பிரமிட் ஆன்மிக மன்ற ஆசான்களை வழிநடத்தும் 18 கொள்கைகள்

புதுயுக ஆன்மிகத்தை, அதன் விஞ்ஞானத்தை, பிரமிட் ஆசான்களை வழிநடத்தும் 18 கொள்கைக்களை இவ்வுலகத்திற்கு வழிகாட்டுகிறது, பிரமிட் ஆன்மிக மன்ற இயக்கம். பிரமிட் ஆசானகள் அனைவரும் இந்த 18 கொள்கைகளுக்கு ஏற்றவாறு தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இவ்வுலகத்திற்கு முன்னோடிகளாக திகழ்கிறார்கள். “தியான உலகம் நிறைவேற்றுவதற்கு ஆயத்தமாகும் இத்தருணத்தில் ஒருமுறை இதைப்பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோமாக!”.

1)

சரியான முறையில் தியானம் செய்யவும். அதாவது “ஆனாபானசதி” தியானம். மற்றவர்களுக்கும் ஆனாபானசதி தியானத்தை கற்பிக்கவும். கஷ்டமான ஆசனங்களையும் பிராணயாமா போன்ற மூச்சிப்பயிற்சி முறைகளையும் மேற்கொள்ளக் கூடாது.

வாழ்க்கையில் எதை சாதிக்க நினைத்தாலும் லட்சியத்தை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். சரியாக புரிந்து கொண்டு செய்யும் சாதனையால் பலன் கிடைக்கும். ” சுவாசத்தின் மேல் கவனம் ” எனும் தியானத்தினால் எண்ணங்கள் அற்ற நிலையை அடைந்து ஆத்ம ஞானத்தை பெற இயலும். இதுவே சரியான தியானம். இந்த தியானம் செய்யும் ஒவ்வொருவருக்கும் சத்தியம் புரியும். இதை அறிந்தவுடன் இந்த சத்தியத்தை அனைவருக்கும் சொல்லத் தோன்றும். இதையே “தியானப் பிரச்சாரம்” எனும் பெயரில் ஒவ்வொரு பிரமிட் தியானியும் செய்யும் பணியாகும்.

2)

உயர்தர, ஆன்மிகப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். உதாரணமாக ஓஷோ, லோப்சங் ராம்ப்பா, கார்லோஸ் காஸ்டிநாடா, ஜேன் ரோபர்ட்ஸ், அன்னிபெசண்ட், லிண்டா குட்மேன், தீபக் சோப்ரா மற்றும் சில்வியா ப்ரெளன் போன்ற ஆசான்களின் நூல்களை படிக்கவும்.

“சரியான ஆன்மிகப் புத்தகங்கள்” என்றால் தியானத்தினால் முழுமையடைந்த ஆன்மிக விஞ்ஞானிகளின் அனுபவங்களின் சாரம்.

பிரமிட் ஆசான்களுக்கும் “புத்தகம் படித்தல்” என்பது மிக முக்கியமானது. அன்னி பெசண்ட், லெட் பீட்டர், தியோஷோபிகல் சொஸைட்டியின் புத்தகங்கள் அதேபோல் லோப்சங் ராம்ப்பா. சுவாமி ராமா, யோகானந்த பரமஹம்சர், லிண்டா குட்மேன், ஜேன் ராபர்ட்ஸ், ரிச்ஹ்கர்ட் பாக், கார்லோஸ் காஸ்டிநாடா போன்றவர்களின் புத்தகங்கள் உலகில் மிகவும் உயர்ந்தவை.

அனைவரும் இதுபோன்ற புத்தகங்களைப் படிக்க வேண்டும். புராதன சரித்திர ஆன்மிக புத்தகங்களை சிறிது ஒதுக்கிவிட்டு, புதுயுக ஆன்மிக ஆசான்களின் புத்தகங்களை அதிகம் படிக வேண்டும். பிறரையும் படிக்க வைக்க வேண்டும்.

