Select Page

“ நாம், நம் எல்லா பிறவிகளையும் போற்றுவோமாக ”

Ø  நம் பிறப்பை நாமே தேர்ந்தெடுக்கிறோம்.

Ø  நாம் வாழும் உலகை நாமே தேர்ந்தெடுக்கிறோம்.

Ø  நம் பெற்றோரை நாமே தேர்ந்தெடுக்கிறோம்.

Ø  நம் வாழ்வின் சட்டதிட்டங்களை நாமே தேர்ந்தெடுக்கிறோம்.

Ø  நாம் இந்த உலகத்திற்கு காரணமின்றி வரவில்லை.

Ø  நாம் யதேச்சையாக அன்னையின் கருவில் புகவில்லை.

Ø  முந்தைய முடிவும், தேர்வும் இல்லாமல் இது நடக்கவில்லை.

Ø  நாம் நம்முடைய பிறப்பை தேர்ந்தெடுத்து, முடிவெடுத்துள்ளோம்.

Ø  விதிவசத்தால் இந்த உலகத்தில் பிறந்து விட்டோம் என வருந்தத் தேவையில்லை.

Ø  நாம் இங்கே கொண்டாடுவதற்கும், குதூகலிப்பதற்கும் வந்திருக்கின்றோம்.

Ø  இவை எல்லாமே நம்முடைய தேர்வும் முடிவெடுத்தலுமாகும்

Ø  இந்த உலகை வழ்க்கையானது நம் ஆன்மாவிற்கு வளமான ஞானத்தைத் தரும்.

Ø ஒவ்வொரு அனுபவமும், “ஆன்மாவின் ஒட்டுமொத்த ஞானம்” எனும் துணியில் இழையாக சேர்க்கப்படுகின்றது.

Ø  நாம், நம் அனைத்துப் பிறவிகளையும்

வரவேற்போமாக, போற்றுவோமாக.

Ø  நாம், நம் அனைத்து அனுபவங்களையும்

வரவேற்போமாக, போற்றுவோமாக.

Ø  நாம், நம் அனைத்து இன்ப, துன்பங்களையும்

வரவேற்போமாக, போற்றுவோமாக.

Ø  நாம், நம் அனைத்து வெற்றி, தோல்விகளையும்

வரவேற்போமாக, போற்றுவோமாக.

Ø  நாம், நம் அனைத்து உணர்ச்சிகளையும், புலன் உணர்வுகளையும்

வரவேற்போமாக, போற்றுவோமாக.