சமயத்தில் (1985) “சைனஸ்” என்ற வியாதியால் பாதிக்கப்பட்டேன் இதன் பிறகு சுமார் 10 வருடங்ளுக்கு மேலாக சைனஸ் அலர்ஜியால் துன்புற்றுள்ளேன். மாதம் ஒருமுறை, இருமுறை, வாரம் இருமுறை என்று மருந்து உட்கொள்வது அதிகரிக்கத் தொடங்கியது. இச்சமயத்தில் தான் நான் மருந்துகள் இல்லாமல் இயற்க்கையான முறையில் உடலை குணப்ப்டுத்தி கொள்ள வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தேன். இதுவே நான் ஆன்மிக மார்க்கத்திற்கு நுழைய காரணமாய் அமைந்தது.

ஜூன் 2002-ல் மைசூரில் வசிக்கும் என் தமக்கை த்ருமதி.கீதா அவர்கள் மூலம் எனக்கு தியானம் அறிமுகமானது. இதில் சிறப்பு என்னவென்றால், அவர் எனக்கு தொலைபேசி மூலம் ஒரு தியான முறையை சொல்லிக் கொடுத்தார். எனக்கு இந்த தியானத்தின் பெயரும் இதை போதித்துக் கொண்டிருக்கும் குருவின் பெயரும் கூட தெரியாது. அன்று முதல் நாளே நான் தியானம் செய்ய ஆரம்பித்தேன். முதல் நாளே எனக்கு பல அனுபவங்கள் ஏற்பட்டன. ஒரு குருவும் அருகில் இல்லாமலே, எளிதாக இயற்க்கை மாறாத, பாதுகாப்பான தியானம் இந்த “ஆனாபானசதி” தியானம்தான் என்பது என் கருத்து. இன்று என் குடும்பத்தில் அனைவரும் தியானிகள்.

சைனஸ்சால் நான் உடல் ரீதியாக துன்புற்ற காரணத்தை அறிய தியானத்தில் அமர்ந்தேன். நான் ஒரு முன் பிறவியில் ‘அபுபக்கர்’ என்ற பெயருடன் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்திருந்ததை அறிந்தேன். அப்பிறவியில் நீர்வாழ் உயிரினங்களை அதிகம் உட்கொண்டதினால் இப்பிறவியில் ‘சைனஸ்’ தாக்கத்தால் துன்பம் அனுபவித்ததைத் தெரிந்து கொண்டேன். இந்த அனுபவத்தை இங்கு தெரிவிப்பதின் மூலம், அசைவ உணவு உட்கொள்பவர்கள், ‘அஹிம்சை’ மார்க்கத்திற்கு-சைவ உணவிற்கு நிச்சயம் மாறுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

2002-ஆம் வருடம் ஆகஸ்ட்டு முதல்நாள், என் வீட்டிலேயே, மைசூரிலிருந்து படிப்பிற்காக சேலம் வந்திருந்த பிரமிட் மாஸ்டர் “தீபக்” தியான வகுப்பை ஆரம்பித்து வைத்தார். வாரம் ஒரு முறை தியானப்பயிற்சியை மேற்கொண்டோம்.

மேலும் பிரமிட் மாஸ்டர் திரு.ராஜன், மற்றும் திருமதி.கிரிஜாராஜன் அவர்களும் சேலம் வந்து எங்களுக்கு பல வகுப்புகளை நடத்திக் கொடுத்தார்கள், இத்தருணத்தில் சேலம் பிரமிட் ஆன்மிக மன்றம் துவங்கவும், அதன் சிறப்பான வளர்ச்சிக்கு உழைத்த திருமதி.கீதா, மாஸ்டர் தீபக், திரு.ராஜன், திருமதி.கிரிஜா ராஜன் மற்றும் சேலம் பிரமிட் மாஸ்டர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று சேலத்தில் இரண்டு தியான மையங்கள் செயல்பட்டுக் கொன்டிருக்கின்றன. சேலம் பிரமிட் ஆன்மிக மன்றம், பல கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு, பொது மக்களுக்கு என்று தியானம் மற்றும் அஹிம்சையை போதிப்பதை தலையாய கடமையாக மேற்கொண்டு வருகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கெறேன்.

