Select Page

“அற்புத மனம்”

ஆன்மாவே மனதின் ஆதாரம்

மனமே வாழ்க்கையின் ஆதாரம்

மனமே ‘விதை’, வாழ்க்கையே ‘மரம்’.

வாழ்க்கை என்ற மரம் தழைத்து வருவது ‘மனம்’ என்ற விதையிலிருந்தே. நாம் தான் நம் மனதின் ‘சிற்பிகள்’. நாம் தான் நம் மனதின் வளர்ச்சிக்கு ‘ஆதரவாளர்’. அதேபோல் நம்மால் எந்த ஒரு நொடிப் பொழுதிலும், (அப்போது) மனதில் பதிவானவற்றை நீக்கிவிட்டு புதிய எண்ணங்களை உருவாக்க முடியும்.

மனிதமனதின்வகைகள் – Types of Mind

1) விபரீத மனம் – Disastrous Mind

2) எதிர்மறை மனம் – Negative Mind

3) நேர்மறை மனம் – Positive Mind

4) அற்புதமான மனம் – Miraculous Mind

 

விபரீத மனம்

உதாரணமாக ஒருவர் முதன்முறையாக நகரின் நெரிசலில் வாகனம் ஓட்டி செல்கிறார் என்று
வைத்துக் கொள்வோம். விபரீத மனம் கொண்ட ஒருவர் கீழ்கண்டவாறு கூறுவார்.

“இதுவே நான் நெரிசலில் ஓட்டுகின்ற முதன்முறை, ஆகவே விபத்து நடக்கும் என்று அச்சமாக உள்ளது”.

இதைப்போன்ற எண்ணங்களை மனதில் எண்ணிக்கொண்டு ஓட்டும்போது, விபத்து நடப்பது திண்ணம். ஏனெனில், அவரே கூறிவிட்டார் ‘விபத்து நடக்கும்’ என்று.

 

எதிர்மறை மனம்

இது இரண்டாவது வகையான மனிதர் – எதிர்மறை மனம் கொண்ட ஒருவர், என்ன கூறுவார் என்றால், “நான் முதன் முறையாக நெரிசலான நகர்புறத்தில் ஓட்டுகிறேன். என்ன நடக்கும் என்பதை அறியேன். விபத்து நடப்பதற்கும் வாய்ப்பு உண்டு, விபத்து நடக்காமல் இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு… நான் அறியேன்.”

இப்படி ஒரு எண்ணத்தை மனதில் உருவாக்கியவர், விபரீதம் நடப்பதை தடுப்பார். ஆனால் எங்காவது, ஏதோ ஒரு வகையில் பிரச்சனையைச் சந்திக்க நேரிடும். அதாவது தவறான இடத்தில் வாகனத்தை நிறுத்துவதோ அல்லது தவறான வழியில் செல்வது போன்ற ஏதாவது நடக்கும். ‘விபத்து’ நடக்காவிட்டாலும் ‘பிரச்சனை’ கண்டிப்பாக ஏற்படும்.

 

நேர்மறை மனம்

மூன்றாவது வகையான, அதாவது நேர்மறை மனமுடையவர் என்ன கூறுவார் என்றால், “நான் நெரிசலான நகர்புறத்தில் முதன்முறையாக வாகனத்தை ஓட்டிச் சென்றாலும், அனைத்தும் மிக நன்றாகவே அமையும். எந்த அசம்பாவிதமும் நடக்காது”. இதுவே அவர் நெரிசலில் ஓட்டும் முதன்முறையாக இருந்தாலும், அவராகவே திறமையாக, பாதுகாப்பாக ஓட்டி, திரும்பி வந்து சேருவார்.

 

அற்புதமான மனம் (அதிசயங்களை தோற்றுவிக்கும் மனம்)

கடைசியாக நான்காவது வகை மனிதர்… தலைவர்… இவருடைய மனதின் திண்மை அற்புதமானது. இவரும் முதன்முறையாகவே நெரிசலில் ஓட்டுகிறார். இருப்பினும், “இன்னும் இருபது நிமிடங்களில், குறிப்பிட்ட இடத்தை அடைந்து, திரும்பி வந்து சேருவேன்”.

முதன்முறையாக இருப்பினும் ஒரு குறிக்கோள் வைத்துக் கொண்டு, அதை தன்னுடைய சவாலாக ஏற்பார். இதுவே அற்புதமான மனம்.

எடுத்துக்காட்டாக, ‘ஏசு மனமோ’ அல்லது ‘புத்தர் மனமோ’ ‘நேர்மறையான மனம்’ அல்ல அதற்கும் மேலான ‘அற்புதமான மனம்’. நாம் எப்பொழுதும் ‘அற்புதமான மனதை’ அடையப் பெறுவதில் குறியாக இருக்க வேண்டும். அதுவே நமது லட்சியமாக இருக்க வேண்டும். அப்போது பிறவி எடுக்கும் பொழுது லட்சியத்தைத் தேடி அவற்றை நிறைவேறச் செய்யும்.

நமது லட்சியத்தை நிர்ணயிக்கும் பொழுது.. நம் வாழ்விற்கு சீரான பாதை ஏற்பட்டுவிடும். லட்சியத்தை தீர்மானிக்கவில்லையேல் வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும். நாம் குறிக்கோளை தீர்மானிக்கவில்லையேல், வாழ்க்கை பாதையற்றதாகி விடும். வாழ்வில் தேக்கம் ஏற்பட்டுவிடும். ஆகவே எப்பொழுதும் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட பாதையில் செல்ல மனதில் திண்ணம் வேண்டும். குறைந்தபட்சம் நேர்மறை மனம். அதிகபட்சம் அற்புதமான மனம்.

நம் வாழ்க்கை அற்புதமாக இருக்க வேண்டும் என்றால், மனதை அற்புதமானதாக பரிணமிக்கப் பழகுங்கள். உங்கள் லட்கியம் அற்புதமானதாக மிளிர, சற்று சிரமம் மேற்கொள்ளுங்கள்.

நமது மனம் விபரீதமாக இருந்தால் விபரீதமான வாழ்க்கைதான் தொடரும்.

நமது மனம் எதிர்மறையாக இருந்தால், எதிர்மறையான வாழ்க்கைதான் உருவாகும்.

நமது மனம் நேர்மறையாக இருந்தால், வாழ்க்கை நேர்மறையானதாகவே அமையும்.

அற்புதமான மனம் இருந்தால், அற்புதமான வாழ்க்கை நிச்சயம் உண்டாகும்.

மனம் எப்படியோ… வாழ்க்கையும் அப்படியே அன்றோ?.

 

தியானம் அற்புதமான மனோ நிலையைத் தரும்

தீவிரமான தியானம் மட்டுமே அற்புதமான மனதைப் பெற்றுத் தரும். ஒருவர் தியானம் செய்யவில்லை என்றால், அதிகபட்சமாக நேர்மறையான மனம் பெற்றிருக்க வாய்ப்புண்டு. நேர்மறையான மனதிலிருந்து “அற்புதமான மனம்” பெற வேண்டும் என்றால், தீவிரமான தியானம் செய்தே ஆக வேண்டும். எவ்வளவு தீவிர தியானம் செய்கின்றோமோ, அவ்வளவு சிறப்பன அற்புதங்களை நாம் காண்போம்.