Select Page

“ முன்வினைப்பயன் நியதி ”

 

The Law of Karma

இன்று நாம் அடிப்படை ‘இயற்கை நியதியின்’ பால் முழு கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த நியதிதான் மனிதனின் செயல்கலையும் அவற்றின் விளைவுகளையும் ஆட்சி செய்கிறது. இந்த இயற்கை நியதியே செயல்விளைவு (செயல் வினை) தத்துவம். ஆன்மிக இயற்கை நியதிகள் அநேகம் உள்ளன. சான்றாக, உணர்வு நிலை இயற்கை நியதி கூறுவதாவது எல்லோருமே உணர்வு நிலைதான்… பருப்பொருட்கள், மறைபொருட்கள் (சக்தி), எண்ணங்கள் எல்லமே அறிவுநிலைதான் ஒவ்வொரு பொருளுமே அடிபடையில் உணர்வு தான் என்பதெல்லாம் இயற்கை நியதிகள்.

1. இந்த உணர்வு நிலையே முதன்மை ஆன்மிக விஞ்ஞானம்.

2. இன்னுமொரு இயற்கைநியதி கூறுகிறது, முற்றறிவே அனேக உயிரினங்களிலும், அனேக மனிதர்களிலும் பரிணமிக்கிறது. இதுவே மறு அவதார அல்லது மறுபிறவி இயற்கை நியதியாகும்.

3. மூன்றாவது, ஆன்மிக அறிவியல் நியதி, “செயல் இயற்கை நியதியாகும்”. அதுவே “எதனை விதைக்கின்றோமோ அதையே அறுவடை செய்வோம்” என்று எளிமையாகக் கூறப்படுகிறது.

4. இன்னுமொரு கம்பீரமான இயற்கை நியதி என்னவென்றால், “தொடர்ச்சியான மலர்ச்சி” (வளர்ச்சி). நாம் “என்னவெல்லாம் செய்கின்றோமோ, அதனையே நமது அனுபவத்துடன் கூட்டிக் கொள்கிறோம், ஆதலால் நாம் நமது பரிணாம வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டே இருக்கிறோம், ‘பின்னடைவு’ என்று எதுவும் இல்லை.

5. ஆன்மிக அறிவியலில் உள்ள ஐந்தாவது இயற்கைச் சட்டம் கூறுவதாவது, “உனது முனேற்றத்தை நீயே விரைவுப்படுத்திக் கொள்ள முடியும்.” இதுவே “விரைவு முன்னேற்ற இயற்கை நியதியாகும்.” தக்க தியானத்தின் மூலமாக நாம், நமது ஆன்மிக முன்னேற்றத்தை விரைவுபடுத்திக் கொள்ள முடியும்.

6. ஆறாவதானதும், இறுதியானதுமான ஆன்மிக அறிவியல் இயற்கை நியதியானது, “நிலையாமை” என்பதாகும். ஒருபோதும் நாம் இயற்கை நிகழ்வுகளை உறுதியாக அறுதியிட்டுக் கூறமுடியாது. நிகழ்ச்சிகள் யாவுமே கோடானுகோடி காரணங்களால் அவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளன.

 

1. ஆன்ம சித்தாந்தம்

2. புனர்ஜன்ம சித்தாந்தம்

3. கர்ம சித்தாந்தம்

4. புரோகமன சித்தாந்தம்

5. யோக சித்தாந்தம்

6. அனேக அனேக சித்தாந்தம்

இவ்வாறு வடமொழியில் 6 இயற்கை நியதிகளும் குறிப்பிடப்படுகின்றன.

 

இப்போது நாம், “செயல் இயற்கை நியதி” பற்றி கவனிப்போம். இயேசு கிறிஸ்து என்னும் மாபெரும் மகான் கூறுவது, “நீ விதைப்பதைப் போலவே அறுவடை செய்வாய்.” நாம் என்னவெல்லாம் செய்கின்றோமோ, அதற்கான பலனை அனுபவித்தே ஆகவேண்டும். நிச்சயமாக அனுபவிப்போம். மறுமொழியில் சொல்லுவதானால் ‘நமது யதார்த்தங்களை நாமேதான் உருவாக்கிக் கொள்கிறோம்.

