பிரமிட் ஆன்மிக மன்ற இயக்கம்
பிரமிட் ஆன்மிக மன்ற இயக்கம் (PSSM) “பிரம்மர்ஷி பத்ரிஜி” அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. புதிய உலகை நிர்மாணிக்க தற்சமயம் உருவாகியுள்ள ஆன்மிக இயக்கங்களில் ‘PSSM’ ஒன்றாகும்.
இந்த இயக்கத்தில் சாதாரண கிராமத்தில் வாழ்பவர்களுக்கும், நகரத்தில் உள்ள மக்களுக்கும் அறிவியல் வழியில் தியானம் கற்பிக்கப்படுகின்றது. முதன் முறையாக பிரமிட் சக்தியும், தியானமும் வியக்கத்தக்க வகையில் இணைக்கப்பட்டுள்ளன.
அருமருந்தான, ஆன்மிக பாடத்தை புகட்டிக்கொண்டு சரியான எளிய முறை தியானத்தை இலவசமாக பாமரமக்களுக்கும்… போதித்துக் கொண்டு வரும் ஒரு மகத்தான ஆன்மிக அமைப்பு தான் “பிரமிட் ஆன்மிக மன்ற இயக்கம்”. (The Pyramid Spiritual Societies Movement) இந்தியாவிலும், பிற நாடுகளிலும் இயங்கி வரும் 5000 த்திற்கும் மேற்பட்ட மன்றங்களின் மூலமாக இந்த அரிய ஆன்மிகப் பணி 1991 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆந்திர மாநிலத்திலும், ஏனைய மாநிலங்களிலும் ‘பிரமிட்’ எனப்படும் கூம்பு கோபுரங்கள் தியானத்திற்கென்றே கட்டப்பட்டிருக்கின்றன.
ஸ்தாபகர்
1990 – ஆம் ஆண்டு தனி நபராக ஆன்மிகப் பாடத்தை சிலருக்கு போதித்து, வெற்றி கண்டு, “பிரமிட் ஆன்மிக மன்றம்” என்ற இயக்கத்தை தொடங்கியவர் தான், “பிரம்மர்ஷி சுபாஷ் பத்ரி” எனும் ஆன்மிக விஞ்ஞானி.
“பத்ரிஜி” என்று வாஞ்சையுடன் அழைக்கபடும் “பிரம்மர்ஷி பத்ரிஜி” அவர்கள் 1976-ஆம் ஆண்டிலிருந்து 1979-ஆம் ஆண்டு வரை, ஆயிரக்கணக்கான ஆன்மிகப் புத்தகங்களைக் கற்றறிந்து, மெய்ஞானம் பெற்றவர். விவசாயப் பாடத்தில் முதுகலைப்பட்டதாரி, மிகப் பெரிய ஒரு ஸ்தாபனத்தில், “சாயில் சயின்டிஸ்ட்” ஆக வேலை பார்த்து, ஆன்மிக அழைப்பினால் 1992-ல் ராஜினாமா செய்து, ஆன்மிகப் பணியில் தன்னை முழமையாக ஈடுபடுத்திக் கொண்ட இவர், ஒரு குடும்பஸ்தர். மனைவி இரு பெண் மக்கள் – எல்லோரும் தியான மாஸ்டர்கள். பிரமிட் தியானம் என்ற புதுயுக மார்க்கத்தை மக்களிடையே பரப்பி, பிரமிட்கள் பல இடங்களில் ஸ்தாபனம் செய்வித்து வெற்றி நடை போடுகிறார்.
புலால் மறுத்தலை வலியுறுத்தி, சைவ உணவு விழிப்புணர்ச்சி ஊர்வலங்கள், பல பேரணிகள் ‘PSSM’ நடத்தியுள்ளது. பலரும் இதனால் அசைவத்திலிருந்து மாறி சைவ உணவை மேற்கொள்கின்றனர்.
தோற்றம்
இந்திய தேசத்தில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டத்தில் தலைநகரான கர்நூலில், 1990-ஆம் ஆண்டு பிரமிட் ஆன்மிக மன்ற இயக்கமானது (PSSM) “கர்நூல் ஆன்மிக மன்றம்” என முதலில் “பிரம்மர்ஷி பத்ரிஜி” அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.