இப்புவி அமைதி பெற தியானம் கற்போம். தியானம் கற்பிப்போம். எங்கும் அஹிம்சை மலரட்டும். அன்பு நிலவட்டும். ஆனந்தம் நிரம்பட்டும்.

 

உங்கள் அன்புள்ள

பிரமிட் மாஸ்டர்

G.L. சங்கர்லால்

சேலம்


என் பெயர் வம்சி கிருஷ்ணா. வயது 25. என்னுடைய ஊர் நெல்லூர், ஆந்திரப்பிரதேசம். என்னுடைய பணியின் நிமித்தமாக சென்னையில் இருக்கின்றேன். பிரமிட் ஸ்பிரிட்சுவல் சொசைட்டி பற்றி எனக்கு 2009, மார்ச் மாதம் தெரிந்தது. ஆனால் அப்பொழுது நான் இதனை நம்பவில்லை. காரணம், இதற்கு முன் பல்வேறு ஆன்மிக மன்றங்களுக்குச் சென்று, எனக்கு திருப்தியும், நம்பிக்கையும் வரவில்லை. தெரிந்தவர் மூலமாக நான் மறுபடியும் 2010 பிப்ரவரியில் இதற்குள் பிரவேசித்தேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியானம் செய்ய ஆரம்பித்து விட்டேன். பிப்ரவரி 12 சிவராத்திரி, அன்று முழு இரவும், தியானமும், சத்சங்கங்களும் நடக்கும் என்பதையறிந்து நானும் கலந்து கொண்டேன். இரவு ஒன்றரை மணிக்கு சத்சங்கம் முடிவு பெற்றது. 2 மணி முதல் 5 மணி வரை கூட்டு தியானம் செய்ய அமர்ந்தோம். எனக்கு அதுவரை அரை மணி நேரத்திற்கு மேல் தியானம் செய்ய முடியாது. அப்படி நீண்ட தியானம் செய்யும் போது நான் அசைந்து கொண்டே இருந்தேன். அரை மணி நேரம் கூட உட்காராமல், கண் திறந்து விடேன். எப்படியாவது தொடர்ந்து தியானத்தில் உட்கார வேண்டும் என்ற முடிவுடன் மீண்டும் அமர்ந்தேன். அப்பொழுது எனக்கு தியானத்தில் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்களை பார்க்கும் அனுபவம் கிடைத்தது. அவர், ‘என்னடா உன்னால் உட்கார முடியவில்லையா? அந்த அம்மாவைப் பார். தியானத்தில் எவ்வாறு ஆடாமல் அசையாமல் அமர்ந்திருக்கிறார்’ என்றார், அவ்வளவுதான். நான், பயத்துடன் கண்களைத் திறந்து விட்டேன். ஆனால் அங்கு யாரும் இல்லை. அந்த நிகழ்விற்குப் பிறகு தொடர்ந்து ஒரு மணி நேரம் தியானம் செய்ய முடிகிறது.சிலசமயம் தொடர்ந்து 3 மணி நேரம் கூட என்னால் தியானம் செய்ய முடிகிறது. அதே நாளில் மறுபடியும் தியானத்தில் நிறைய வெளிச்சங்களும், தீபத்தின் ஒளிகளும் தென்பட்டன. பயத்துடன் கண்களை திறந்தால் எதுவுமேயில்லை. யாரோ பெரிய குருமார்கள் வந்து எனக்கு சக்தி அளிக்துச் சென்றுள்ளனர் என புரிந்து கொண்டேன்.