ஆன்மிக அறிவியலின் ஆரம்ப நிலையில் உள்ளோர், ‘செயல் விளைவுத் தத்துவம்’ தான் மிக முக்கியமானது என்று உணரவேண்டும். இந்த இயற்கை விதிகளின் உதவியின்றி மனித வாழ்வின் இரகசியங்களை ஆண்டு அறிய முடியாது. எப்போதும் செயல் விளைவுத் தத்துவத்துடன் இணைத்தேதான் ‘மறு பிறவி’ தத்துவத்தை உணராமல் நாம் ஒருபோதும் சரியான செயல்களைச் செய்ய முடியாது. ‘கர்மா’ என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள் எந்த ஒரு செயலையும் குறிக்கும்.

ஒவ்வொரு செயலும் மற்றவொரு விளைவிற்கு வழிவகுக்கிறது. அதன் விளைவையும், வினையையும் குறிக்கும் காரணமாகிறது. நாம் ஒரு காரியத்தை செய்யும் பொழுது அது அதற்கு சம்மந்தப்பட்ட விளைவை உருவாக்கும் சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும். பாதையை கடக்கும்போது நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், பின்னர். ஒன்றை இழக்க வேண்டியிருக்கும். அதிவேகத்துடன் பயணித்தால் அதன் விளைவாக, ஏதோ ஒன்றை ஈடுசெய்ய நேரிடும். மற்றவரோடு நாம் பேசும்பொழுது நமது சொற்களில் எச்சரிக்கை இல்லாவிட்டால், அது சம்மந்தமான, அதற்கு நிகரான, ஒரு துன்பத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.

அளவு மீறி உண்டு விட்டால், அதற்கான துன்பத்தை அடைய வேண்டியிருக்கும். அளவு குறைத்து உண்டாலும், அதற்கும் ஒன்றை ஈடு செய்தாக வேண்டும். அளவு மீறி ஒன்றை குடிக்க நேர்ந்தாலும், அதற்கான ஒன்றை ஈடு செய்தாக வேண்டும். நாம் அளவு மீறியும் அருந்த முடியாது. மீறினால் அதற்கான விளைவுகளிலிருந்தும் தப்பிக்க முடியாது. நண்பர்களே, நிகழ்கால விளைவு என்பது நமது கடந்த கால செயல்களிலிருந்து பரிணமித்தவை ஆகும்.

“செயல் இயற்கை விதி’ மற்றும் ‘செயல் விளைவுத்தத்துவம்’ இரண்டும் கடந்த காலம்…நிகழ்காலம்.. எதிர்காலம்.. இவற்றோடு தொடர்புடையவை.

என் இனிய நண்பர்களே, எவற்றை எல்லாம் நாம் செய்யக்கூடாதோ அவற்றையெல்லாம் நிறுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால், எதை எல்லம் நாம் விரும்ப மாட்டோமோ, அவற்றை எல்லாம் நாம் அறுவடை செய்ய வேண்டிவரும்.

நமக்கு, நன்மை மட்டுமே நிகழ வேண்டும் என விரும்புகிறோம். மற்றொருவருக்கு நன்மை செய்யத் தவறி விடுகிறோம். நகைப்புக்குரியது என்னவென்றால், மற்றவர்களுக்கு நாம் நன்மை செய்யாமல் இருந்து கொண்டு, மற்றவர்களை நமக்கு நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறோம். எதிர்பார்க்கிறோம். மற்றவர்களுக்கு நாம் தீங்கிழைத்தால் அதிக தீமைகல் யாரிடமிருந்தோ நம்மைத் தேடி வரும். மற்றவர்களுக்கு நாம் நன்மை செய்தால் அனைவரிடமிருந்தும் அதிக நன்மை நமக்கு வந்துசேரும்.

