“ புத்தம் சரணம் கச்சாமி ”

“புத்தம் சரணம் கச்சாமி”

என்பதைத் தவிர வேறு சரணமில்லை.

 

எவராயிருந்தாலும் சரி இந்த ஜன்மம் முதலாவது

அல்லது இடைப்பட்டது அல்லது இறுதி ஜன்மம்

ஆயினும் “புத்தம் சரணம் கச்சாமி” இதைத் தவிர

வேறு சரணம் இல்லை

 

குழந்தையிலிருந்து முதியோர் வரைக்கும்

பாமரரிலிருந்து பண்டிதர் வரைக்கும்

சாமானியனிலிருந்து பலவான் வரைக்கும்

இளமை ஆன்மாவிலிருந்து, முதிய ஆன்மா வரைக்கும்

எல்லோருக்கும் ஒரே மாதிரியாக பயன்படக்கூடியது

எல்லோரும் ஒரேவிதமாக வளர்ச்சி பெறவும்

“புத்த மார்க்கம்” தவிர இந்த விஸ்வத்தில்

வேறு சத்தியம் கிடையாது.

 

கெளதம புத்தர் அளித்த தியானமே தியானம்

கெளதம புத்தர் போதித்த ஞானமே ஞானம்

கௌதம புத்தர் வாழ்ந்த வாழ்க்கையே வாழ்க்கையாகும்

கௌதம புத்தரின் புன்னகையே புன்னகையாகும்

கௌதம புத்தரின் ஒவ்வொரு சொல்லும் திவ்யமே, திவ்யம்

கௌதம புத்தர் காணும் காட்சியே திவ்யமே, திவ்யம்

கௌதம புத்தரின் எல்லா அசைவுகளும் திவ்யமே, திவ்யம்

கௌதம புத்தரின் மௌனமே திவ்யமே திவ்யம்.

 

பிரமிட் ஆன்மிக மன்ற தியானிகளின் தியான ரீதியும்,

ஞான ரீதியும், வாழ்வின் ரீதியும், கௌதம புத்தரின்

தியான ரீதி, ஞான ரீதி, வாழ்வின் ரீதிக்குச்

சரிசமமாக இருக்க வேண்டும்.

 

புத்தம் சரணம் கச்சாமி!