Select Page

“ ஞானப்பிரகாசமுடைய ஆசான் என்றால் யார்? ”

திவ்ய பிரகாசத்தைப் பற்றியும், ஆன்ம தத்துவத்தைப் பற்றியும் சரியாகப் புரிந்து கொண்டு, அன்றாட வாழ்வில் அதைக் கடைப்பிடிப்பவன்… ஓர் “ஞானப்பிரகாசமுடைய ஆசான்” ஆவான்.

“இந்த சமுதாயத்தில் மனித வாழ்க்கையில் ‘எந்த உயரத்துக்கும் போக முடியும்’ எனப் புரிந்து கொண்டவன், மூர்க்கத்தனமான மரபுகளையும், கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகளையும், தன் வாழ்விலிருந்து முற்றிலும் கழற்றி எறிந்தவன்.

 

சரியான சாஸ்திர மற்றும் அறிவியல் கண்ணோட்டத்துடன் இருப்பவன்,

பலவித ஞானங்களுக்கும் ஆதாரம் “தியானம்” என்று தெரிந்து கொண்டவன்,

“சம்சாரத்தில் தான் முக்தி” என்று அறிந்து கொண்டவன்”,

காலத்தை ஓர் நொடி கூட வீண் செய்யாதவன்,

 

சிருஷ்டியிலுள்ள காரியகாரண சித்தாந்தத்தை முழுமையாகத் தெரிந்து கொண்டு, எதற்கும் வியப்படையாதவன்.

 

எப்பொழுதும் வடைப்புத்திறன் கொண்ட காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவன், ஆக்கவேலை மேற்கொள்பவன்,

 

ஒவ்வொரு நொடியும் சிரமம் மேற்கொண்டு, பலவித கலைகளில் திறமை காட்டுபவன்,

 

“எனக்கே அனைத்தும் தெரியும்” என இல்லாமல், “எனக்கு ஓரளவுக்குத் தெரியிம்” என எளிமையாக இருப்பவன்,

 

’கற்பதற்கு எல்லையில்லை’ என்று புரிந்து கொண்டவன்,

 

எவ்வித ஆன்மிக விஷயத்தையும் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு உதாரணங்களைக் காட்டி அளவாகப் பேசக் கூடியவன்,

 

உள்ளதை உள்ளபடி, இல்லாததை இல்லாதபடி பேசுபவன், வாழ்க்கையில் எதற்காகவும் சோகமடையாதவன்,

 

ஆன்மிகப் பணியில் உறுதி, அமைதி போன்றவை சகஜ சுபாவமாக இருப்பவன்,

 

’இந்த சிருஷ்டியில் அனைத்தும் நானே’, ’நானே இந்த சிருஷ்டி அனைத்தும்’ என்று அறிந்து கொண்டவன்,

 

தன்னிடம் எது இருந்தாலும், அதை அனைவருக்கும் பகிர்ந்து கொள்பவன், தன்னைவிடக் கீழ்நிலையில் இருப்பவர்களுக்கு எப்பொழுதும் கைக்கொடுத்து உதவுபவன்,

 

ஒவ்வொரு நொடியும் மானசீக மெளன நிலையில் இருந்தவாறு ’என் நிலைக்கு நானே காரணம்’ என அறிந்து வாழ்பவன்,

 

உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாலும் அதற்கு அடிமையாகாமல், எந்த நிலையிலும் அச்சமின்றி வாழ்பவன்,

 

கடந்த காலத்துடனோ, வருங்காலத்துடனோ, எதனையும் முடிச்சுப் போடாமல், சதா நிகழ்காலத்தில் ஆனந்தமாக வாழ்ப்வன்,

 

எவ்வித உணர்ச்சியையும் கட்டுப்படுத்தாமல், அனைத்தையும் அழகுற வெளிப்படுத்துபவன்,

 

கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்று புரிந்து வாழ்பவன்,

வாழ்க்கையில் இன்னல்கள் யாவையும் ’சவாலாக’ ஏற்றுக் கொள்ளும் திறன் படைந்தவன்”

 

இவனே ஞானப்பிரகாசம் பெற்ற ஆசான்.