விலங்கு தெய்வங்களைத் துன்புறுத்தி இரத்தம் சொட்ட வைத்து, அவற்றின் ஊனினை உணவாக உட்கொள்ளும் நாம், அதற்குரிய தண்டனையை அனுபவிக்கிறோம். ஏன் ‘நாம் விலங்க்குகளை கொல்லக்கூடாது’ என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. “இது மிக மிக மோசமான செயல்“. விலங்கு தெய்வங்களை, விலங்கு சகோதரர்களை நாம் துன்புறுத்தக் கூடாது, ஒருபோதும்.

மனிதர்கள், விலங்கு சகோதரர்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். மனித சமுதாயத்திலிருந்து இதுதான் (பராமரிப்பு) எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உலகம் முழுவதும் மனித சமுதாயம் மிகவும் முட்டாள்தனமான, மிகவும் கொடுமையான, சுயகேடான காரியங்களை செய்து வந்திருக்கிறது, செய்து கொண்டும் இருக்கிறது.

என் இனிய நண்பர்களே, மனித இனம் முழுவதுமே செய்யத்தகாத காரியங்களை செய்து விட்டு துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக விலங்கு சகோதரர்களைக் கொன்று அவற்றின் உடலை உண்டு வருகிறது. கடவுள் யாரையும் தண்டிக்கவில்லை. நமது தவறான முடிவுகள், அறிவற்ற முடிவுகள், கெட்ட செயல்கள், கொடூரமான செயல்கள் யாவுமே நம்மை தண்டிக்கின்றன. பிற உயிரினங்களின் வாழும் சுதந்திரத்தை பறிப்பதென்பது, எவ்வளவு பெரிய பாவம். 90 சதவீத மனித சமுதாயம், அமெரிக்க முதல் இந்தியா வரை, சீனா முதல் ஜப்பான் வரை, ஆஸ்திரேலியா முதல் அர்ஜெண்டினா வரை, எல்லா நாடுகளுமே எல்லா மக்களுமே நமது விலங்கு சகோதரர்களை கொன்று உண்பதன் மூலமாக, செய்யக்கூடாது கொடுமையான செயலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

புலால் உணவு உண்பவர்கள், தாங்கள் என்ன காரியம் செய்கிறோம் என்பதையே அறியாமல் தங்களையே மிகவும் பக்திமான்கள் என்று கூறிக்கொண்டு, கிறுஸ்த்துவர்கள் தேவாலயங்களுக்கும், இந்துக்கள் கோவில்களுக்கும், இஸ்லாமியர் மசூதிகளுக்கும் சென்று வருகிறார்கள். ஆனால், புலால் உண்பதனால், எத்தகைய தெய்வ குற்றங்களைச் செய்து வருகிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டும். இது ஒரு எளிய, ஆனால் திடமான இயற்கை நியதி, “நீ மற்றவர்க்குத் தீங்கிழைத்தால் உனக்கு மற்றவர்களால் தீங்கு வரும்”. நீ வேறொன்றை எதிர்நோக்க முடியாது.

நியூட்டனின் “இயக்க ஒழுங்கு தத்துவப்” படி மனித சூழ்நிலைகளில் ஏற்படும் ஒரு எளிய பிரதிபலிப்பு தான் இது. ‘செயல் இயற்கை’ விதியும், எதிர் விளைவும் சமமானவை. என்னவெல்லாம் தருகின்றோமோ, துன்பம் அல்லாது இன்பம் அதையே நாம் பெறுகிறோம். குழந்தைகளும், பாமரர்களும், கறுப்பர்களும் மோசமாக நடத்தப்படுவதை நாம் பார்க்கின்றோம். மற்ற மனிதர்களை மோசமாக நடத்தும்பொழுது ஏற்படும் விளைவு என்னவாக இருக்க முடியும்? நினைவில் கொள்ளுங்கள், நாம் மீண்டும் பிறவி எடுக்கும் பொழுது, ஒடுக்கப்பட்டவர்களாகவே பிறக்க நேரிடும். மறுமொழியில் கூறினால், பிறருக்கு தந்த துன்பம் என்னவெல்லாமோ, அதற்கு ஏற்ப, நம் வாழ்க்கை அமையும். ஆண்களாய் இருந்து பெண் துணையை ஒடுக்கி இருந்தல், அந்த அட்டூழியத்தை அனுபவிக்க, நாம் ஒரு பெண்ணாகப் பிறந்து, வேதனை அனுபவிக்க நேரிடும்.

