Select Page

“ அவரவரது ‘வாழ்க்கை வழி’ அவரவர்களுடையதே ”

நம் வாழ்க்கை நமதே… பிறரது வாழ்க்கை பிறருடையதே.

நம் பணியை நாம் செய்து கொண்டே போக வேண்டும்.

மற்றவரைப் பற்றி அதிகம் சிந்திக்கத் தேவையில்லை.

ஒரு கர்மாவிற்கு பிறகு மற்றொரு கர்மா….

இவ்வாறு கர்மாக்களைத் தொடர்ந்து செய்து கொண்டே போக வேண்டும்.

‘கர்மா’ என்பது அனுபவத்தை அளிக்கிறது.

ஓர் அனுபவத்திற்குப் பிறகு மற்றொரு அனுபவம்..

இவ்வாறு அனுபவங்களைப் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

‘அனுபவங்களை உருவாக்கிக் கொள்வது’, ‘அனுபவங்களை அனுபவிப்பது’ என்பது ஒரு மாபெரும் கலை. இது ஒரு சிறந்த சாஸ்திரம்.

எல்லா அனுபவங்களையும் நாம் ஆனந்தமாகப் பெற வேண்டும்.

‘அனுபவங்களை ஆனந்தமாக ஏற்றுக் கொள்வது என்பது நம் ஜீவசக்தியை வளப்படுத்தும்.

ஆனந்தமில்லாமல் செய்யும் செயல்கள் அனைத்தும் மற்றும் மற்றவரின் பாராட்டுக்காக, நமக்கு விருப்பம் இல்லாமல் செய்யும் செயல்கள் அனைத்தும் நம் ‘ஜீவசக்தியை’ உடனுக்குடன் கரைத்துவிடும்.

நம் ‘ஜீவசக்தியை’ வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எவரைப் பற்றியும், எந்த வகையான ஒரு தீர்ப்பையும், ஒருபோதும் அளிக்கக் கூடாது.

எந்த விஷயத்திலும் மற்றவர்களுக்கு தீர்ப்பளிக்கும் அதிகாரம், நமக்கில்லை.

அதேபோல் நம்மைப்பற்றி, தீர்மானிக்கும் அதிகாரம், எவருக்கும் இல்லை.

நம்மைப் பற்றி, எவருக்கும் எவ்வித விளக்கமும் அளிக்கத் தேவையில்லை.

நம் சொந்த விஷயங்களைப் பற்றியும் எவருக்கும் எவ்வித விளக்கமும் அளிக்கத் தேவையில்லை.

மற்றவர்களை தீர்மானிப்பது… மற்றவர்களுக்கு விளக்கம் அளிப்பது என்பவை,

நம் ‘ஜீவசக்தியை’ பெருமளவில் குறையச் செய்யும்.

நம் ‘ஜீவசக்தியை’ நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

நம் ‘ஜீவசக்தியை’ மிக விரைவாக வளரச்செய்வது என்பது நம் தியான பயிற்சியில்தான் உள்ளது,

நம் வாழ்க்கை என்பது நமக்கு நாமே பரிமாறிக் கொள்ளும் உணவு.

நாம் உண்ணும் உணவை நாமே சமைக்க வேண்டும்.

நாம் சமைத்த சமையலை நமக்கு நாமே பரிமாறிக் கொள்ள வேண்டும்.

அவரவர்களுடைய வாழ்க்கை வழி அவரவர்களுடையதே.

அவரவருக்கு அவரவர்தான் உதவ வேண்டும்

தன்கையே தனக்குதவி.