2010 மே மாதத்தில், ஒரு நாள், என் அறையில் அமர்ந்து தியானம் செய்யும் போது யாரோ அந்த அறையில் நடமாடுவது தெரிந்தது. நான் தியானத்திற்கு முன்பே அறையை பூட்டிவிட்டுத் தான் அமர்ந்தேன். மறுபடியும் கண்களை திறந்தால், அங்கு யாருமே இல்லை. இதே போல 2010 ஆகஸ்டில் ஒரு நாள் தியானத்தின் போது பூமி அதிர்வது போல் உணர்ந்தேன்.  யாரோ பெரிய குருமார்களின் பாத அடி கேட்டது. ஆனால் யார் என்று தெரியவில்லை. தியானத்தில் எந்த அனுபவமும், சந்தேகங்களும் வந்தாலும், எனக்கு சீனியர் மாஸ்டர்களின் மூலம் பின்பு அவற்றின் காரணம் கிடைத்துவிடும்.

என்னுடைய சுபாவம் எப்படி என்றால், கெடுதலை முதலில் பார்த்த பின்னர் தான் ஒரு வேலையை ஆரம்பிபேன். எதிர்மறையான எண்ணத்துடன் தான் கஷ்டநஷ்டங்களை யோசிப்பேன். அதனால் நல்லதை காட்டிலும் கெட்டதே அதிகமாக நடைபெற்றது.

தொடர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து, “ரோண்டா பைர்ன்” எழுதிய “தி சீக்ரெட் (இரகசியம்)” என்ற புத்தகத்தினை படித்ததின் மூலமாக அந்த சுபாவத்தை மாற்றிக் கொண்டேன். இப்பொழுது எல்லாம் நல்லவிதமாக நடக்கிறது, இப்பொழுது எனக்குள் நேர்மறையான எண்ணம், தன்னம்பிக்கை, நோய் எதிர்ப்பு சக்தி, முதலியன அபாரமாக வளர்ந்துவிட்டன. இதற்கு முன் சில நோய் தொந்தரவுகள் இருன்தன. இப்பொழுது அவை எதுவுமே கிடையாது. முக்கியமாகக் கோபம் குறைந்து விட்டது.

காஞ்சிபுரம் தியான யக்ஞத்தில் எனக்கு உள்ள எதிர்மறையான எண்ணம் ஏன் என்னைவிட்டு அகவில்லை என்ற கேள்வியுடன் தியானத்தில் அமர்ந்தேன். அப்பொழுது, தியானத்தில் 10 நிமிடத்துக்குள் எனக்கு ஒரு காட்சி தென்பட்டது. ‘இடுப்பு கூன் விழுந்து மூதாட்டி ஒருவர், இரு கடைக்கு வந்து, இரு பொருளைக் கேட்டார். அந்த கடைக்காரர், பொருள் இல்லை என்று திருப்பி அனுப்ப முறபட்டபோது அங்கிருந்த நான் கடைக்காரரிடம் அந்தப் பொருள் உள்ளது என கூறி அதை கொடுக்கச் சொன்னேன். கடைக்காரரும் நான் சொன்ன பிறகு பொருளை கொடுத்துவிட்டார். ‘இது என் தியான அனுபவக் காட்சி. இதனைப் பற்றி சீனியர் ஒருவரிடம் கேட்கும் போது எனக்கு தெளிவாக விவரித்தார்.

மூதாட்டி(எதிர்மறையான எண்ணங்கள்) அவருக்கு தேவையானது (எதிர்மறை எண்ணம்) கடைக்காரர் (மாஸ்டர்) கிழவிக்கு தேவையானதை மாஸ்டர் இல்லை என்று கூறினார். ஆனால் நான் அந்த பொருள் (எதிர்மறை எண்ணத்திற்கான சக்தியை) மாஸ்டரிடம் சொல்லி எடுத்து கொடுக்க கூறினேன். இதற்கு அர்த்தம் நான் எதிர்மறை எண்ணங்களை கவனிக்காமல், அதன் பின்னால் செல்கிறேன். அதனால் என்னுள் எதிர்மறை எண்ணம் தங்கிவிட்டது. அது போகவில்லை என்ற விளக்கத்தினை சீனியர் மாஸ்டர் எனக்குக் கூறினார்கள்.