எனது அருமை நண்பர்களே, “பல பிறவித் தத்துவத்தையும்”, விழிப்புணர்வு உண்மையையும் அறியாவிட்டால், இவற்றையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள முடியாது. இவற்றையெல்லாம் நாம் அறிந்து கொள்கிறோமோ இல்லையோ, இவையெல்லாம் சத்தியம். நினைவில் கொள்ளுங்கள். நாம் சுதந்திரமாக மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, அமைதியாக இருப்பதற்கு முன்பாக, நாம் நமது பழைய எதிர்மறை செயல் பதிவுகளை கழுவித் தூய்மைப்படுத்த வேண்டும்.. என் இனிய நண்பர்களே, நமது தீவினை பதிவுகளை சுமந்து கொண்டிருப்போமானால் நமக்கு ஆரோக்கியம், ஆனந்தம், அமைதி இவையெல்லாம் இருக்காது. நமது தீய செயல் மூட்டையை இறக்கி, தூய்மை செய்ய வேண்டும்.

முதலில் புலால் உணவினைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவரும் சைவ உணவு உண்பவராக மாறவேண்டும். ‘செயல் இயற்கை’ நியதியானது நம்மை முதலில் இயற்கை உணவுக்கு (சைவ உணவுக்கு) மாற்ற வைக்கும். சைவ உணவு உண்பவராக இல்லாதவர்கள் கடவுளின் அதிகார எல்லைக்குள் நுழையக்கூட முடியாது. “சைவ உணவாளர்களாக இருப்பதுவே..” இறைப் பயணத்திற்கான முக்கியமான முதல் படிநிலை. நமது விலங்கு நண்பர்களிடம் நாம் அன்பு காட்ட வேண்டும். இப்புவியிலே உள்ள சக உயிரினங்களை நேசிக்க வேண்டும். செயல் இயற்கை நியதியின் சாரமே இதுதான். இந்த முக்கிய அம்சத்திற்கு தயாராகிவிட்டு, பிறகு நாம் தியானத்தை மேற்கொள்ள வேண்டும். ஆழ்நிலை தியானம்தான், தீவினை பதிவுகள் எதுவாயினும், அவற்றை முற்றிலும் உடனடியாகக் கரைத்துவிடும்.

இந்த இரண்டும் தான் முக்கிய நிலைகள். என் அருமை நண்பர்களே, ஒன்று சைவ உணவு, மற்றொன்று தியானம். அவ்வாறுதான் நாம் நமது வினைப்பதிவு சங்கிலித் தொடரிலிருந்து வெளிவர முடியும். பின்னர்தான் நாம், கட்டுண்டிராமல், சுதந்திரமான உயிரினமாக, மனிதராக விளங்க முடியும். இரண்டே படிநிலைகள்தான், என் இனிய நண்பர்களே, என் அருமை ஞான ஆசிரியர்களே, என் அருமை தெய்வங்களே.

நாம் எண்ணுகின்ற ஒவ்வொரு எண்ணமும், சொல்லுகின்ற ஒவ்வொரு சொல்லும், உடலால் செய்கின்ற ஒவ்வொரு செயலும் ஒரு காரணமாகிறது. அது தக்க காரியமாக வடிவெடுக்கிறது. நமது சூழ்நிலையிலிருந்து நாம் பெறுகின்ற ஒவ்வொரு வினையும், விளைவும் நாம் சொல்லிய, செய்த, எண்ணிய, எண்ணத்திற்கு தக்கதாகவே இருக்கிறது.

