என்னுடைய ஆன்மிக வளர்ச்சி
பெளதிக காலக்கட்டம் (Physical Period)
1947 – 1970 என் வாழ்க்கையில் 23 வருடங்கள் பால்யம், இளமை கூடிய காலக்கட்டம். பெளதிக கட்டத்தில் நான் செய்த ஒரு உத்தமமான வேலை என்னவென்றால், கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டது. புல்லாங்குழலை, அற்புதமான குருவாகிய ஸ்ரீ T.S.சந்திரசேகரன் என்பவரிடம் நேர்த்தியாகக் கற்றுக் கொண்டேன். இவ்விதமாக என்னுடைய வாழ்க்கையில் ஒரு சங்கீத காலக்கட்டம் ஆரம்பமாகியது.பின்னர் அதுவே தியானத்திற்கு எவ்வாறு பயனளிக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆன்மிக பரிசோதனை காலக்கட்டம்
அதன்பிறகு 10 வருடங்கள் என்றால், 1970லிருந்து 1980 வரை, இக்காலத்தில் பெளதிக வாழ்க்கைப் போராட்டத்துடன் எனக்குள் ஆன்மிக சிந்தனை ஆரம்பித்தது. நான் எவ்வாறு வாழ வேண்டும்? எந்தப் பக்கம் செல்ல வேண்டும்? சம்பாதிக்க வேண்டுமா? எப்படி? இப்படி பல்வேறான யோசனைகள். இப்பரிசோதனையில் என்னுடைய வழி என்ன என்பதைத் தெரிந்து கொண்டேன். இதன் மூலம் என்னுடைய வாழ்க்கை லட்சியத்தை அறிந்துக் கொண்டேன். என்னுடைய வழி, “தியான வழி” என்றும், “தியான போதனையே” என் வாழ்வின் லட்சியம் என்றும் தெரிந்து கொண்டேன். இவ்வண்ணம் என்னுடைய பரிசோதனை காலக்கட்டம் நிறைவுபெற்றது.
இந்தப் பத்து வருடக் காலத்தில் என்னுடைய கர்நாடக சங்கீத சாதனை பத்மபூஷன் டாக்டர்.ஸ்ரீபாத பிநாகபாணி மூலமாக முன்னேற்றமடைந்தது. இப்பொழுதுள்ள என்னுடைய குரல் வளம் அப்போது விதைக்கப்பட்டது.
ஆன்மிக (பரி) சாதனை காலக்கட்டம்
1980லிருந்து 1990 வரையிலான 10 வருடங்கள் நான் (பரி)சாதனை காலகட்டத்தை மேற்கொண்டேன். இச்சமயத்தில் நான் நாடித் தேடிய ஆன்மிக ஞானத்தைப் பெறுவதற்காக சுமார் 50,000 புத்தகங்களைப் பயின்று அளவில்லா ஆன்மிக ஞானத்தைப் பெற்றேன். சிருஷ்டியைப் பற்றியும், சிருஷ்டி ரகசியங்களைப் பற்றியும் பூர்ணமாகத் தெரிந்து கொண்டேன். என்னுடைய லட்சியத்தை சாதிப்பதற்காக விசேஷமான முயற்சிகளை மேற்கொண்டதோடு, தொழில் செய்யவும் ஆரம்பித்தேன்.
ஆன்மிக மறுமலர்ச்சி காலக்கட்டம்
10 வருடங்கள் என்றால் 1990லிருந்து 2000 வரை ஆந்திரா மாற்றும் கர்நாடக மாநிலங்களில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டேன்.
அஹிம்சையையும், தியானத்தையும் சாமான்ய மக்களுக்குப் போதிப்பதில் ஆரம்பித்து, நிறைய “பிரமிட் ஸ்பிரிட்சுவல்” மன்றங்களை ஸ்தாபிப்பது நடைபெற்றது. நிறைய ஆசான்களை தயார் செய்து கொண்டே, என்னுடைய லட்சிய சாதனைக்குறிய வழியையும் மிகவும் சுலபமாக செய்து கொள்ள முடிந்தது. இவ்வாறு 10 வருட மறுமலர்ச்சி காலக்கட்டத்தைத் தொடர்ந்தேன்.
ஆன்மிக அதிகார காலக்கட்டம்
2010 ஜனவரி 1ல் இருந்து நாம் “அதிகார” காலக்கட்டத்தினுள் பிரவேசித்துவிட்டோம். இப்பொழுது நம்முடைய கொள்கைகளை அநேகர் ஏற்றுக் கொள்கின்றனர். நாம் சொல்கின்ற சத்திய போதனைகள் அனைத்தும் உலகம் முழுவதிலுமுள்ள பலராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
பற்பல ஆன்மிக குழுக்களை ஒரே வழியில் இணைப்பது பெரும் சாதனைதான். தியான வழிக்குள்ளும், அஹிம்சை வழிக்குள்ளும் அவைகளை அழைத்து வந்து கொண்டிருக்கிறோம். சத்தியம் மற்றும் தர்மத்தினுடைய அமோகமான சக்தியை உலகத்திற்கு எடுத்துக் கூறிகிறோம்.
அற்புதமாக அமராவதியில் 2010, டிசம்பர் 21-31 வரை நடைபெற்ற தியான மஹாசக்கரத்திற்குப் பின்னர், அதாவது 2011ல் இருந்து நம்முடைய ஆன்மிக உலகத்தில் இன்னும் பலம் பொருந்திய ஆளும் கட்சியாக வளரச் செய்வோம். சத்தியமும், தர்மமும் அடித்தளமாக நிர்மாணிக்கப்பட்டு, தியான உலகம், புலாலற்ற உலகம் (Vegetarianism), பிரமிட் உலகம், இவை, எதிர்வரும் “சத்திய யுகத்”திற்கு நம்மை அழைத்துச் செல்லும் பிரம்மாண்ட படிக்கட்டுகளாக அமையும் என்பது உறுதி.
பிரமிட் மாஸ்டர்ஸ் – Pyramid Masters
இதுபோன்ற மறுமலர்ச்சி, மாற்றங்கள் ஏற்பட இப்பூமியில் என்னுடன் சேர்ந்து ஆன்மிகப் பணியை சிரமேற்கொண்டு வருகின்ற பிரமிட் மாஸ்டர்கள் அனைவருமே சாதாரணமானவர்கள் அல்லர். எத்தனையோ பிறவிகளாக ஆன்மிகமாக உயர்ந்து, வளர்ந்து, இறுதியாக, இப்பிறவியில் நாம் அனைவரும் சேர்ந்து நம்முடைய பிறவித் திட்டங்களை பரிபூரணமாக முடித்துக் கொள்கிறோம். தியான, ஞான பிரச்சாரத்தின் மூலமாக கோடானுகோடி ஆன்ம ஜோதிகளை ஏற்றியுள்ளேன். சாந்தி ரூபங்களாக, ஒளி ரூபங்களாக பிரகாசிப்போம்.