Select Page

“ ஆன்மா இனிமையாக இருக்க வேண்டும், குழந்தாய் ”

உண்ண உண்ண வேம்பும் இனிக்கும்

பாடப் பாட ராகமும் மெருகேறும்

முயற்சி மனிதனை மேம்படுத்தும்

மனிதனுக்கு அசாத்தியம் என்பது ஏதும் இல்லை

மனிதனால் மலைகளை ஏற முடியும்

மனிதனால் கடல்களைக் கடக்க முடியும்

மனிதனால் நிலவில் கால் பதிக்க முடியும்

மனிதனால் தியானம் செய்ய முடியும்

மனிதனால் தவம் செய்ய முடியும்

மனிதனால் ‘மூன்றாம் கண்’ பெற்றவனாக மாற முடியும்

மனிதனால் தன் ஆன்ம மூலத்தை அறிய முடியும்

மனிதனால் சகல சிருஷ்டி ரகசியங்களை தரிசிக்க முடியும்

விதையில் மாமரம் மறைந்து இருப்பது போல்

மனிதனில் மாபெரும் சக்தி மறைந்து இருக்கிறது

அந்த மாபெரும் சக்தியை வெளிப்படுத்தும் மார்க்கமே

நிரந்தர சாதகம், விடாமுயற்சி, தீவிரப்பயிற்சி

சாதாரண விலங்கினங்கள் போல் வாழ்ந்தால்…

மனித வாழ்க்கைக்கு உண்மையான பொருள் இல்லை

ஆன்மாவின் மாபெரும் சக்தியை வெளிப்படுத்துவதே மனித வாழ்க்கை இலட்சியம்

சிறுதுளிதான் …. பெருவெள்ளம் – மாபெரும் கடல் ஆகும்

ஒவ்வொரு நாளும் தவறாமல் மனிதன் தியான சாதகம் செய்ய வேண்டும்

தியான சாதனையால் அனைத்து செயல்களும் புவியில் நன்றாக செயல்படும்

தியான சாதகம் செய்யச் செய்ய ஆன்ம சக்தி மேன்மேலும் பெருக்கெடுக்கும்

ஆன்மா அமுதத்தைப் பருகப், ஆன்மா இனிமையாக இருக்கும்.

தியான பயிற்சி மனிதனை மேம்படுத்தும்

“ஆன்மா இனிமையாக இருக்க வேண்டும் குழந்தாய்”