நமது எண்ணத்தை மாற்றினால், நமது வார்த்தைகளை மாற்றினால், நமது செயல்களை மாற்றினால், வித்தியாசமான விளைவினைப் பலனை பெறுவோம். நாம், நம் வாழ்வில் நல்ல செயல்களை விதைத்து, நல்ல விளைவுகளை, மகிழ்ச்சியான விளைவுகளை ஆரோக்கியமான விளைவுகளை அறுவடை செய்வோம்.

என் அருமை நண்பர்களே, புறத்தோற்றங்கள் நம்மை ஏமாற்றும் வெளித்தோற்றத்தில் ஒரு மனிதர் மிக நல்லவராகவும், மிக மகிழ்ச்சியானவராகவும் தோன்றலாம். ஆனால் அகத்தொற்றம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். உண்மையில் இது எப்போதும் அப்படித்தான்.

மக்கள் சொல்வதுண்டு, “பார்க்க நல்லவராக இருந்தாலும், எல்லா கெட்ட காரியங்களும் செய்கிறான், இருந்தாலும் சந்தோஷமாகத்தான் இருக்கிறான்” என்று. இல்லை. இல்லை.. இல்லவே இல்லை. மேற்கூறப்பட்ட கருத்து, ஒரு சில உதாரணங்களைக் கொண்டு மேலோட்டமாகக் கண்டு கூறப்பட்ட அஞ்ஞான கருத்து. பொதுவான கருத்து….. பலரது வாழ்நாளை முழுவதும் ஆராய்ந்து, உண்மைகளை உணர்ந்து ‘செயல் விளைவு’ தத்துவத்தைக் கொண்டு முடிவை தீர்மானிக்க வேண்டுமேயல்லாது, மேலோட்டமாகப் பார்த்து, முடிவெடுக்கக்கூடாது. கெட்டவர்கள், மகிழ்ச்சியானவர்கள் போலும், நல்லவர்கள் துக்கப்படுபவர்கள் போலும் தோன்றலாம். புறத்தோற்றங்கள்யாவும் மாயை, ஏமாற்றுபவை. ஒரு மனிதனின் தனித்தன்மையைக் கூர்ந்து ஆய்வு செய்வோமானால், அவனோடு அல்லது அவளோடு ஆழ்ந்து பேசுவோமானால் பின்னர் தான் நமக்கு புரியும், அவர்கள் எவ்வளவு பரிதாபத்துகுரியவர்கள் அல்லது எவ்வளவு பேரின்பத்தில் இருப்பவர்கள் என்று.

என் அருமை நண்பர்களே, நற்செயல்கள் நம்முள் சொர்க்கத்தை ஏற்படுத்தும், கெட்ட செயல்களும், வன்முறை செயல்களும் நம்முள் நரகத்தை ஏற்படுத்தும். நம் மனதில் உள்ள நரகத்தின் விளைவே நமது கெட்ட செயல்களும், நமது வன்முறை செயல்களும், நமது விலங்கு நண்பர்களிடம் அன்பு இல்லாமையும் ஆகும். இவை எல்லாம் சேர்ந்து நரகத்தையே ஏற்படுத்தும். மற்றவர்களுக்கு நன்மை செய்கின்றபோது, இப்புவியிலுள்ள சக உயிரினங்கள் தங்களைத் தாமே பரமரித்துக் கொள்ளும். பிறகு நாம் மன சுவர்க்கத்தை ஏற்படுத்துவோம். ‘ஜான் மில்டன்’ என்பவர் என்ன சொன்னார் என்பது நாம் அறியாததா? “மனமே ஒரு நரகமான சொர்க்கத்தையும். சொர்க்கமான நரகத்தையும் தனக்குள்ளேயே ஏற்படுத்தும்” என்று கூறினார்ல்லவா?