3)

தியான அனுபவம், ஆன்மிக ஞானம் இவற்றை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

சத்தியம் அறிந்தவர்களுடன் கூடி இருந்து அனைத்தையும் கற்க வேண்டும். பற்பல தியான அனுபவங்கள் வர நேரிடும். உடல் லேசாகி விடிவது, பளுவாகி விடுவது, பல வண்ணங்கள் தோன்றுவது, தாள முடியாத முதுகு வலி, உள்ளுக்குள் இன்னொரு தேகம் ஊஞ்சல் ஆடுவதுபோல் அனுபவம், எங்கேயோ பறந்து செல்வது போல் இருப்பது, புல்வெளிகள், மலைகள் போன்ற பல இயற்கை காட்சிகளை காண்பது, குருமார்கள் தென்படுவது போன்ற அனுபவங்கள் இருக்கும். அவர்களிடம் நாம் உரையாடி உபதேசங்களைப் பெற வேண்டும்.

இதுமட்டுமின்றி, மூத்த ஆசான்கள், தியான சாதகத்தால் வாழ்க்கையில் பெற்ற மாறுதல்கள், மருந்துகளை புறக்கணித்தது, தீயப்பழக்கங்களை போக்கிக் கொண்டது, அவர்களுக்கு வந்த நல்ல எண்ணங்கள், வாழ்க்கை சுமுகமாக எப்படி மாறியது போன்றவைகளை அறிய வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் வந்த மாற்றங்களைக் கேட்பதுகூட சத்தியத்தை அறிந்து கொள்வதே ஆகும். தியானம் எவ்வளவு முக்கியமோ, புத்தகங்கள் படிப்படி எவ்வளவு முக்கியமோ, சத்தியத்தை அறிதலும் அவ்வளவு முக்கியமே.

4)

தினமும் எவ்வளவு நேரம் இயலுமோ, அவ்வளவு நேரம் மெளனத்தில் கழிக்க வேண்டும். உலகாய வம்பு பேச்சுகளை ஒருபொழுதும் பேசக்கூடாடு.

எல்லோரும் கட்டாயமாக மெளனத்தை கடைப்பிடிக்க வேண்டும். “தியான சாதகம்” எவ்வளவு செய்கிறோமோ, அவ்வளவு “மெளன சாதனை” வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை செய்ய வேண்டும்.

ஒருநாளில் சில மணிநேரம் இரண்டு மூன்று, நான்கு மணி நேரம் விழிப்புடன் மெளன சாதனை செய்ய வேண்டும். மெளனத்தைப் பற்றி மெளனமாக இருந்தால்தான் புரியும். தியானத்தைப் பற்றி தியானம் செய்தால்தான் தெரியும். மெளனத்தில் அபாரமான சக்தியை விரயமாகாமல் சேமித்து கொள்ளலாம். நாம் இயல்பாகப் பேசும்பொழுது எத்தனை வீண் பேச்சு பேசுகிறோம் என்பது புரியும்.

5)

பெளர்ணமி இரவுகளை ஆழ்நிலை தியானத்திற்குப் பயன்ப்படுத்தவும்.

பூமியில் விஸ்வசக்தி அதிகம் இருக்கும் பெளர்ணமி நாட்களை விசேஷமான தியானத்திற்காக உபயோகித்து கொண்டால், அதேயளவில் தியான அனுபவங்களை பெற இயலும். முடிந்தவரை பெளர்ணமி இரவில் இயற்கையோடு ஒருங்கிணைந்து தியானம் செய்தால், அது மூன்று மடங்கு அதிக சக்தி வாய்ந்த தியானம் ஆகும்.

6)

பிரமிட் சக்தியை தியானத்திற்காக பயன்படுத்த வேண்டும்.

நம் ஒவ்வொருவரில் இருக்கும் அபரிமிதமான சக்திகள் வெளிப்படுத்தும் கருவியாக ‘பிரமிட்’ அமைகிறது. தியானத்தில் உன்னதநிலை அடைய விரும்புபவர்கள், பிரமிடை பரிசீலித்து, ஆராய்ந்து அதை உபயோகிக்க வேண்டும்.

