அதிஅற்புத மூன்று நிகழ்வுகள்

ஒய்வின்றி அலைபாயும் மனதை சாந்தப்படுத்துவது தியானம். இதனை அடைய நாம் சுவாசத்தில் ஆரம்பிக்கின்றோம். நாம், நம்மில் இயல்பாக நடக்கும் சுவாசத்தில், கவனத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு, நாம் நம் சுவாசத்தில் கவனத்தைச் செலுத்தும்போழுது, மனதின் அழுத்தம் படிப்படியாகக் குறைகின்றது. பின்பு, மனம், விரைவாக வெற்றிடமாகும்.

முதலாம் நிகழ்வு

நாம் நம்மில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இயல்பான, எளிமையான, சாதாரணமான சுவாசத்தோடு இணைந்திருக்கும்பொழுது மனம் வெற்றிடமாகின்றது.

இரண்டாம் நிகழ்வு

மனமானது வெற்றிடமாகும்பொழுது, அளவற்ற பிரபஞ்ச சக்தி நம் உடலில் பாய்ந்து, உடலை தூய்மையாக்குகின்றது.

மூன்றாம் நிகழ்வு

தேவையான அளவு பிரபஞ்ச சக்தி நம் உடலில் பாய்ந்து, உச்ச நிலையை அடையும்பொழுது, “நம் மூன்றாம் கண் திறப்பு” நிகழ்கின்றது.