Select Page

“ ஆத்திகர்களில் நான்கு வகையானவர் ”

ஆத்திகர்களில் நான்கு வகையானவர்கள் இருக்கிறார்கள்:

1) மூட பக்தர்கள்

2) சிஷ்யர்கள்

3) குருமார்கள்

4) பரம குருமார்கள்

 

மனிதன் தன் ஆன்ம வளர்ச்சியில், நாத்திகத்தில் இருந்து ஆத்திகத்திற்கு வந்து பின்பு, மூட பக்தியில் முதலில் ‘பரவசம்’ அடைந்து கொண்டே இருப்பான்.

‘பரவசம்’ என்றால் பிறருக்கு ‘வசப்படுபவன்’ என்று பொருள்.

ஆனால், அதன் பிறகு,

“தொடர்ந்த தியானத்தினால் ஞானம், ஞானத்தினால் முக்தி என்பது கிட்டும்”

என்றும் பரம சத்தியத்தை படிப்படியாக அறிந்து கொண்டு, தீவிர முயற்சியினால், அஷ்ட சித்திகளைப் பெற்று, பரமகுரு நிலையை அடைகிறான்.

இந்த நிலையை அடைந்தவர்களை, சாதாரண ஆத்திகர்களும், பக்தர்களும் “தெய்வம்” என்று கூறுகிறார்கள்.

திவ்ய தத்துவத்தை அறிந்த மனிதனே ‘தெய்வம்’. “திவ்யம்” எனும் பதத்திலிருந்து வந்திருப்பது “தெய்வம்” எனும் பதம்.

பரம குருக்கள் அனைவரும் ‘தெய்வங்களே’.