“ப்ரோபகார” சிந்தனையுடைய புகழ் மிக்க தொழிலதிபர் திரு.B.V. ரெட்டி அவர்களின் உதவியால் கர்நூலில் 1991-ஆம் வருடம் 30’x30′ அளவுடைய முதல் பிரமிட் கட்டப்பட்டது இதற்கு ‘புத்தா பிரமிட் தியான நிலையம்’ எனப் பெயரிடப்பட்டது. அடுத்து மூன்று நான்கு ஆண்டுகளில் ஆந்திரப் பிரதேசத்தின், ராயல்சீமா பகுதியில் உள்ள கர்நூல், அனந்தப்பூர், கடப்பா, சித்தூர் போன்ற நான்கு மாவட்டங்களின் உள்ள கிராமங்களுக்கும். நகரங்களுக்கும் இவ்வியக்கம் பரவலாக விரிவு படுத்தப்பட்டது.
தியான ஆந்திரப் பிரதேசம்
2000-ஆம் ஆண்டிற்குள் ஆந்திராவில் உள்ள அனைத்து பெரிய நகரங்களிலும் ‘ஆனாபானசதி தியானம்’ வெகு சிறப்பாக பரவியது. ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் இத்தியானத்தை பரப்ப வேண்டும் என ஒரு திட்டம் வகுக்கப்பட்டது.
ஆந்திராவின் தலைநகர், ஹைதராபாத்தில் 2004-ஆம் ஆண்டின் இறுதியில் ‘தியான ஆந்திர பிரதேஷ்’ என்ற திட்டம் அதிகார பூர்வமாக, அனைத்து ஆன்மிகப் பெருந்தகையர் மத்தியில் பிரம்மாண்ட விழாவாக நடந்தேறியது.
அத்தருணத்தில் ஆயிரக்கணக்கான கிராமங்களிலிருந்து வந்த லட்சக்கணக்கான மக்களுக்கு ‘ஆனாபானசதி’ தியானம் வெற்றிகரமக அறிமுகப் படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் ஆயிரக்கணக்கான, தியாக உணர்வுடைய முழு நேர பிரமிட் ஆசான்கள் ஆவர்.
தியான பாரதம்
ஆந்திராவில் ஆன்மிக பணி நடைபெறும் அதே வேளையில் “பிரம்மர்ஷி பத்ரிஜி”அவர்கள் அண்டை மாநிலங்களான கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் தமிழ் நாடு போன்ற மாநிலங்களிலும் தனது பணியை 1998 முதல் ஆரம்பித்தார். 2004 – ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்தமான், டில்லி, உத்ராஞ்சல், கேரளம், பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு, காஷ்மிர் போன்ற மாநிலங்களிலும் ஆன்மிகப் பணி தொடரப்பட்டது. நூற்றுக் கணக்கான பிரமிட் மாஸ்டர்கள், இம்மாநிலங்களில், ‘ஆனாபானசதி’ தியானத்தை பரப்புவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், ஆன்மிகப் புரட்சியே நாடெங்கும் பரவியது. “பிரமிட் மாஸ்டர்கள் 2008- ஆம் ஆண்டிற்குள் ‘ஆனாபானசதி’ தியானத்தை நாடெங்கும் அறிமுகப்படுத்த வேண்டும்” எனத் திட்டமிடப்பட்டது.
தியான பூமி
முதன் முறையாக வெளிநாடுகளுக்கு 1999-ஆம் ஆண்டு ‘பிரம்மர்ஷி பத்ரிஜி’ பயணமானார். அப்பொழுது சிங்கப்பூர், ஹாங்காங்கில் இருவார தியான வகுப்புகளை நடத்தினார்.
♦ 2000 – 2002 ஆம் ஆண்டுகளில் நேபாலின் தலைநகரமான ‘காத்மண்டுவில்’ பல தியான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
♦ 2004 – ஆம் ஆண்டு அமெரிக்காவில் பத்து மாநிலங்களுக்கு 60-நாட்கள் பயணத்தை ‘பிரம்மர்ஷி பத்ரிஜி’ அவர்கள் மேற்கொண்டு பல தியான நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.
♦ 2005 – ஆம் ஆண்டு நாற்பது பிரமிட் மாஸ்டர்களுடன் பத்ரிஜி அவர்கள் இலங்கைக்குச் சென்று ஒரு வார கால தியான நிகழ்ச்சியை மேற்கொண்டார்.
