Select Page

“ கற்பதற்குக் கரை இல்லை ”

அன்பார்ந்த நண்பர்களே,

2008-ஆம் ஆண்டு பிரமிட் ஆன்மிக இயக்கம் (PSSM)-ஆல் ஜி.சி.எஸ்.எஸ். உருவாக்கப்பட்டது. உலகில் உள்ள எல்லா ஆன்மிக அறிவியல் ஆசான்களை ஒன்று திரட்டி, பங்கேற்க வைப்பதற்கென்றே சீரிய நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது இந்த அமைப்பு. கிழக்கிலும், மேற்கிலும் உள்ள ஆன்மிக அறிவியல் சிந்தனையாளர்களையும், பல நாடுகளிலிருந்து அதே ஆர்வமுடைய மாணவர்களையும், வருடாத்திற்கு ஒருமுறை அழைத்துக் கருத்துறவாஅடாச் செய்வதுதான் ஜி.சி.எஸ்.எஸ். இந்நிகழ்ச்சி, பெங்களூருவில், மிக்க ஆன்மிக சக்தி நிறைந்த இடமாக விளக்கும் ’அகில உலக பிரமிட் பள்ளத்தாக்கில்’ (The Pyramid Valley International, Bengaluru) நடத்தப்படுகின்றது.

ஆன்மிக அறிவியல் சிந்தனையில் முதுர்ச்சி அடைந்தவர்கள், தங்களின் அறிவு, ஆராய்ச்சி மற்றும் ஞானம் முதலியவற்றை ஒருவருக்கொருவர், மட்டற்ற மகிழ்ச்சியுடன் பகிர்ந்து, ஒன்றுகூடும் ஒரு உன்னதமான கொண்டாட்டம் தான் ஜி.சி.எஸ்.எஸ்.

இச்சிறப்பு நிகழ்ச்சிக்குத் தேவையான ஏற்பாடுகளை ஐ.எஃப்.எஸ்.எஸ். செய்கின்றது. இந்த ஐ.எஃப்.எஸ்.எஸ். என்ற அமைப்பினை, பிரமிட் ஆன்மிக இயக்கம் மற்றும் டைம்ஸ் ஃபவுண்டேசன் இரண்டு அமைப்புகளும் இணைந்து உருவாக்கியது.

ஐ.எஃப்.எஸ்.எஸ். என்ற அமைப்பில் ’குருக்கள்’ என்பவர் கிடையாது; உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் ஆன்மிக அறிவியலார்கள் உள்ளனர். இவ்வறிஞர்கள், தங்களின் ஆன்மிகப் பயணத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சி, பெற்ற அனுபவம் மற்றும் ஞானம் முதலியவற்றை, தாங்களாகவே இங்கு வந்து, மற்றவர்களுடன் கலந்து, கருத்துப் பரிமாற்றம் செய்கின்றனர்.

ஜி.சி.எஸ்.எஸ். -ன் மையக்கருத்து யாதெனின், “உங்களுடைய ஆற்றலை உயர்த்திக் கொள்ளுங்கள், உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையைச் சிறப்பாக்கிக் கொள்ளுங்கள்” என்பதாகும். ஆன்மிக அறிவியல் என்ற ஓர் தொகுப்பில், ஒவ்வொரு ஆன்மிக அறிவியல் ஆசானும், தங்களின் அனுபவம் என்ற ஏதோ ஒன்றை இணைக்கும் வாய்ப்பு உண்டு. ஆன்மிக அறிவியல் என்ற கல்வியை முழுமையாக அறியும் பொழுது, “நாம் அடிப்படையில் பன்முகப் பரிமாணத்தில் இருந்து, எண்ணிலடங்காப் பரிமாணத்திற்குச் செல்ல அறிந்து கொண்டிருக்கின்றோம்” என்பதைப் புரிந்து கொள்கின்றோம்.