செயல் இயற்கை நியதி நமக்கு தரும் அடிப்படை தத்துவம் என்னவென்றால் நாமேதான் நமது தனித்தன்மையை உருவாக்கிக் கொள்கிறோம். நாமேதான் எப்போதும் நமது சொந்த விதியை தீர்மானிப்பவர்கள். “செயல் இயற்கை நியதிதான் முழு இயற்கை நியதி”என்பதை நாம் சரியாக உணர்ந்து கொள்கின்ற போது, அது எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது ஆட்சி செய்கிறது. எல்லா மனித சூழ்நிலைகளையும், நிகழ்ச்சிகளையும் உருவாக்குகிறது என்பது விளங்கும். அப்போதுதான் நாம் நமது வார்த்தைகளிலும், நமது செயல்களிலும், நமது எண்ணங்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்வோம். இல்லாவிட்டால் கவனமில்லாதவர்களாகவும், முட்டாள்களாகவும் செயல்பட்டு, வீழ்ந்து, வீழ்ந்து , வீழ்ந்து சாக்கடைக்கே போய்விடுவோம்.

எந்த மருத்துவரும் நமக்கு உதவ முடியாது. எந்த மருத்துவமனையும் நமக்கு உதவ முடியாது. எந்த மருந்தும் நமக்கு உதவாது. தியானம் மட்டும் தான் உதவ முடியும். சைவ உணவுமுறை மட்டுமே நமக்கு உதவ முடியும். ஆதலால் தாவர உணவை உண்ணுங்கள். இரத்தம் வடிகிற உணவை அல்ல. தாவர இனம் மட்டுமே நமது உணவாகும். நாம் நிறைய இயற்கை உணவுகளை உண்ணலாம். ஆனால் சிறிதளவு கூட, ஒரு அவுன்ஸ் குட புலால் உணவு கூடாது.

வாழ்க்கை என்பது நாம் களிப்போது இருக்கவேதான். மாறாக, நாமது எதிர்கலத்தை, வருங்கால வாழ்நாளை தொடர் இன்ப வாழ்வை கெடுத்துக் கொள்வதற்காக அல்ல.

“செயல் இயற்கை நியதி, மேலும் கூறுகிறது. நம் எண்ணம் போல வாழ்வு”. “மனம் எப்படியோ நமது வாழ்வும் அப்படியே’, எவ்வளவுக்கு எவ்வளவு மனதை காலியாக்குகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு மன அமைதி, மன மகிழ்ச்சி ஏற்படும். நமது வார்த்தைகள், நமது எண்ணங்கள், சொற்கள், நமது செயல்கள் மாசற்றதாக விளங்கும். தியானம் மட்டுமே நமது சொற்களை தூய்மைப்படுத்தும். தியானம் மட்டுமே நமது சொற்களை தூய்மைப்படுத்தும். நமது எண்ணங்களை தூய்மைப்படுத்தும். நமது செயல்களை தூய்மைப்படுத்டும்.

ஆகையால், செயல் இயற்கை நியதியை புரிந்து கொள்வதெனப்து, உடனடியாக சைவ உணவாளர்களாக மாறுவது, தியானியாக ஆவது, எப்போதுமே நாம் மட்டுமே நமது தனித்தன்மையை உருவாக்க முடியும் என்பதை எல்லாம் உணர்வதாகும்.

இந்த இயற்கை நியதியை நாம் உணர்கின்ற போதுதான், துன்ப அனுபவங்களும் அல்லது அநீதிகளும் தூக்கி எறியப்படும். எந்த அநீதியும் வாழ்வில் இருக்காது, நம்மால் மற்றவர்களுக்கு கேடு விளைவிக்கவும் முடியாது. நீதி மட்டுமே நிலவும். நமது நற்செயல்களுக்கு ஏற்ப நியாயங்கள் மட்டுமே கிடைக்கும். வாழ்வில் துன்ப அனுபவம் என்பது இருக்காது. சரியான நிகழ்வுகள் மட்டும் ஏற்படும்.

