Select Page

கை நிறைய வேலை = கண்ணிறையத் தூக்கம்

கை நிறைய வேலை = உடல் நிறைய ஆரோக்கியம்

கை நிறைய வேலை = மணம் நிறைய அமைதி

கை நிறைய வேலை = புத்தி நிறையப் புதுப்பொலிவு

கை நிறைய வேலை = ஆன்மா முழுவதும் திருப்தி

கைகளை மூடி

வேலை செய்யாமல் உண்டு உட்காருவது ’தமோ குணம்’. இந்த வேலை நாளை செய்கிறேன் என்பது, என்னால் எப்படி இந்த வேலையை செய்ய முடியும் என்பது, கடவுள் எப்பொழுது நினைக்கிறாரோ அப்பொழுது அது நடக்கும் என்று நினைத்துப் புலம்புவது ’தமோ குணம்’.

அப்படி அல்லாமல்

கைநிறைய விதவிதமான வேலைகளை வைத்துக் கொள்வது ’ரஜோ குணம்’. எப்பொழுதும் விதவிதமான பிரபஞ்ச வேலைகளில் மூழ்கியிருப்பது ’ரஜோ குணம்’.

ஆனால்

                விதவிதமான பிரபஞ்ச வேலையுடன் சேர்த்து அனைவருக்கும் லாவகமாகயிருக்கும் வேலையையும் செய்வது ’சாத்வீக குணம்’.

எல்லோருக்கும் நலம் பயக்கும் பணிகளைச் செய்வது ’சாத்வீக குணம்’.

எத்தனை வேலைகள் செய்தாலும் ’எல்லாம் சூன்யம்’ எனும் விழிப்புணர்வுடன் எப்போதும் இருப்பது ’நிர்க்குணம்’.

’நான் சூன்யம்’, ’எல்லோரும் சூன்யமே’ என்பதைத் தெரிந்து கொள்வதே ’நிர்க்குணம்’.

தேஜோ குணம்

’ரஜோ குணம் + சாத்வீக குணம் = தேஜோ குணம்”

நாளைய வேலைகளையும் இப்பொழுதே செய்கிறேன் என்பது ’தேஜோ குணம்’.

என்னால் முடியாத நல்ல வேலைகள் எதுவும் இந்த சிருஷ்டியில் இல்லை என்பது – தேஜோ குணம்.

நான் கடவுள் – எதுவானாலும் சரி – எவ்வளவானாலும் சரி – சுலபமாகச் செய்வேன் என்பது – தேஜோ குணம்.

தேஜோ குணம் ஜிந்தாபாத்!

தேஜோ குணவான்கள்

அனைவருக்குள்ளும் ’ஆன்ம தேஜஸை’ முழுமையாக நிரப்பும் பணிகளே ’பிரமிட் ஆன்மிக மன்ற இயக்கம்’ செய்யும் பணிகள்.

பிரமிட் ஆசான்கள் அனைவரும் ’தேஜோ குணவான்கள்’. ஒருபக்கம் நிர்க்குணவானாக, மறுபக்கம் ’தேஜோ குணவானாக’ அற்புதமான நடுநிலையிலிருந்து அனைத்து பெளதிக ஆன்மிகப் பணிகளைச் செய்பவர்களே பிரமிட் ஆசான்கள்!

பிரமிட் ஆசான்கள்

கணநேரமும் ஒய்வெடுக்காதவர்கள். அவர்கள் எப்போதும் புன்னகையுடன் இருப்பவர்கள், ’அபார வித்யையில் உயர்ந்தவர்கள், நிரந்தர உழைப்பாளிகள், அனைத்துச் சூழ்நிலைகளிலும் நிம்மதியாக இருப்பவர்கள். எல்லாச் சூழ்நிலைகளையும் ஆன்மிக வழியில் வெற்றிகாணும் ஞானதிட்டவான்கள் பிரமிட் ஆசான்கள்!