முன்பு எனக்கு அசைவம் மிகவும் பிடிக்கும். தியானத்திற்கு பின் புத்தங்களைப் படிப்பத்ன் மூலமும், சீனியர்களின் உரைகளைக் கேட்டப்பின்னும், அசைவம் உண்ணுவதை விட்டுவிட்டேன். முதலில் அசைவம் ஆசை இருந்தது. ஆனால், தியானம் செய்யச் செய்ய எனக்கு அசைவத்தின் மேல் இருந்த விருப்பம் தானாகவே குறைந்துவிட்டது. இப்பொழுது நான் முழுக்க முழுக்க சைவ உணவிற்கு மாறிவிட்டேன்.

வம்சி கிருஷ்ணா

பூந்தமல்லி,

சென்னை


என் பெயர் அமராவதி ஆந்திர பிரகாஷ். நான் 35 வருடங்களாக சேலத்தில் வசித்து வருகிறேன். சிறுவயதிலிருந்தே என் பெற்றோர்களுடன் நானும் பக்தி மார்க்கத்தில் பிரயாணித்து வந்தேன். இந்தியாவிலுள்ள அனைத்து புண்ணிய ஷேத்திரங்களுக்கும் சென்றுள்ளேன். திருவிழாக்கள், ஆன்மிக கூட்டங்கள் இவற்றிலும் கலந்து கொள்வேன்.

எனக்கு திருப்பதியில் உறவினர்கள் உள்ளனர். அவர்கள் எனக்கு திரு.பத்ரிஜியைப் பற்றியும், அவர் போதிக்கும் தியான முறையைப் பற்றியும் கூறினார்கள். அப்போது அவர்கள் கூறுவதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தியானத்தைப் பற்றி கூறினாலே காதில் வாங்காமல், சினிமாவுக்குச் சென்று விடுவேன். அவர்கள் இல்லாதபோது வீட்டுக்கு வந்து சென்று விடுவேன். இப்படியாக சிறிது காலம் நகர்ந்தது.

2006-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள “மைத்ரேய புத்தா பிரமிடில்” மே மாதம், “புத்த பூர்ணிமா” விழா நடக்கப்போவதாக அறிந்தேன். எனக்கு ஆன்மிக நிகழ்சிகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் இருந்ததால் அங்கு என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காகச் செல்ல நினைத்தேன். இதற்கிடையில் சேலத்தில் என் வணிக வளாகத்தை (இரண்டாவது மாடியில் அந்த இடம் காலியாக இருந்தது) வாடகைக்கு கொடுக்க நினைத்திருந்தேன்.

புத்த பூர்ணிமாவிற்கு இரண்டு நாள் முன், என் கனவில் இந்த பிரமிட் ஆன்மிக மன்ற இயக்கத்திற்கு இந்த கட்டிடத்தைக் கொடுக்க வேண்டும் போல் தோன்றியது. இந்த கட்டிடத்தை தியானத்திற்குக் கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். “இதற்கு சம்மந்தப்பட்ட ஆள் யார்” என்று தேடியபோது, பிரமிட் மாஸ்டர் திரு.சங்கர்லால் அவர்களை சந்திக்க நேர்ந்தது. அவர் இதைக் கேட்டவுடன் மிகவும் சந்தோஷமாக, “நாங்களும் ஒரு நல்ல இடத்தைத் தேடிக் கொண்டிருந்தோம். நாங்கள் புத்த பூர்ணிமாவுக்கு பெங்களூரு போய் வந்தபிறகு உங்களை அணுகுகிறோம்” என்றார்.