“ரிச்சர்ட் பேக்” என்னும் மாமனிதர் கூறியது என்னவென்றால், “அநீதி மற்றும் சோகம் என்பவை உள்ளன எனும் உன் நம்பிக்கையின் ஆழம்தான், உனது அறியாமையின் அடையாளம்”. ஆக அநீதி, சோகம் என்பவையெல்லாம் ஞானியருக்கு இல்லவே இல்லை (THE MARK OF YOUR IGNORANCE IS THE DEPTH OF YOUR BELIEF IN TRAGEDY AND INJUSTICE – RICHARD BACH)

மற்றவர்களுக்கு அநீதி செய்வதை நிறுத்திவிடுவோமானால், நமது வாழ்விலே அநீதி என்பது நேராது. நியாயம் மட்டுமே நமக்குக் கிடைக்கும். நியாயத்தை விதைத்து நியாயத்தையே அறுவடை செய். இது உண்மை. அப்படியானால் மனித சமுதாயத்தில் இனிமேல் அநீதி என்பதே இருக்காது.

“எப்படி விதைக்கின்றாயோ, அப்படியே அறுவடை செய்கிறாய்”. நம் வாழ்வின் குழந்தைப் பருவத்தில் இருந்தே இதனை அறிந்து கொள்ள வேண்டும். நாம் குழந்தைப் பருவத்தில் இருந்தபோதே நம் பெற்றோர்கள் நமக்கு ‘செயல் இயற்கை நியதி’ தத்துவத்தை கற்பித்திருக்க வேண்டும்.

பெற்றோர்கள் ‘செயல் இயற்கை நியதி’, சாரத்தின்படி வாழ்ந்தால்தான்… குழந்தைகள் அதனைப் புரிந்து கொள்ள முடியும். பெற்றோர்கள் பேசுவதைக் கொண்டு குழந்தைகள் எதையும் அறிய முடியாது. “அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்” என்பதைக் கொண்டு தான் அறிய முடியும்.

என் அருமை நண்பர்களே, நமது வாழ்வின் சூழ்நிலைகளை வரையறை செய்யும் அதிகாரம் வெளியில் எதுவும் இல்லை. எப்போதுமே எங்குமே, நமது வாழ்வியல் சூழல்களை வரையறை செய்வது. நாம்தான்.. நாம்தான்.. நாமேதான்.

அனைத்து மக்களின் வாழ்வையும் ஆள்வது அந்த ஒரே சட்டம்தான். அதுதான் ‘செயல் இயற்கை நியதி’ நாம் பருஉடலில் (Physical Body) இருக்கின்றோமோ, சூட்சும உடலில் (Astral Body) இருக்கின்றோமோ, அல்லது காரண உடலில் (Causal Body) இருக்கின்றோமோ, எந்த உடலில் இருக்கின்றோம், எந்த தேசத்தில் இருக்கின்றோம், எந்த சூழ்நிலையில் இருக்கின்றோம், என்பதல்ல முக்கியம். ஆனால், நம் வார்த்தைகளில் நாம் கவனமாக இருக்க வேண்டும். நமது எண்ணங்களிலும், செயல்களிலும் முழு கவனமாக இருக்க வேண்டும். இதுதான் முக்கியம். குழந்தைகளுக்கு ‘செயல் இயற்கை நியதி’ பற்றி நாம் கற்பிக்க வேண்டும்,

குழந்தைகள் புலால் உண்பதை நாம் அனுமதிக்கக்கூடாது. அதற்காக, அந்த கொடூரமான உணவு உண்பதை நாம் முதலில் நிறுத்த வேண்டும். மேலும் என் இனிய நண்பர்களே, எல்லா நோய்களும் தீய செயல்களின் விளைவுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தியானத்தின் மூலமாகப் பெறும் பிரபஞ்ச சக்திதான் எல்லா தீய செயல்களின் பதிவுகளை சுட்டெரிக்கும். ஆகையால் நாம் சைவ உணவை மேற்கொள்வோம். தியானத்தை மேற்கொள்வோம்.

