Select Page

தியானம் என்றால் என்ன ?

Patriji-in-Meditationதியானமானது ஓய்வில்லாது சலனத்துடன் இருக்கும் மனதை சாந்தப் படுத்துகின்றது. இதற்காக, நாம், நம் சுவாசத்துடன் தொடங்கு கின்றோம். தியானம் செய்வது மிக எளிதானது. கை விரல்களை கோர்த்துக் கொள்ளுங்கள். கால்கள் இரண்டும் ஒன்றின் மீது ஒன்று இருக்குமாறு அமர்ந்து கொள்ளுங்கள். கண்களை மூடிக்கொள்ளுங்கள். உங்கள் இயல்பான சுவாசத்தில் கவனம் வையுங்கள். இதுதான் தியானம் செய்யும் முறை. இத்தியானம் மனதை சாந்தப்படுத்தி, பிரபஞ்ச சக்தியை அளிக்கின்றது. இதனால் ஆன்ம சக்தி அதிகமாகி உடல்நலம், மன அமைதி மற்றும் ஞானத்தைப் பெறுகின்றோம். ஒரு பிரமிட் உள்ளே, அல்லது ஒரு பிரமிட் அடியில் தியானம் செய்தால், அது பிரமிட் தியானம் என்று அழைக்கப்படுகிறது. தியானம் செய்யும் முறை..

பிரமிட் ஆன்மிக மன்ற இயக்கம்

PSSM-Meditators-300x201பிரமிட் ஆன்மிக மன்றமானது மதச்சார்பற்ற, பிற கொள்கை சாராத, லாப நோக்கமில்லாத தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். ஆனாபானாசதி தியானம், சைவ உணவுக் கொள்கை மற்றும் பிரமிட் ஆற்றல் முதலியவற்றைப் பரப்புவது தான் இதன் முக்கிய குறிக்கோளாகும். உலகம் தழுவிய புதிய ஆன்மிகப் புரட்சியின் ஒரு அங்கமாக பிரமிட் ஆன்மிக மன்றம் விளங்குகின்றது. ஹிம்சையிலிருந்து அஹிம்சைக்கும், அசைவ உணவிலிருந்து சைவ உணவிற்கும், மூட நம்பிக்கைகளிலிருந்து ஆன்மிக அறிவியலுக்கும், மற்றும் பொருள் சார்ந்த உலகாயதத்திலிருந்து ஆன்மிகத்திற்கும் மக்களை வழி நடத்திச் செல்வதே இவ்வியக்கத்தின் நோக்கமாகும்.  மேலும் படிக்க…

பிரம்மர்ஷி பத்ரிஜி

Patriji-Laughing-300x200

பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள், பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நிறுவனர். சிறுவயதிலேயே, அவர் பெற்ற அனுபவங்களிலிருந்து, தியான சக்தியை உணர்ந்து, 1979 ஆம் ஆண்டில் ஞானம் அடைந்தார். அன்றிலிருந்து, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தியானம் மற்றும் சைவ உணவு கொள்கையை கற்பித்தல் என்பது அவர் தனது வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டுள்ளார். அவரது அணுகுமுறையானது மதச்சார்பற்ற மற்றும் அறிவியல் அடிப்படையானது. மேலும் படிக்க…

தியானம் செய்ய வேண்டும்

பிரமிட் பற்றி

mmpபிரமிட் என்பது முழுமையான வளர்ச்சியின் அடையாளமாகும். பிரமிடிற்கு நான்கு பக்கங்கள் உள்ளன. இவை நான்கு இனப்பிரிவுகளைக் குறிக்கின்றன. அவை கனிம இனம் (Mineral kingdom), தாவர இனம் (Plant kingdom), விலங்கினம் (Animal kingdom), மற்றும் மனித இனமாகும் (Human kingdom). பிரமிடில் இவை நான்கும் ஐக்கியமாகி ஒற்றுமை உணர்வை உணர்த்துகின்றன. இது தான் ஆன்மீகமாகும். மேலும் படிக்க…