 

கற்பதற்குக் கரை இல்லை

எல்லா ஆன்மிக அறிவியலின் மாணவர்களும், புதிதாக வளர்ந்து வரும் ஆன்மிக அறிவியலார்களும், ஒவ்வொருவரும் மற்றவர்ளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இங்கு வந்திருக்கும் எல்லா ஆன்மிக அறிவியலார்களிடமிருந்து கற்று, உங்களுடைய ஆற்றலை உயர்த்திக் கொள்ள வேண்டும், உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், உங்களை வாழ்க்கையைச் சிறப்பாக்கிக் கொள்ள வேண்டும் என எதிபார்க்கின்றேன்.

கற்போம்… கற்போம்… கற்றுக்கொண்டே இருப்போம்

பிரமிட் ஆன்மிக இயக்கத்தின் கொள்கைப்படி, ’ஆன்மிகம், தெய்வீக வாழ்க்கை’ என்பது யாதெனின்:
1. எல்லா விலங்குகள், பறவைகள், மீன்கள், இவற்றினிடத்தில் கருணை காட்ட வேண்டும். அவற்றில் உறைந்திருக்கும் தெய்வீகத்தை, மனிதன் தன் உடலாலும், கருணை உள்ளத்தாலும் காப்பாற்ற வேண்டும்.

2. மனித வர்க்கத்திற்கு சரியான உணவு தாவர உணவு மட்டுமே. விலங்குகள் மனிதனுடன் இணைந்து வாழாவேண்டியவை. அவை மனிதனுக்கான உணவே அல்ல.

3. விலங்குகள், பறவைகள், மீன்கள், இவற்றை உணவிற்காகவோ அல்லது வேட்டையாடுவதற்காகவோ வதைப்பதை ஒருபொதும் அனுமதிக்க முடியாது. தற்காப்புக்குத் தவிர, வேறு எந்தக் காரணங்களுக்காகவும், விலங்கினம் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏதோ ஒரு தந்திரம் அல்லது சதியின் காரணத்திற்காக மனிதனைக் கொல்வது, ஒருபோதும், தற்காப்பு என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளப்படவே முடியாது.

4. கர்மாவின் விதிகளைப் புரிந்து கொள்ளுதல்:
வினை, வினைப்பயன் என்பதன் ஞானம் பெற்ற பிறகு, நம்முடைய சொல்லிலும், செயலிலும் மிகக் கவனமாக இருப்போம். ஏனெனின், நம்முடைய எண்ணம், சொல், செயல் முதலியன, அதன் உண்மையான தன்மையைப் பிரதிபலிக்குமென்பதால்தான். “மற்றவர் உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்களோ, அவ்வாறே நீங்கள் பிறரிடம் நடந்து கொள்ள வேண்டும்” என்ற பொன்மொழியினையும் நன்கு பிரிந்து கொள்வீர்கள்.

5. நம் ஓய்வு நேரம் முழுவதையும் தியானத்திற்காகப் பயன்படுத்துதல்:
அதாவது பிரபஞ்ச ஆற்றலினைப் பெற்றும் நம் சக்தியைப் பெருக்குதல். ஐந்து வயதிற்கு மேல் உள்ள எல்லோருக்கும் தியானம் அவசியம். ஒவ்வொரு நாளும் தியானத்திற்கான நாளாக இருக்க வேண்டும். தியானம் நல்ல சுகம் அளிக்கும், கவலையினால் தளர்ந்த மனதிற்கு உற்சாகம் அளித்து ஊக்கமூட்டும். 90% வியாதிகள் மனதைச் சார்ந்ததே.
எல்லா ஆன்மிக அறிஞர்களுக்கும் கட்டாயத் தேவை, மற்றும் தினமும் செய்கின்ற தியானப் பயிற்சிக்கு அவசியமானது “சைவ உணவுக் கொள்கை” என அறிவுறுத்துவதே, பிரமிட் ஆன்மிக இயக்கத்தை தேற்றுவித்ததின் குறிக்கோளாகும்.

“புதிய சம்பாலாவிற்கு” – அகில உலக பிரமிட் பள்ளத்தாக்கிற்கு எல்லோரும் வருக. இந்த ‘வேலி’ உங்களுடைய ஆற்றலினால் மிகவும் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.