’செயல் இயற்கை நியதி’ பற்றி அனேக புத்தகங்களை சம்மந்தப்பட்ட பெரிய ஆன்மிக ஞான ஆசிரியர்களால் எழுதப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் நாம் படிக்க வேண்டும். நாம், பருப்பொருள் அறிவியல் பற்றி படிக்கும் மாணவனாக இருந்தால் பருப்பொருள் பற்றிய புத்தகங்களை நிறைய படிப்போம். மறைபொருள் விஞ்ஞானம் படிக்கும் மாணவனாய் இருந்தால் நாம் அதுபற்றிய நூல்களை நிறைய படிப்போம். இவையெல்லாம் சொல்லாமலேயே விளங்கும்.

என் இனிய நண்பர்களே, பைபிளில் இது சொல்லப்பட்டுள்ளது என்பதற்காக பைபிளில் இருந்து ஒரு கருத்தை எடுத்து நியாயப்படுத்த முயற்ச்சிக்கவில்லை. இல்லவே இல்லை. செயல் இயற்கை நியதி என்பது ஒரு பிரபஞ்ச உண்மை. செயல் இயற்கை நியதி என்பது எந்த விதத்திலும் புத்தருடனோ, இயேசுவுடனோ அல்லது கிருஷ்ணருடனோ சம்மந்தப்பட்டது அல்ல. இந்த மூவரும் தோன்றாமல் இருந்தால் கூட, செயல் இயற்கை நியதி நிலுவையில் நிலையாகத்தான் இருந்திருக்கும். புவிஈர்ப்பு சக்தி என்றும் இருக்கும் இயற்கை விதி. ’சர் ஐசக் நியூட்டனைச் சார்ந்ததல்ல’. ஐசக் நியூட்டன் பிறக்காதிருந்தால் கூட புவிஈர்ப்புவிசை, புவிஈர்ப்புவிசையாகத்தான் இருக்கும். இயேசு கிறிஸ்து உண்டோ இல்லையோ, கிருஷ்ணன் உண்டோ இல்லையோ, புத்தர் உண்டோ இல்லையோ, என்றாலும் “செயல் இயற்கை நியதி” என்பது என்றென்றைக்கும் செயல் இயற்கை விதிதான்.

செயல் இயற்கை நியதி என்பது முற்றிலுமாக ஆட்சி செய்கிறது. இதுதான் எளிமையான இயற்கை அழகு. செயல் இயற்கை நியதி படைப்பின் அலங்கோலத்தைச் சித்தரிக்கவில்லை. இது படைப்பின் அழகைத்தான் விவரிக்கிறது. இது அக்கறை இல்லாத கொடுமை அல்ல.

இது இரக்கம் உள்ளம் சர்வ வல்லமை வாய்ந்த சக்தி. ‘செயல் இயற்கை விதி’ என்பது என்றென்றைக்கும் ஒரு இயந்திரத்தனமானது அல்ல. மாறாக, ஒரு ஆக்கபூர்வ இயற்கை நியதி.

இன்று செயல் இயற்கை நியதி பற்றி மிகவும் சுருக்கமாக தெரிந்து கொண்டோம். இதுவே போதும். நாம் ஒழுங்கான தியானிகளாகவும், நிலையான சைவ உணவுக்காரர்களாகவும் இருந்துவிட்டால், செயல் இயற்கை நியதி பற்றி இந்த அளவு தெர்ந்து கொண்டாலே போதுமானது நாம் சைவ உணவினர்களாக மாறாமல், வெறும் ‘செயல் இயற்கை விதி’ தெரிந்தவராக மட்டும் இருந்துவிட்டால், யாரும் நம்மை காப்பாற்றமுடியாது. தெய்வீக சக்தி கொண்ட புண்ணிய இரட்சகர்கள் (காப்பவர்கள்) யாரும் கிடையாது. நம் சொந்த செயல்கள் தான் நம்மை காக்கும் சக்தி. “ஒரு சைவ உணவினராக இரு. ஒரு தியானியாக இரு”