Select Page

“ பக்தியோபநிஷத் ”

“ பக்தி சாலச்சிறந்தது ”

நம் உடல் நலத்தின் மேல் நமக்கு பக்தி இருக்க வேண்டும்.

நம் மனநலத்தின் மேல் நமக்கு பக்தி இருக்க வேண்டும்.

நம் புத்தி வளர்ச்சியின் மேல் நமக்கு பக்தி இருக்க வேண்டும்.

நம் நிரந்தர தியான பயிற்சியின் மேல் நமக்கு பக்தி இருக்க வேண்டும்.

நம் ஆன்ம அனுபவங்கள் மேல் நமக்கு பக்தி இருக்க வேண்டும்.

நம் நிகழ்கால விழிப்புணர்வு மேல் நமக்கு பக்தி இருக்க வேண்டும்.

யம, நியமங்கள் அனைத்தின் மேலும் நமக்கு பக்தி இருக்க வேண்டும்.

நம் அன்றாட நிகழ்வுகளின் மேல் நமக்கு பக்தி இருக்க வேண்டும்.

பிள்ளைகள்பால் நமக்கு பக்தி இருக்க வேண்டும்.

அனைத்து கலைகள், கல்வி இவற்றின் மேல் நமக்கு பக்தி இருக்க வேண்டும்.

நம் ஆன்மாவின் எல்லையில்லா ‘சாதிக்கும் திறன்’ மேல் நமக்கு பக்தி இருக்க வேண்டும்.

நம் ஆன்மாவின் எல்லையற்ற ஆற்றல் மீது நமக்கு பக்தி இருக்க வேண்டும்.

சிருஷ்டியின் அற்புத படைப்பின் மேல் நமக்கு பக்தி இருக்க வேண்டும்.

விஸ்வத்திலுள்ள அனைத்து யோகிகளின் மேலும் நமக்கு பக்தி இருக்க வேண்டும்.

எல்லா மனிதர்கள்பாலும் நமக்கு பக்தி இருக்க வேண்டும்.

அனைவரது ஆரோக்கியத்தின் மேலும் நமக்கு பக்தி இருக்க வேண்டும்.

எல்லோரின் மனநலம் மற்றும் புத்தி வளர்ச்சியின் மேல் நமக்கு பக்தி இருக்க வேண்டும்.

அனைத்து ஜீவராசிகளின் மேலும் நமக்கு பக்தி இருக்க வேண்டும்.

அனைத்து விலங்கினங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மேல் நமக்கு பக்தி இருக்க வேண்டும்.

பூமி, இயற்கை அனைத்தின் மேலும் நமக்கு பக்தி இருக்க வேண்டும்.

சுற்றுச்சூழலை ஒருபோதும் மாசுபடுத்தக் கூடாது.

சுற்றுச்சூழலின் இயற்கை நிலையை பாதுகாக்க வேண்டும்.

இதுவே பக்தியோகம்

இதுவே பக்தி சித்தாந்தம்,

பக்தி சாலச்சிறந்தது

பக்தியுடன் இருப்போம்.