Select Page

“ தியான விஞ்ஞான சாஸ்திரம் ”

தியான விஞ்ஞான சாஸ்திர்’த்தில் ஐந்து முக்கிய அம்சங்கள் உள்ளன. அவை: 1. ஆசனம், 2. பிராணாயாமம், 3. பிரத்யாஹாரம், 4. தாரணை, 5. தியானம்.

ஆசனம்

      ’ஆசனம்’ என்பது சரீரத்துடன் ஒன்றியிருப்பது. உங்களை நான் பார்க்கும்போது, நான் கண்களுடன் ஒன்றியிருக்கிறேன். உங்கள் கண்கள் என் கண்களுடன் ஒன்றியிருக்கின்றன. என்னைப் பார்ப்பதை விட்டுவிட்டு உங்கள் சரீரத்துடன் ஒன்றியிருப்பது ’ஆசனம்”.

      கண்கள் திறந்திருந்தால் பிரபஞ்சத்துடன் ஒன்றியிருப்போம். கண்களை மூடினால் உங்கள் சரீரத்துடன் நீங்கள் ஒன்றியிருப்பீர்கள்!

சரீரத்துடன் ஒன்றியிருப்பதே ’ஆசனம்’. முதலில் வெளி உலகத் தொடர்பைத் துண்டிக்க வேண்டும். உலகுடனான தொடர்பில் எண்பது சதவிகிதம் கண்களால்தான் நடைபெறுகிறது. ஆகையால் கண்கள் இரண்டையும் மூடிக்கொள்ள வேண்டும்.

ஆமை ஒன்று தன் அவயங்களை எப்படி மூடிக்கொள்கிறதோ, அதுபோல் நம் கர்மேந்திரியங்களை, ஞானேந்திரியங்களை மூடிக்கொள்ள வேண்டும்.

பிராணாயாமம்

      இயல்பான சுவாசத்துடன் இணைந்திருப்பது! எளிதான சுவாசத்துடன் இணைந்திருப்பது! சகஜமான சுவாசத்தின் மீது கவனம் வைக்க  வேண்டும்! சுவாசத்தின் ஆழம், வேகத்தைக் கவனிப்பது ’சுகமய பிராணாயாமம்’.

      தன் குழந்தையின் மீது தாயின் கவனம் இருக்கும்வரை குழந்தை சுகமாக இருக்கும். தாயின் கவனம் மாறினால், குழந்தை அழ ஆரம்பிக்கும். ’குழந்தை’ என்பது ’மனம்’; தாய்’ என்பது ’சுவாசம்’.

தாயின் மடியே குழந்தைக்கு நிம்மதி! சுவாசத்தின் மடியே மனதிற்கு நிம்மதி! ’சுவாசத்தின் மீது கவனம்’ மூலமே நிலையான மனம் சுலபம்… நிலையான மனமே சுகம்… சஞ்சலமான மனதினால் மிகப்பெரிய துக்கம்.

பிரத்யாஹாரம்

      சுவாசத்தின் மீது கவனத்தை நிறுத்தினால் சுவாசம் முழுமையாக நின்று மனம் சூன்யமாகி, வெளிக்கவனம் உள்கவனமாக பரிணாமம் அடைகிறது!

 அந்நிலையில் உள்ளிருந்து ’பிராண-ஆகாரம்’ கிடைக்கிறது. இதையே ’பிரத்யாஹாரம்’ என்கிறோம். புதிதாக நாம், பிராணசக்தி பிரபஞ்சத்தில் பிரவேசிக்கிறோம்! அப்போது அக பிராணசக்தியுடன் ஒன்றிப்போய்… படிப்படியாக அக பிராணசக்தி அளிக்கும் அனுபவங்கள் மீது ஒன்றிவிடுவோம்!

தாரணை

அப்போது அந்நிலையில் புதிது புதிதாகக் காட்சிகள் தோன்றிக்கொண்டே இருக்கும். அவ்வாறு சிறிது சிறிதாக தெரியும் அகக் காட்சியுடன் ஒன்றியிருப்பது ’தாரணை’!

படிப்படியாக அகக்காட்சிகள் தெளிவாக, மிகத்தெளிவாக மகான்களின் தரிசனங்கள் கிடைக்கும். மகான்களின் பேச்சுகளும் கேட்கும்! அந்தக் காட்சிகளின் மீதும், அந்த பேச்சுகளின் மீதும் ஒன்றியிருப்பது ’மஹாதாரணை!

தியானம்

நூற்றுக்கு நூறு சதவிகிதம் அகக்காட்சிகளின் பிரபஞ்சத்தில் ஒன்றியிருப்பதைச் சாதிக்கும்போது பெளதிக உடலிலிருந்து ’மற்றொரு உடல்’ வெளியில் வரும். அந்தந்த சரீரங்களுடன் பயணங்கள் மேற்கொள்வோம். அது யாவும் கலந்ததே ’தியானம்’.

பெளதிக உடலுடன் பெளதிக உலகில் பயணம் செய்வதுபோல், சூட்சும உடலுடன் சூட்சும உலகில் பயணம் செய்கிறோம்! ’காரண உடலுடன்’ காரண உலகிலும், ’மஹா காரண உடலுடன்’ மஹா காரண உலகிலும் பயணம் செய்கிறோம்!