Select Page

“ ஆன்மாவின் அறிவியல் ”

      சுவாசத்தின் ஆற்றல்

      சுவாசம்தான் நம் வாழ்வு.

      சுவாசமில்லாமல் வாழ்க்கை இல்லை.

      சுவாசத்தின் ஆற்றல்தான் மிகச் சிறந்த ஆற்றல்.

      செடிகள், மரங்கள், விலங்குகள், மனிதர்கள் போன்ற எல்லோருக்கும் சக்தி தேவை. அச்சக்தி சுவாசத்தின் ஆற்றலாகும். இந்த சுவாசத்தின் ஆற்றல் குறிப்பாக மனிதவர்க்கத்திற்கு, ஆன்மிக முன்னேற்றத்திற்குப் பெரிதும் தேவைப்படுகின்றது.

      ஆனால், இந்த சுவாசத்தின் ஆற்றலை எவ்வாறு தெரிந்து கொள்வது ? இதன் சிறப்பை எவ்வாறு புரிந்து கொள்வது   ? அதற்கு, அச்சுவாசத்துடன் ஒன்றியிருத்தல் என்ற ஒரே வழிதான் உள்ளது.

எளிமையான சுவாசம்

      சுவாசத்தின் ஆற்றலை அனுபவிப்பதற்கு, சுவாசத்துடன் இணைந்திருக்க வேண்டும். ஆனால் எப்படி? அதற்கான முறை இதுதான். நீண்ட அல்லது குறைந்த சுவாசம் செய்யாது, இயல்பான, எளிமையான, சுகமான சுவாசத்துடன் இருக்க வேண்டும்.

      நாம் இயல்பான, எளிமையான, சுகமான சுவாசத்துடன் இருக்கும்பொழுது, நமது மனம் தானாக வெற்றிடமாகின்றது. மனம் வெற்றிடமாகும் பொழுது, நாம் அபரிமிதமான பிரபஞ்ச சக்தியைப் பெறுகின்றோம். விரைவில், மூன்றாம் கண் என்பது இயக்கம் பெற்று, நம்மில் பொதிந்திருக்கும் சக்தி வெளிப்படுகின்றது.

தியானத்தின் அறிவியல்

          நம் முகத்தில் உள்ள இரண்டு கண்கள் போல், நம்முள் மூன்றாம் கண் என்று ஒன்று உண்டு. அதேபோல் நம் உடல் போல், சூட்சும உடல் என்ற ஒன்றும் உண்டு. இவற்றையெல்லாம் நாம் சுவாசத்தின் மூலம் புரிந்து கொள்கின்றோம்.

          நம் கவனத்தை முறையாகத் தொடர்ந்து சுவாசத்தின் மீது செலுத்தும்பொழுது, அது தியானமாகின்றது. இவ்வாறு தொடர்ந்து தியானத்தில் ஈடுபடும்பொழுது, தியான அறிவியலின் மகத்துவத்தை நாம் புரிந்து கொள்கின்றோம்.

 

ஆன்மாவின் அறிவியல்

          தியானத்தின் மூலம் நம்முடைய கடந்த காலம் மற்றும் எதிர்வரும் காலங்களையும் அறியலாம். இதிலிருந்து, பல பிறவிகளில் நாம் அநேக உடல்களைத் தாங்கி வந்துள்ளோம் என்பதையும், அநேக அனுபவங்களைப் பெற்று வந்துள்ளோம் என்பதையும் புரிந்து கொள்வோம்.

          இறுதியாக, நாம் என்பது இந்த உடல் அல்ல; நாம் ஆத்மா என்று அறிகின்றோம். ’அயமாத்மா பிரம்மா’, ’அஹம் பிரம்மாஸ்மி’, ’தத்வமஸி’ போன்றவற்றைப் புரிந்து கொள்கின்றோம். அதாவது, ’எல்லாமும் நாம்தான்’ மற்றும் ’நாம் அழிவற்ற ஆன்மாக்கள்’ போன்ற கோட்பாடுகளைப் புரிந்து கொள்கின்றோம்.

          இவை போன்ற அனைத்துக் கோட்பாடுகளையும் உள்ளடக்கியதே ’ஆன்மாவின் அறிவியல்’ ஆகும்.

ஆன்மிகம்

          சுவாசத்தின் மூலம் ’தியான சாஸ்திரத்தையும்’, தியான சாஸ்திரத்தின் மூலம் மட்டுமே ’ஆன்ம சாஸ்திரத்தையும்’ புரிந்து கொள்கின்றோம்.

          ஆன்மிக அறிவியலை நன்கு தெளிவாகப் புரிந்து கொண்ட பிறகுதான், நாம் எப்படிப் பேசுவது, எப்படி உண்பது, எப்படி உணர்வது, எப்படித் தொடுவது, எப்படி நடப்பது போன்ற நம் வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும், ஒவ்வொன்றாகப் புரிந்து கொள்கின்றோம். இதுதான் ஞானம் அடைதல் அல்லது ஆன்மிகம் என்கின்றோம்.

மதம் (RELIGION)

                Religion என்பது religate அதாவது re-unite  என்ற பொருளுடையது. இப்பொழுது, நாம் எல்லா மதங்களின் சிறப்புத் தன்மையைப் பற்றி நன்கு புரிந்துள்ளோம். நாம் உலகத்தில் உள்ள எல்லா மதங்களுடன் ஒன்றிணைந்துவிட்டோம். எல்லா மதங்களும் ’ஆன்மாவின் அறிவியல்’ என்பதைத்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ஆன்ம அனுபவத்திலிருந்து, நமக்கென்று எந்தக் கட்டுப்பாடுகளோ அல்லது எல்லையோ கிடையாது என்று புரிந்துக் கொள்கின்றோம்.

 ஆன்ம தத்துவத்தை அனுபவிப்பதற்கு, நாம் சகோதரத் தத்துவத்தோடு ஒன்ற வேண்டும். இதுதான் இவை எல்லாவற்றின் மையக் கருத்தாகும்.