♦ 2006 – ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன், சிட்னி போன்ற நகரங்களில் ‘பிரம்மர்ஷி பத்ரிஜி’ அவர்களும் இரு பிரமிட் மாஸ்டர்களும் சேர்ந்து பல தியான நிகழ்ச்சிகளை நடத்தினர்.
♦ 2007 – ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் ‘பிரம்மர்ஷி பத்ரிஜி’ அவர்களும், பதினேழு பிரமிட் மாஸ்டர்களும் பூடானில் உள்ள ‘திம்பு’ வில் தியான வகுப்புகளை நடத்தினார்கள்.
♦ 2008 – டிசம்பர் மாதத்தில் துபாயில் ஆன்மிக பயிற்சி வகுப்புகள் நடத்தி ‘துபாய் பிரமிட் ஆன்மிக மன்றம்’ துவங்க ஆரம்ப வேலைகள் நடந்தன.
♦ 2012 – ஆம் ஆண்டுற்குள் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் ‘ஆனாபானசதி’ தியானத்தை அறிமுகப்படுத்தி தியான பூமியை நிமாணிக்க வேண்டும் என்பது பிரமிட் மாஸ்டர்களுக்கான திட்டமாகும். இதுவே எல்லா பிரமிட் மாஸ்டர்களின் மிகப்பெரிய கனவாகும்.
பி.கு. : ‘ஆனாபானசதி’ தியானத்தைக் கற்று, இடைவிடாமல் பயின்று, பிறருக்குக் கற்பித்து வரும் பிரமிட் ஆன்மிக இயக்கத்தில் இருப்பவர்க்களை “பிரமிட் மாஸ்டர்கள்” என அழைப்பது வழக்கம்.
பிரமிட் ஆந்திர பிரதேசம்
பிரமிட் ஆன்மிக மன்ற இயக்கத்தின் பல முக்கிய குறிகோள்களில் ஒன்று அனைத்து இடங்களிலும் தியானத்திற்கென்றே பிரமிட் கட்ட வேண்டும் என்பதாகும் ஆந்திராவில் ஏறத்தாழ முப்பதாயிரம் கிராமங்கள் உள்ளன. 2008 – 2010க்குள் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பிரமிட் கட்ட வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.
நூற்றுக்கணக்கான பிரமிடுகள் பல கிராமங்களிலும், நகரங்களிலும் ‘ஆந்திராவில்’ தியானம் செய்வதற்கென்றே கட்டி முடித்துள்ளனர்.
பிரமிட் பாரதம் / உலகம்
அடுத்தப்படியான குறிகோள் ‘பிரமிட் பாரதம்’ ஆகும். அதாவது, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள பெரிய நகரங்களுக்கும் 2012-ஆம் ஆண்டிற்குள் தியானத்திற்கான பிரமிடுகளை கட்ட வேண்டும் என்பதாகும்.
ஏற்கனவே பல மாநிலங்களில் சிறியதும், பெரியதுமான பிரமிடுகள் வந்து விட்டன.
இறுதியான குறிக்கோள் “பிரமிட் உலகம்” என்பதாகும். அதாவது, உலகம் முழுவதும் 2016 ஆம் ஆண்டிற்குள் தியானத்திற்கான பிரமிடுகள் உருவாகியிருக்க வேண்டும். பிரமிட் ஆன்மிக இயக்கத்தின் செய்ல் பாடுகளையும், நிகழ்வுகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள ‘வெப் சைட்டுகள் துவண்கப்பட்டுள்ளன. அனைத்து விபரங்களை – யும் “www.pssmovement.org” என்ற வெப் சைட்டில் காணவும்.
“பத்ரிஜி” அவர்களின் திறமையான பயிற்சியின் கீழ், உலகத்திற்கு தியானத்தை எடுத்துச் செல்வதற்காக ஆயிரமாயிரம் பிரமிட் ஆசான்கள் தங்களை இவ்வியக்கத்திற்காக தியாகம் செய்துள்ளனர். ‘ஆனாபானசதி’ தியானத்தின் அறிவியலையும், சைவ உணவின் முக்கியத்துவத்தையும் இந்தியாவின் மூலைமுடுக்குகளிலெல்லாம் பிரமிட் ஆசான்கள் முழு முயற்சியுடன் பரப்பி கொண்டிருக்கின்றனர்.
இதனால் விரைவில் அன்பும், அமைதியும் ததும்பும் உலகம் உருவாகிவிடும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.