“ செயல்கள் (தலை) எழுத்து ”

எழுத்து என்றால் “விதி”

செயல் என்றால் “சுய கர்மா”… சுய வினை

நாம் செய்யும் கர்மாக்களே நம் தலை எழுத்தாக மாறுகின்றது.

நம் செயல்களின் மூலம், நம்முடைய அதிர்ஷ்டம் / துரதிருஷ்டம் உருவாகிறது.

நம் முற்பிறவி கர்மாக்களை அனுசரித்து,

நாம் அனுபவிக்க வேண்டியதை

நம் பிறப்புக்கு முன்பே

நாமே நிர்ணயம் செய்து கொண்டு, பிறக்கிறோம்

இதுவே “பிராரப்த கர்மா”.

நம் செயல்களுக்கு எப்பொழுதும் நாமே காரணம்.

நம் நிகழ்கால கர்மாக்களே நம் கையில் இருக்கிறது.

ஆகையால், நம் பிராரப்த கர்மாக்களை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு, நம் நிகழ்காலத்தை தர்மத்துடனும், ஞானத்துடனும், யோகத்துடனும் இணைத்து வாழ வேண்டும்.