நானும் புத்த பூர்ணிமாவுக்கு சென்றேன்.அங்குள்ள இயற்கை சூழல், பிரமிட் எல்லாம் பார்த்து ரசித்தேன். காலை சிற்றுண்டி உண்டபின் அங்கு கும்பலாக சிலபேர் நின்றிருந்தார்கள். என்னதான் நடக்கிறது என்று பார்க்கச் சென்றேன். திரு.பத்ரிஜி அவர்களை அனைவரும் சூழ்ந்திருந்தனர். “நானே வலிய சென்று அவரிடம் பேசமாட்டேன். அவரே என்னைக் கூப்பிட வேண்டும்” என்று எண்ணினேன். சிறிது நேரம் கழித்து திரு.பத்ரிஜி என்னை அருகில் அழைத்தார். நான் அருகில் சென்றவுடன் அவர், “என்ன சுவாமிஜி” என்றார். “நான் தியானி அல்ல, வேடிக்கை பார்ப்பதற்காக வந்தேன்” என்று கூறினேன். அதற்கு “ஏற்கனவே நீங்கள் தியானிதான். அதனால்தான் இங்கு வர முடிந்தது” என்றார் அவர். உடனே அங்கு கூடியிருந்த அனைவரும் கைத்தட்டினர். பின், நான் என்னுடைய கனவைப்பற்றி கூறினேன். அதற்கு அவர் என்னைப் பாராட்டி திறப்பு விழாவிற்கு தேதி கொடுத்து அவரே வந்து திறந்து வைப்பதாக என்னை மேடைக்கு அழைத்துச் சென்று அறிவித்தார்.இதுதான் திரு.பத்ரிஜியுடன் என்னுடைய முதல் சந்திப்பு.

அன்று முதல் நான் தியானம் செய்யத் தொடங்கினேன். பின்னர், பத்ரிஜி,சேலத்திற்கு வந்து, அந்த கட்டிடத்தை திறந்து வைத்து ‘சேலம் பிரமிட் ஆன்மிக மன்றம்’ என்று பெயர் சூட்டினார். ஒருமுறை பத்ரிஜியின் நிகழ்ச்சி கோயம்புத்தூரில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நான் கோயம்புத்தூர் சென்றேன். அங்குள்ள பிரமிடில் பத்ரிஜி முன்னிலையில் அனைவரும் தியானம் செய்து கொண்டிருந்தபோது, தியானத்தில் எனக்கு பத்ரிஜி அவர்கள் அமர்நாத்தில், ஒரு கூடாரத்தில் தலையில் குல்லா அணிந்து கொண்டு, படுத்திருப்பது போல் காட்சி அளித்தார். அதை நான் பத்ரிஜியிடம் கூறினேன். அதற்கு அவர், “இதுதான் மூன்றாம் கண் அனுபவம்” என்று அனைவருக்கும் கூறினார். அதற்கு அடுத்தவருடம்பத்ரிஜி “அமர்நாத் பயணித்தார்”.

தியானத்திற்கு வருவதற்கு முன் நான் சந்தோஷமாக இருந்தேன். நான் தியானத்திற்கு வந்தபின் அர்த்தமுள்ள சந்தோஷத்தை அனுபவிக்கிறேன்.அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் வந்துள்ளது. முதலில் பத்ரிஜியைக் கண்டவுடன், ‘நீ இதற்கு முன்னமேயே தியானிதான்’ என்றார். ஆனாலும் எனக்குள் சந்தேகம் இருந்தது.அதற்கான பதில் ஆந்திர மாநிலம், குண்டூர்,” அமராவதி தியான சக்ர” வைபவத்தில் எனக்குத் தெளிவாக கிடைத்த்து. பத்ரிஜி அவர்கள் கூறினார்கள்,” ஒரு தியானி தம்பதியர்க்குதான் ஒரு தியானி பிறக்கிறான்” என்று. என் பெற்றோர்க்கள் ஞானியர்கள். மேலும் என் பெயர் அமராவதி ஆந்திர பிரகாஷ். இந்கு அமராவதிக்கு வந்திருப்பதால் என் சொந்த ஊருக்கு வந்ததைப்போல் உணர்கிறேன். இங்கு இருக்கும் தியானியர் குடும்பத்தில் நானும் ஓர் அங்கம் என்று உணர்கிறேன். இப்பொழுது என் சந்தேகம் அறவே நீங்கிவிட்டது. பத்ரிஜி எப்படித்தான் என்னை ‘தியானி’ என்று கண்டுகொண்டாரோ என்பது எனக்கு இப்பொழுதுகூட விந்தையாக இருக்கிறது.

