“ கோரிக்கைகள் இருக்க வேண்டும் ”

மாஹா மோஹாவேசம்

கோரிக்கைகள் எப்பொழுதும் சரியானவையே!

‘கோரிக்கை’ என்பது இன்பத்தை அளிக்கும்.

அளவுக்கு மீறிய கோரிக்கைகளை மற்றும் மற்றவர்களுக்கு துன்பம் விளைவிக்கும் இச்சையை, ’மோகம்’ என்கிறோம். ‘மோகம்’ என்பது எக்காலத்திலும் தவிர்க்க வேண்டியதே…

’பஜ கோவிந்தத்தில்’ ஸ்ரீ ஆதிசங்கரர் “மாஹா மோஹா வேசம்” என்றார்.

“மோகம் மற்றும் ஆவேசம்” என்பது ஒருபொழுதும் இருக்கக் கூடாது.  ’அதி சர்வத்ரா வர்ஜயேத்’ என்பது சான்றோர் வாக்கு.

“ஆதி” அளவிற்கு மீறியது என்பது எந்த விஷயத்திலும், அபாயகரமானது. ஆகையால், அனைத்து விஷயங்களிலும் ’அதி’யை விட்டுவிட வேண்டும். எதிலும் மிதமாக இருக்க வேண்டும்.