Select Page

“ அந்தக்கரணம் – யோகஸதூஷ்ட்டயம் ”

அந்தஃகரணம் = மனம் + புத்தி + சித்தம் + அகங்காரம்

மனம் = சங்கல்ப, விகல்பங்களை செய்வது – (எண்ணங்கள்)

புத்தி = நல்லவை, கொட்டவைகளைத் தெரிய வைப்பது

சித்தம் = நிரந்தரமாக சிந்தனை செய்வது

அகங்காரம் = “நான்”, “எனது” என்பது “அஹம்பிரம்மஸ்மி” என்றால் “நான்” என்பது பிரம்மா. மகாபாரதத்தில் கிருஷ்ணர், “பிரம்மாவிற்கு” சமமாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

“சதுர்முகேன பிரம்மஹ” என்றால் பிரம்மனுக்கு நான்கு முகங்கள் உள்ளன என்பது. நான்முகன்- நான்கு முகங்கள் மூலமாக நான்கு விதமான யோகங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

வேதவியாசர் எழுதிய மகாபாரதத்தில், “துஷ்ட்ட சதூஷ்ட்டயம்” என்றால் மனோ, புத்தி, சித்த, அகங்காரம் எனும் அந்தக்கரணங்களுடைய நான்கு நிலைகளை தெரிவிக்கும்.

மனம்- துச்சாதனன்

புத்தி – கர்ணன்

சித்தம்- சகுனி

அகங்காரம் – துரியோதனன்

1) பக்தி யோகம்:

அகங்காரத்தை “நான்”, “எனது” என்கிற பாவனைகளை முழுவதுமாக நீக்குவது.

2) கர்ம யோகம்:

அனைத்து விகல்பங்களையும் (விபரீதங்களையும்) நிர்மூலம் செய்து, சத்சங்கல்ப்பங்களை மனதில் நிறுத்தி அதற்கு காரிய ரூபத்தைக் கொடுப்பது.

3) ஞான யோகம்:

புத்தியை ஆன்மாவிடம் சரணடையச் செய்தல் என்றால் “நித்ய, அநித்ய” (நிலையான, நிலையற்றவைகளை அறியும்) பகுத்தறிவை வளர்த்துக் கொள்ளுதல்.

 

4) இராஜயோகம் (யோகங்களில் ‘ராஜா’ எனப்படும் ‘ஆனாபானசதி’ தியானம்):

தேவையற்ற, மூர்க்கத் தனமான சிந்தனைகளை உடனுக்குடன் தடுத்து ஞானக்கண்ணை எழுச்சியடையச் செய்து, படிப்படியாக சமாதி நிலையை அடைத்தல்.