 

அமராவதி ஆந்திர பிரகாஷ் 

சேலம்


என் பெயர் சாவித்திரி. நான் 3 வருடங்களாக ஆனாபானசதி தியானத்தை செய்து கொண்டிருக்கிறேன். நான் சிவகாமி மேடம் மூலமாக தியானத்தை மேற்கொண்டேன். எனக்கு 5 வருடங்களாக சைனஸ் மற்றும் இரத்த கொதிப்பால் பாதிக்கப்ப்பட்டு இருந்தேன். தியானத்தின் மூலம் நான் முழுமையாக குணம் அடைந்துள்ளேன்.

தன்னம்பிக்கையும், தைரியமும் எனக்குள் வந்தது. என் குடும்பத்தில் உள்ள அனைவரும் தியானம் செய்கிறோம். இதனால் குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் கண்டேன். நாங்கள் குடும்பத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். நான் 2 வருடங்களாக தியான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறேன். இதற்கு காரணமாக ஆனாபானசதி தியானத்தை 30 வருடங்களாக உலகமெல்லாம் இலவசமாக, பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

J.சாவித்திரி,W/o.ஜெயபிரகாஷ்,செல்வம் ஷுமார்ட்,

சேலம் மெயின் ரோடு,

தொட்டியம்,

திருச்சி மாவட்டம்-621 215


வணக்கம், என் பெயர் விஜயலட்சுமி. நான் 6 மாத காலமாக ஆனாபானசதி தியானம் செய்து கொண்டிருக்கிறேன். நான் அமுதா மேடம் மூலம் தியானம் பயிற்சியை ஆரம்பித்தேன்.

அல்சர், சைனஸ், மூச்சுத்திணறல், மாதவிடாய் பிரச்சனை என 10 வருடங்களாக மிகவும் பாதிக்கப்பட்டு, மாத்திரை, மருந்திற்காக அதிகம் செலவிட்டேன், ஆனால் பயனில்லை.

தியானம் செய்த பிறகு எதிர்பார்த்ததை விட அதிசயம் நடந்தது. அனுபவபூர்வமாக சைனஸ், அல்சர், மாதவிடாய் பிரச்சனை முழுமையாகக் குணம் அடையப் பெற்றேன். தற்போது எங்கள் குடும்பத்தில் மன அமைதி நிலவுகிறது. மகிழ்ச்சியுடன் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என் குழந்தையின் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நான் RD ஏஜண்ட்டாக பணிபுரிகிறேன். எனக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிப்பதை உணர்கிறேன். 100% நம்பிக்கை.

‘ஆனாபானசதி’ என்கின்ற எளிமையான தியானத்தை உலகம் முழுவதும் பரப்பிக் கொன்டிருக்கிற பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் தியான பிரசாரத்தை மகிழ்ச்சியுடன் செய்து கொண்டிருக்கிறேன்.

 

P.விஜயலட்சுமி W/o.சர்வேஸ்வரன்

105,வாத்துக்கார தெரு,தொட்டியம்,திருச்சி மாவட்டம்.

போன்:9751267228