எகிப்தில் “கிரேட் கீசா பிரமிட்” எனும் அற்புதத்தை மேலுலகவாசிகள் தியானத்திற்காகவே கட்டினார்கள். கர்னூலில் இருக்கும் “புத்தா பிரமிட்” நம் நாட்டின் முதல் பிரமிட் தியான மையம். இதற்கு பின் எத்தனையோ பிரமிட்கள் உருவாகின. பிரமிடையே தொப்பியாக (cap) செய்து தலைமேல் அணிந்து தியானம் செய்யலாம். வீட்டு மனையின் மேல் “Roof Top” பிரமிட்களை கட்டிக் கொள்ளலாம். வரும் நாட்களில் மந்திரங்களோ, ஆலயங்களோ, மசூதிகளோ இருக்காது. கூட்டு தியானம் செய்வதற்கு பிரமிட்கள் இருக்கும். எவ்வளவு விரைவாக பிரமிட் கலாச்சாரத்தில் நுழைகிறோமோ அவ்வளவு விரைவாக நாம் ஆன்மிக விஞ்ஞானிகள் ஆகிவிடுவோம்.

7)

எல்லா மருந்துகளையும் கைவிடவும். தியான சக்தி மட்டுமே குணப்படுத்தவல்லது.

ஏதேனும் நோய் வந்தால் தத்தம் ஆன்ம சக்தியை பயன்படுத்தி குணப்படுத்திக் கொள்ள வேண்டும். “பவரோகம்” என்பது எல்லா நோய்களையும் விடப்பெரியது. இதைப்போக்கிக் கொள்ள நினைக்கும் சாதகர்கள் தம் ஒவ்வொரு அசைவிலும், உட்கொள்ளும் உணவிலும், தம் சுற்றுப்புற சூழலையும் சரியாக புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்வார்கள்.

எல்லா உடல் உபாதைகளையும் நம் மெய்ஞானத்ததோடு குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றலை நாம் பெற்றிருந்தால், மருந்துகளின்மேல், அதிலும் அலோபதி மருந்துகளின் மேல் தியானிகள் சார்ந்திருக்க மாட்டார்கள். ஒவ்வொரு சிறிய உபாதைகளுக்கும் மருத்துவர்கள், மருந்துகள்மேல் சாராமல் தன் சுய தியான சக்தியின் மேல் நம்பிக்கை வைத்து, பிறரையும் அதைப்போல் உருவாக்குவதுதான் உண்மையான சமூக சேவை. இதில் அனைத்து பிரமிட் தியானிகளும் சிறந்தவர்கள்.

8)

முட்டை மற்றும் புலாலை முற்றும் தவிர்த்து சைவ உணவை மேற்கொள்ளவும் பசித்து புசிக்கவும்.

“சைவ உணவுக்கு மாறாமல் எவரும் ஆன்ம ஞானம் பெற இயலாது”. ஆகையால் புலால் உணவை தவிர்ப்பது நம் முதற்கண் கடமை. முட்டை சைவமா அல்லது அசைவமா என்று கேட்பார்கள். செடிகளிலிருந்து வந்தவை சைவம். விலங்குகளிலிருந்து வந்தவை அசைவம். ஆகையால் முட்டை முழுவதுமாக அசைவமே. தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

எந்த விலங்கும் மனிதனின் உணவுக்காகப் பிறப்பதில்லை. அவை தனக்காகவும் தன் சுய வளர்ச்சிக்காகவும் பிறக்கின்றன. அதனை பாதுகாக்க வேண்டியது மனிதனின் கடமை. விலங்குகளை தன் இளைய சகோதரர்களைப் போல நினைத்து அவற்றை பராமரிக்க வேண்டுமே தவிர விலங்குகளைக் கொன்று தின்னக்கூடாது. மரங்களை வளர்த்து, சைவ உணவை உட்கொண்டு விலங்குகளுடன் இணக்கம் கொண்டிருந்தால் சுற்றுபுறச் சூழலுக்கும், இயற்கை வளத்திற்கும், மனித செளபாகியத்திற்கும், உலக அமைதிக்கும் மிகச் சிறந்ததாகும்.

9)

காடுகள், புல்வெளிகள், நதிகள், மலைகள் மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் கொண்ட எழில்மிக்க இடங்களில் அதிகநேரம் செலவிடவும்.

