Select Page

“ அதிர்ஷ்டம் ”

துருஷ்டி = பார்வை

த்ரஷ்டா = பார்ப்பவர்

த்ருஷ்டம் = பார்ப்பது

அ+த்ருஷ்டம் = அதிர்ஷ்டம் = பார்க்காதது

அதிர்ஷ்டம் என்றால் “பார்க்காதது” என்று பொருளே தவிர, “பாக்கியம்” என்ற பொருள் அல்ல

காரணம் தெரிந்தால் த்ருஷ்டம்

காரணம் தெரியாவிட்டால் அதிர்ஷ்டம்

காரணம் முற்பிறவியிலும்,

காரியம் இப்பிறவியிலும் இருந்தால்,

அது சாதாரணமானவர்களுக்குத் தெரியாது.

அதுபோல்

காரணம் “மங்களகரமாக” இருந்தால் ‘அதிர்ஷ்டம்’ என்றும்,

அது ‘அமங்கலமாக’ இருந்தால் துரதிருஷ்டம் என்றும் சொல்கிறோம்.

காரணம் இல்லாமல் எக்காரியமும் எப்பொழுதும் நடக்காது.

‘அதிர்ஷ்டம்’ மற்றும் ‘துரதிருஷ்டம்’ என்பவை (வினை, விளைவு) காரண, காரிய சம்பந்தங்களால் ஏற்படுகின்றன.