தியானம் செய்ய வேண்டும் – பாடல்”

தியானம் செய்ய வேண்டும்…

தியானம் ஒன்றே செய்ய வேண்டும்

தியானம் செய்தால் ஞானம்…

ஞானம் பெற்றால் முக்தி…

(தியானம்…)

 

சுவாசம் மீது கவனம்

அதுவேதான் தியானம்…

(தியானம்…)

 


சுவாசமே சத்குரு

சுவாசமே மார்க்கம்

சுவாசமே பிராணன்

சுவாசமே ஜீவன்… ஜீவன்

சுவாசத்திலே… நிலைக்க வேண்டும்

மனம்… சுவாச்த்திலே

நிலைக்க வேண்டும்…

(தியானம்…)

 

தியானமே செய்தால்

சத்யமே தெரிந்தால்

விடுதலை கிடைத்தால்

அதுவே பெரும் வரம்… பெரும் வரம்

வரங்களை… பெறலாமே….

அதற்கு தியானம் செய்யலாமே…

(தியானம்…)

 

ஆன்மாவே சத்தியம்

ஆன்மாவே நித்யம்

நாமே.. ஆன்மா..

நமக்கே வெற்றி.. வெற்றி

வெற்றியே கிடைக்க வேண்டும்

அதற்கு தியானம் செய்ய வேண்டும்…

(தியானம்…)

 


வைத்யனை மறந்து

ஒளடதம் துறந்து

ஆன்மாவில் கலந்தால்

அதுவே வைத்யம்… வைத்யம்

ஆன்மாவில் சேரலாமே

தியானம்… செய்யலாமே…!

(தியானம்…)

 

 

சுய அபகாரமே பர அபகாரம்

சுய உபகாரமே பர உபகாரம்

உபகாரம்.. செய்யலாமே

தியானம் கற்பிக்கலாமே…!

(தியானம்…)

 

சைவாகாரமே புண்யாகாரம்

அசைவாகாரமே பாவாகாரம்

அசைவத்தை விடுத்துவிட்டு

பாவத்தை விலக்கிடுவோம்… அதற்கு

தியானம் செய்திடுவோம்…

தினமும் தியானம் ஒன்றே செய்திடுவோம்…

(தியானம்…)

 

பாவமே ரோகம்

புண்யமே போகம்

தானமே தர்மம்

ஞானமே மோட்சம்… மோட்சம்.

மோட்சமே கோருகின்றோம்… அதற்கு

தியானம் செய்கின்றோம்…

(தியானம்…)