இயற்கை – ஆண்பால், பெண்பால் – இவ்விரண்டும் அடிப்படை சத்தியங்கள் இயற்கையுடன் ஒன்றிணைந்து இருப்பது மிகுந்த ஆற்றலைத் தரும். இதனால் “தான்” என்னும் அகங்காரம் ஆடவரில் அதிகம் இருப்பதால் தன்னை மறந்து இயற்கையில் ஒன்றி இருக்க மறுக்கிறான். இதை போக்கிக் கொண்டால், இயற்கையோடு ஒன்றிணைந்து விடலாம். இயற்கையோடு கூடுதலாக ஒன்றிணைந்தால் ‘தான்’ எனும் அகங்காரத்தைப் போக்கிக் கொள்ள இயலும். ஆகையால் தியானிகள் அனைவரும் காடுகளில், மலைகளில், புல்வெளிகளின் அருகில் பெரும்பாலும் வாழ முயல வேண்டும். பெளர்ணமி நாட்களில் வனங்களில் டிரக்கிங் மிகவும் முக்கியம். அங்கு கூட்டு தியானம் செய்து மிகவும் அவசியம்.

10)

ஆன்மிக வஸ்திரம் தரிப்பதையோ, ஆன்மிக முத்திரை உடலில் குத்திக்கொள்வதையோ, வைதிக சடங்குகள் செய்வதையோ தவிர்க்கவும்.

“காவி உடை, வெள்ளை உடை அல்லது இவ்வித ஆடைதான் அணிய வேண்டும்” எனும் கலாச்சாரம் ஆன்மிக சாஸ்திரத்தில் வெறிச்செயலாகும்.

ஆன்மிக வாழ்விற்கும், பொது வாழ்விற்கும் நடுவில் இருக்கும் இடையூறுக்கு இவ்வித மூடத்தனமான வெறிச் செயலான பண்பாடுகளே காரணம். ஒரு மனிதன் தன்னைத்தான் அறிந்து கொள்ளும் வழியில் ‘தான் இப்படிப்பட்டவன்’ என்று வெளிப்படுத்தத் தேவையில்லை. தன் சுயசாதனை இருக்க வேண்டும். தியானிகள் இல்லற வாழ்வில் இருந்தவாறே இச்சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக இருப்பார்கள். இவர்களுக்கு எந்தவித “Dress Code”ம் அவசியமில்லை.

இதைப்போல் தான் வைதிக சடங்குகளும் இறந்தவர்கள் அசாந்தியுடன் இருப்பார்கள் என்று அவர்களுக்காக இங்கு ‘காரியம்’ செய்கின்றோம். அவர்கள் சாந்தியுடன் இருக்கிறார்களா, இல்லை அசாந்தியுடன் இருக்கிறார்களா என்று நமக்கெப்படி தெரியும்? நமக்கு எதுவும் தெரியாது. ஒருவேளை அவர்கள் அசாந்தியுடன் இருந்தாலும், நாம் இங்கு செய்வது அங்கு அவர்களுக்கு சேராது என்பது உண்மை. வைதிக சடங்குகள் அனைத்தும் வியாபாரமே. நம்மிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு செய்யும் லீலைகள். ஞானம் இல்லாதவர்களை வசப்படுத்திக் கொண்டு அவர்களிடம் பணம் பெறுவதற்கு இவ்வைதிக சடங்குகளை செய்விக்கிறார்கள். இதை அழிப்பதற்காகவே பிரமிட் ஆன்மிக இயக்கம் பிறந்திருக்கின்றது.

11)

சிறுவர், சிறுமியருக்கு இளம் வயதிலிருந்தே தியானப் பயிற்சியை கற்பிக்க வேண்டும்.

எல்லோருக்கும் சிறுவயதிலிருந்தே தியான பயிற்சி, மெளனத்தை கடைப்பிடித்தல், ஆன்மிக புத்தகங்கள் படித்தல், சத்தியம் தெரிந்தவர்களுடன் பழகுதல் போன்ற பயிற்சிகள் ஒவ்வொரு தியானியும் தர வேணும். இரண்டு வயதிலிருந்தே இவ்வித பயிற்சிகள் அளிக்க வேண்டும்.

ஸ்ரீ ஆஞ்சநேயரின் தாயார், அஞ்சனா தேவி ஆஞ்சநேயருக்கு இரண்டு வயதிலேயே இவையனைத்தும் கற்றுக் கொடுத்தார். இதுவே சரியான பருவம். ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது. ஆகையால் சிறு பிராயத்திலிருந்தே ஆன்மிகப் பயிற்சியை அளித்தால் இவ்வுலகம் மேன்மை அடைந்துவிடும்.

