“தியானம்”

 

தியானம் என்றால் நம்முடைய விழிப்புணர்வானது – ‘மனம் – உடல்’ என்பதிலிருந்து ‘மனம் – ஆன்மா’ என்பதற்கு மாற உதவுவதாகும்.

‘உடல் – மனம்’ மற்றும் ‘மனம் – ஆன்மா’ என்கிற இரண்டு உணர்வு நிலைகளிலும், முழுமையாக கிரஹித்துக் கொண்டிருப்பதை, மனதில் பதிய வைத்துக் கொள்வதே விழிப்புணர்ச்சி ஆகும்.

தியானமும், உறக்கமும் உடலின் வெளியே நடக்கும் தற்காலிக அனுபவங்கள். உறக்கம் என்பது விழிப்புணர்வு இல்லாத உடல் அனுபவம். தியானம் என்பது விழிப்புணர்வுடன் கூடிய உடல் அனுபவம். மகான் அல்லாதவர்களுக்கு ‘இறப்பு’ என்பது விழிப்புணர்வு இல்லாத உடல் அனுபவம். மகான்களுக்கு ‘இறப்பு’ என்பது விழிப்புணர்வுடன் கூடிய உடல் அனுபவம்.

சைவ உணவு என்பது, மிருகத்தனமான மனிதர்களை, நேயமுள்ள மனிதர்களாக்கும். தியானம் என்பது மனிதத்தன்மை உள்ள எல்லா மனிதர்களையும் தெவத்தன்மை உள்ளவர்களாக்கவல்லது! இரண்டு மிகப்பெரிய படிகள் மட்டுமே சமுதாயத்திற்குத் தேவைப்படுகின்றன.

 

1. ஹிம்சையிலிருந்து அஹிம்சைக்கு அதாவது அசைவ உணவிலிருந்து சைவ உணவிற்கு மாறுவது.

 

2. உடல் விழிப்புணர்விலிருந்து, ஆனம் விழிப்புணர்விக்கு மாறுவது ஆகும்.