Select Page

“ பிரம்மர்ஷி பத்ரிஜியின் போதனைகள் ”

நாம் எல்லோரும் கடவுள்கள்.

ஆன்மிகத்தின் நியதி கர்மாவின் நியதியாகும்.

நேரத்தை ஆக்கப்பூர்வமாகச் செலவிட வேண்டும். உங்களுடைய வேலைகளை முடித்தபின் நேரத்தை வீணாக்காதீர்கள். தியானத்தில் அமர்ந்து, அதிகமான பிரபஞ்சத்தின் சக்தியினைப் பெறுங்கள்.

நம்முடைய குறிக்கோள் ஒரு யோகியாக மாறுவதேயாகும்.

நாம் தசையோ, எலும்புகளோ அல்ல, நாம் உன்னதமான கடவுள்கள்.

நீங்கள் பணம் சம்பாதிப்பது, நல்ல ஆன்மிகப் புத்தகங்ளை வாங்கிப் படிப்பதற்காக மட்டுமே.

நீங்கள் அடைய வேண்டியது, நுட்பமான அறிவு; பணமல்ல!

மருத்துவர்களும் வேண்டாம், மருந்தும் வேண்டாம்!

எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் புலால் உணவு(அசைவம்) உண்பதே.

சைவ உணவு உண்பவர்களாக இருங்கள்.

உடலுக்கு மரணம் உண்டு, ஆன்மாவிற்கு மரணமில்லை.

ஆன்மா மரணமில்லாத காரணத்தினால் ஒருவருக்கு மிகவும் நெருக்கமானவர் இறந்தாலும் கண்ணிர் சிந்தக்கூடாது.

அப்படி நீங்கள் அழுதால் நீங்கள் ஆன்மிகத்தில் இல்லை.

ஒவ்வொருவரும் வாயுபுத்திரராக ஆக வேண்டும்.

உங்கள் சுவாசத்தை நீங்கள் உற்றுக் கவனிக்கும்போதுதான் நீங்கள் ஒரு வாயுபுத்திர்ராக ஆகிறீர்கள்.

ஸ்ரீமத் அனுமான் ஒரு வாயுபுத்திரன், அவர் சிரஞ்சீவி ஆனார்.

நீங்களும் ஒரு வாயுபுத்திரன் ஆனால் மட்டுமே அனுமனைப்போல சிரஞ்சீவியாக மாற முடியும்.

 நீங்கள் முடிவு செய்தால் மட்டுமே உங்களுக்கு மரணம் ஏற்படும். அதற்கு மாறாக ஸ்ரீமத் அனுமனைப் போன்று நீங்களும் இதே உடலில் பல வருடங்கள் ஜீவனோடு வாழலாம்.

யாரும் உங்களுக்கு எதிரிகளே இல்லை.

நீங்கள் அசைவ உணவு உண்ணும்போது நீங்களே உங்களுக்கு எதிரியாகிறீர்கள்.

நீங்கள் சைவ உனவை மட்டுமே உண்டு, தியானத்தில் ஈடுபடும்போது, நீங்களே உங்களின் மிக நெருங்கிய நண்பராக ஆகிறீர்கள்.

எப்போதும் நிகழ்காலத்திலேயே வாழுங்கள். கடந்த காலத்திலோ அல்லது வருங்காலத்திலோ அல்ல.

ஒவ்வொவரும் ஒரு பிரமிடினை அமைத்திட வேண்டும்.

ஒருவர் உடல், மண்ம் மற்றும் ஆன்மாவினைப் பற்றி அறிந்துகொள்ள ஒருவர் ஆன்மிகப் புத்தகங்களை அவசியம் படிக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் மனதின் அபார சக்தியை அறிய வேண்டும். அதன் மூலமாக உங்களுடைய சொந்தப் பரிச்சனைகளைத் தீர்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பல ஆசான்கள் மனதின் அற்புதசக்தி குறித்துப் பல நூல்களை எழுதி வைத்துள்ளனர். அவை எல்லாவற்றையும் நீங்கள் படிக்க வேண்டும்.

உங்கள் மனதின் சக்தியை உங்களின் சொந்த வளர்ச்சிக்கும், உங்களை நீங்களே அறிந்துகொள்ளவும் உபயோகியுங்கள்.

இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் இரண்டும் உள்ளது. தியானத்தில் ஈடுபடாதவர்கள் கிஷ்கிந்தா காண்டத்தைப் போன்ற ஒரு நிலையிலேயே (ஒரு குரங்கின் மன இயல்பொடு) வாழ்கிறார்கள். தியானத்தில் ஈடுபாடுபவர்கள் சுந்தர காண்டத்தைப் போன்ற நிலையில் வாழ்கிறார்கள்.