Select Page

“ கோப்பையை ஏந்து ”

இந்த பூமியானது ஒரு புதிய காலகட்டத்தில் நுழைந்துள்ளது. ஒரு பெரிய ஒளிக்கற்றையில்
(போட்டான் பேண்ட்) புகுந்துள்ளது. இந்த ஒளிக்கற்றை ஒரு பெரிய சக்தி ஓடை. ஏறத்தாழ இருபத்து ஆறாயிரம் (26,000) ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரிய மண்டலமானது இந்த ஒளிவெள்ளத்தில் நுழைவதுண்டு. இந்த முறை, நம் சூரிய மண்டலம் 1989-லிலேயே இந்த ஒளி வெள்ளத்தில் நுழைய ஆரம்பித்துவிட்டது. 2012-ல் சூரிய மண்டலம் முழுவதுமே அந்த ஒளி வெள்ளத்தில்தான் பவனி வந்து கொண்டிருக்கும். 2004-ல் இருந்தே நம் பூமி, அந்த ஒளி வெள்ளத்தில் தான் உள்ளது. இந்த பூமி, பிரபஞ்ச ஆற்றலின் தாக்கத்தில்தான் உள்ளது.

மழை பெய்யும் போதே.. நீ கோப்பையை ஏந்தத் தவறிவிட்டால்… உனக்கு நீர் கிடைக்காது. மழை இல்லாத போது நீ கோப்பையை பிடித்தபோதும், உனக்கு நீர் கிடைக்காது. இந்த மாபெரும் சக்தி மழையை எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவரவர்கள் செய்யும் தியானத்திற்கு ஏற்றவாறெ அவரவர்கள் பிரபஞ்ச சக்தியைப்பெற முடியும். வெற்றிடமான மனம்தான் பிரபஞ்ச சக்தியை பெற வைக்கும். தியானம் என்பதன் பொருளே, மனதை காலி செய்வதுதான். இந்த பூமியின் மீதுள்ள தற்போதைய, புதிய காலகட்டமென்பது புதிய தியான காலமாகும். பிரமிட் ஞான ஆசிரியர்கள்தான் இந்த புதிய காலகட்டத்தில் நடக்க இருப்பதை முன்கூட்டியே அறிந்தவர்கள். அகில உலக அளவில் புதிய யுகத்தின் அடையாளம் ‘பிரமிட்’! புதிய யுகம் படைப்பதன் அடையாளம் பிரமிட்தான்!

 

பிரமிட்களுக்கு வந்தனம். புதிய யுகத்திற்கு வந்தனம்.

தியானத்திற்கு வந்தனம் சுவாசத்திற்கு வந்தனம்.

தியான ஞான ஆசான்களுக்கு வந்தனம்.

எல்லா பிரமிட் ஞான ஆசான்களுக்கும் வந்தனம்.