ஒவ்வொரு பள்ளிக் கூடத்திலும், கல்லூரிகளிலும் தியான பயிற்சி கண்டிப்பாக இருக்க வேண்டும். “ஆன்மிகம், ஆன்மிக விஞ்ஞானம்” என்பது கட்டாய்ப் பாடமாக்க வேண்டும்.

12)

சிஷ்யர்களாக இல்லாமல் ஆசான்களாக ஆக வேண்டும் என்ற சித்தாந்தத்தின்படி வாழ வேண்டும்.

கற்பிப்பவரிடம் இருந்து அனைத்தையும் கற்க வேண்டும், கற்க முயலுபவர்க்கு எப்படி கற்பிக்க வேண்டும் என்பதைக் கற்க வேண்டும். கற்க இயலாதவர்க்கு படிப்படியாய் கற்பது எப்படி என்று கற்க வேண்டும். ‘எல்லாவற்றையும் கற்றுவிட்டோம்’ என நினைப்பவர்க்கு இன்னும் கற்க வேண்டியது இருக்கிறது என்பதை எடுத்துரைக்கக் கற்க வேண்டும். ஒருவர் கற்பதில் ‘ஆசானாக’ விளங்குவர். மற்றொருவர் கற்பிப்பதில் ‘ஆசானாக’ விளங்குவர். குரு, சிஷ்யர் பந்தத்தில் சேவை, பலன் இருக்கும். விருப்பு, வெறுப்பு இருக்கும். பாரபட்சம், பொறாமை இருக்கும். ஆனால், “ஆசான் -ஆசான்” பந்தத்தில் கொடுக்கல், வாங்கல் இருக்கும். நட்பு, சமத்துவம் மட்டுமே இருக்கும்.

13)

தியானம் இலவசமாகக் கற்பிக்க வேண்டுமேயல்லாது பணம் வசூலிக்கலாகாது.

அவரவர் தொழிலை கவனித்து, தேவையான பணத்தை சம்பாதித்துக் கொண்டு, தியானத்தை மட்டும் இலவசமாக கற்பிக்க வேண்டும்.

விறகை வெட்டுபவர்கள், விறகை வெட்டி வாழ வேண்டும். பின் தியானத்தை கற்பிக்க வேண்டும்.

யாசிப்பவர்கள், யாசித்து வாழ வேண்டும். தியானத்தை கற்பிக்க வேண்டும்.

கெளதம புத்தரும் யாசித்தார், தன் உணவுத் தேவைக்காக. பின் ஆன்மாவுக்கு வேண்டும் தியானப் பயிற்சியை எல்லோருக்கும் போதித்தார். தன் பசிக்காக உணவை வேண்டினார்.

நாம் யாரிடமிருந்தும் பணத்தை வசூலிக்க கூடாது. சில ஆன்மிக மன்றங்கள் பணத்தை பெற்றால் மட்டுமே அவர்களுக்கு தியானத்தின் மதிப்பு தெரியும் என பணத்தை பெறுகிறார்கள். இது சரியான முறை அல்ல. பணத்தை ஒருபொழுதும் பெறக்கூடாது. பணத்திற்கு அப்பாற்பட்டது தியானம் – ஆன்மிகம்.

14)

கடவுள் அல்லது வாழும் குருமார்கள் இவர்களின் சிலை வழிபாட்டில் ஈடுபடக் கூடாது.

“சிலை வழிபாடு உயர்ந்தது அல்ல, தாழ்ந்தது” என்றார், ‘ஆர்ய சமாஜ ஸ்தாபகர் ஸ்வாமி தயானந்த சரஸ்வதி’. ஆகையால் சிலை வழிபாடுகள், குரு ஆராதனை, அவர்கள் காலை வணங்குவது இவையனைத்தும் வீண் செயல். அதேபோல், குருமார்களிடம் ஆசிபெறுவது, அவர்கள் கால்களை கழுவி, அந்த ஜலத்தை தலைமேல் தெளிப்பது, இவையனைத்தும் தேவையற்ற செயல்கள் என்பதால் விட்டுவிட வேண்டும். ஆலயங்களில் கட்டாயமாக தியான கல்வியை கற்பிக்க வேண்டும்.

