Select Page

“ ஆலயமெல்லாம் தியானாலயம் ”

ஒவ்வொரு ஆலயத்திலும் ஒரு தியானாலயம் கட்டாயமாக இருக்க வேண்டும்.

தியானாலயம் ஒரு “பிரமிட் வடிவத்தில்” இருந்தால் சாலச்சிறந்தது.

ஏனெனில் பிரமிடில் தியான ஆற்றல் மும்மடங்காகிறது.

ஒவ்வொரு ஆலயத்திலும் ஒரு “பிரமிட் தியானாலயம்” அவசியம் இருக்கவேண்டும்.

ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டயமாக தியான சாதனை செய்ய வேண்டும்.

ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தியானிகளாக வேண்டும்.

ஆலயம் பக்தர்களுக்குத் தியானத்தைப் பரிசாக அளிக்க வேண்டும்.

இப்பரிசைப் பெற வேண்டும் என்றால் ஆலயங்களில் தியானாலயம் இருக்க வேண்டும்.

“அஹம் பிரம்மாஸ்மி”, “நம் சுவாசமே நமது குரு” என பக்தர்கள் அனைவரும் அறிய வேண்டும்.

ஒவ்வொரு ஆலயத்திலும் தியான ஆசிரியர் அவசியம் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆலயத்திலும் ஆன்மப் பாடம், ஆன்ம ஞானம் அவசியம் போதிக்கப்பட வேண்டும்.

சிறுவயதிலிருந்தே அனைவரும் தியானம் செய்ய வேண்டும்.

தியானம் செய்பவர்களுக்கு உடல்நலம் கிடைக்கும்; ஆரோக்கியமே மகா பாக்கியம்.

தியானம் செய்வதனால் மருத்துவச் செலவு, மருத்துவர் கட்டணம், மருந்துக்கான செலவு யாதும் இருக்காது.

மனம் சாந்தமாக இருந்தால், உடல் நலமாக இருக்கும்.

சுவாசம் மீது கவனம் வைத்துச் சாதகம் செய்தால் மனம் சாந்தம் அடையும்.

மன நலமே உடல் நலம்.

இச்சரீரத்தில் ஆன்ம உணர்வோடு வாழ்வதே ஆன்மிக வாழ்க்கை

சம்சார வாழ்வில் மோட்ச உணர்வோடு வாழ்வதே ஆன்மிக வாழ்க்கை.

சகல துன்பங்களிலும் தாம் நீதியோடு வாழ்வதே ஆன்மிக வாழ்க்கை.

“தர்மம்” என்றால் “அஹிம்சை” … “அதர்மம்” என்றால் “இம்சை”

“இம்சை” என்பது விலங்குகளைக் கொல்வது மற்றும் உண்பதாகும்.

“அஹிம்சை” என்பது “சைவ உணவை” உண்பதாகும்.

ஒவ்வொரு ஆலயத்திலும் அஹிம்சையைப் போதிக்க வேண்டும்

ஒவ்வொரு ஆலயமும் கட்டாயமாகக் சைவ உணவுக் கொள்கையைப் பரப்ப வேண்டும்.