15)

அவரவர் சொந்த பிரச்சனைக்கு தீர்வுகாண அவரவர் தியானசக்தி, ஆன்மிக ஞானம் இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அவரவர் பிரச்சனைகளுக்கு அவரவரே தீர்வு காணும் சக்தி அவரவருக்கே இருக்கிறது. அளவில்லா சக்தி நம்மிடம் இருக்கிறது என்பதை ‘தியானம்’, ‘ஸ்வாத்யாயம்’ (ஆன்மிகப் புத்தகங்கள் படித்தறிதல்) மூலமாக அறிந்து நாம் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். மேலுலகவாசிகள் யாரும் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயலாது.

16)

சன்னியாசமோ அல்லது துறவறமோ மேற்கொள்ளாமல் இயல்பான இல்வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்.

கணவன் – மனைவியாய், நன்றாக இல்லற வாழ்வை அனுபவிக்க வேண்டும். சிருஷ்டியில் இருக்கும் அற்புதங்களை, விசித்திரங்களை மற்றும் அழகை ரசித்து அனுபவித்துக் கொண்டு எல்லோரும் குடும்பஸ்தர்களாக இருக்க வேண்டும். ‘ஆண், பெண்’ உறவோடு வாழ்க்கையை அனுபவித்து வாழ வேன்ன்டும். ‘காமி’ ஆகாதவன் “மோட்ச காமி” ஆக மாட்டான் என்பது சான்றோர் வாக்கு.

17)

எல்லா கிராமங்களிலும், ஊர்களிலும் தியான மன்றங்களும், பிரமிட்டுகளும் ஸ்தாபிக்க வேண்டும்.

பகிர்ந்து கொள்ளுதல் இல்லாவிட்டால் பிரபஞ்சமே சூன்யம்

‘தியானம்’ செய்யாவிட்டால் ‘வியாதி’. ‘தியானம்’ செய்தல் ‘போகம்’. நோயுடன் இருக்கும் வாழ்க்கையை, போகத்துடன் இருக்கும் வாழ்க்கையாக மாற்றி கொள்ள வேண்டும். போகத்துடன் இருக்கும் வாழ்க்கையை வைபோகத்துடன் இருக்கும் வாழ்க்கையாக மாற்றிக் கொள்ள வேண்டும். வைபோகத்தைப் பெற வேண்டும் என்றால், விசேஷமாக “தியானப் பிரச்சாரம்” செய்ய வேண்டும். ‘தியான வாழ்க்கை’ அனைவருக்கும் அளித்தால் வைபோகமே. ஆகையால் ஒவ்வொரு ஊரிலும் , கிராமப்புறங்களிலும், பிரமிட் ஆன்மிக மன்றங்களை நிறுவ வேண்டும். இது ஒவ்வொரு பிரமிட் தியானியின் பொறுப்பு.

18)

தமக்குக் கிடைக்கபெற்ற தியான அனுபவங்களையும், ஆன்மிக வழியில் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் பிரசுரிக்க வேண்டும். இதன் வாயிலாக கூடிய சீக்கிரமே சுவர்ண யுகத்தைத் ஸ்தாபிக்க ஏதுவாக இருத்தல் வேண்டும்.

ஒவ்வொருவரும் தம் தியன அனுபவங்களை எழுத வேண்டும். சுய அனுபவங்களை எழுதி பிரசுரிக்க வேண்டும். துண்டு பிரசுரங்களாகக் கொடுக்க வேண்டும். எல்லாமே தெளிவுற, வெளிப்படையாக எழுதப்பட வேண்டும். சர். ஃபிரான்சிஸ் பேக்கன் கூறினார், “படித்தல் ஒரு முழு மனிதனை உருவாக்கும். மற்றவர்களுடன் ஒரு தயாரான மனிதனை உருவாக்கும் மற்றும் எழுதுவது (Exact) மனிதனை உருவாக்கும்” என்று கூறினார். ஆகையால் பிரமிட் ஆசான்கள் அனைவரும் அவரவர் தியான அனுபவங்களை எழுதி பிரசுரித்து அந்த ஞானத்தைப் பரப்ப வேண்டும்.